லக்னோவில் பிறந்திருந்தாலும் முழுக்க முழுக்க நம் அடுத்த வீட்டுப் பெண்ணாக அனைவரின் மனதிலும் நறுமணமாக நிறைந்துள்ளார் மலர் நாயகி பிரீத்தி ஷர்மா. சீரியலில் நான்கு ஆண்டு காலம் இருந்தாலும், தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகும் ‘மலர்’ தொடர் மூலம் ஒவ்வொரு அம்மாக்களின் சுட்டிப் பெண்ணாக மாறியுள்ளார். அவரின் சின்னத்திரை பயணம் மற்றும் நண்பர்கள் குறித்து பகிர்ந்தார்.
‘‘நான் லக்னோவில் தான் பிறந்தேன் வளர்ந்தேன். அதன் பிறகு நாங்க எல்லாரும் கோவையில் செட்டிலாகி பத்து வருஷம் மேலாகிறது. நான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்ச நாள் முதல் சென்னைக்கு வந்துட்டேன். கடந்த நான்கு வருடமாக ஒரு சென்னைப் பெண்ணாக இந்த நகர் முழுக்க வலம் வருகிறேன். இங்கு தமிழில் மலர் தொடரில் நடிக்கிறேன். மேலும் ஐதராபாத்தில் ஒரு தெலுங்கு சீரியலில் கமிட்டாகி இருக்கேன். சென்னை.... ஐதராபாத் என்று என் வாழ்க்கை படு ஸ்பீடாக சுழன்று கொண்டு இருக்கிறது. நான் சின்னத்திரைக்கு வரக்காரணம் சமூகவலைத்தளம்தான். என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வேன். அதைப் பார்த்து சென்னையில் உள்ள சின்னத்திரை ஏஜென்சியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்ப நான் கோவையில், கல்லூரியில் முதலாம் ஆண்டு படிச்சிட்டு இருந்தேன். அவங்க போன் செய்து ஆடிஷனுக்கு வரமுடியுமான்னு கேட்டாங்க. ஆரம்பத்தில் எனக்கு இந்த துறை மேல் ஒரு வித பயம் இருந்தது. மற்றவர்களிடம் கேட்ட போது இந்த துறைப் பற்றிய தப்பான அபிப்ராயம் தான் சொன்னாங்க. ஆனாலும் போய் தான் பார்க்கலாம்னுதான் நானும் அம்மாவும் ஆடிஷனுக்கு வந்தோம்.
Esta historia es de la edición 1-15, July 2023 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 1-15, July 2023 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.
குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.