CATEGORIES
Categories
ஓடிடி தமிழ்த் திரை!
கொரோனா பேரிடர் காலத்துல உங்களையெல்லாம் எழுத்து மூலமா சந்திக்க முடியாதது வருத்தம்தான். எல்லாரும் பத்திரமா, பாது காப்பா இருக்கீங்கள்ல!
சமூக ஊடகப் போர்!
தமிழ்நாட்டில் உள்ளடங்கி இருக்கும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவர். பட்டன் போனை மட்டுமே கையாளத் தெரிந்தவர்.
மனத்தை உலுக்கிய மணப்பெண்ணின் கண்ணீர்!
காலை நேரம். கல்லூரியில் ஈனியல் துறை சிகிச்சை மையத்தில் மாடுகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் பயிற்சி மாணவர்கள். சினை ஊசி போட மாட்டை ஓட்டி வந்திருந்தார் ஒருவர்.
பிரிக்க முடியாதது எதுவோ?
பொங்கல் பாட்டாளிகளின் பண்டிகை என்றால், தீபாவளி பாமரர்களின் பண்டியல்'. ஆண்கள் பெண்கள், நண்டு, நாழி, சுண்டு சுளுவான் எல்லார் கையிலும் காசு நடமாடும் திருநாள், தீபாவளி.
இதழியல் ஆய்வாளர்!
குரும்பூர் குப்புசாமி, வேலூர் அப்துல்லா போன்ற பெயர்களில் கதாசிரியராக தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் பத்திரிகையாளர் அருணாசலம் மாரிசாமி என்ற அ.மா.சாமி. சமீபத்தில் மரணமடைந்த அவருக்கு வயது 85.
அருவக்கரையில்...
எவ்வளவு பேரிடமோ மகிழ்ச்சியான தருணங்களைக் கேட்கிறோம், ஏன் நம் ஆசிரியர் குழுவிடமே இதைக் கேட்கக் கூடாது என்று நமது நிறுவிய ஆசிரியர் இளங்கோவன் நினைத்து, ஆசிரியர் குழு நோக்கி மைக்கைத் திருப்பினார். வந்து விழுந்த சந்தோஷ தருணங்களையும் இதோ பதிவு செய்திருக்கிறோம்.
ஆளுக்கொரு கண்ணாடி!
அறமென்பது எப்போதும் நிலையானதல்ல. அது காலத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப, மனிதர்களுக்கேற்ப மாறிக்கொண்டிருப்பது என்பதைச் சொல்லும் விதமாக அத்தம் (கண்ணாடி) என்ற தெலுங்கு வெப் சீரிஸ் ஆஹா' இணைய தளத்தில் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்க தேர்தல் விசித்திரங்கள்
டொனால்ட் ட்ரம்ப் அவுட் ஆவாரா? அல்லது தொடர்ந்து ஆடுவாரா? என்ற கேள்வி, உலகம் முழுவதும் ஒலிக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து இதுவரை கண்டிராத அளவில் மக்களிடம் ஆர்வம் நிலவ காரணம் அதுதான்.
தி.ஜா. படைத்த பெண்ணுலகு!
'சம்பளம்னு கிடையாது. ரெண்டு வேளை சாப்பாடு போடுவா. தீபாவளிக்குப் பாவாடை சட்டை ஒரு ஜோடி எடுத்துக் கொடுப்பா.'
ஜானகிராமனின் : ஜப்பான்!
தி.ஜானகிராமன் தனது ஜப்பானியப் அனுபவத்தை உதயசூரியன் என்ற பெயரில் சுதேசமித்திரன் வார பயண இதழில் எழுதினார். பின்பு அது சிறிய நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது
என் அப்பா!
தந்தையின் நூற்றாண்டு விழாவில் தமிழ் வாசக உலகமே ஆர்வத்துடன் பங்கேற்பதை மகிழ்ச்சியுடன் பார்க்கிறார் மகள். ஆம்.. தி. ஜானகிராமனின் மகள் உமாசங்கரி . ஹைதராபாத்தில் வாழும் இவர் தன் தந்தையைப் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...
பசித்த வயிறும் பிள்ளப் பசுவும்!
1984 மார்ச் மாதம், மாலை 5 மணி: ஸ்கூல் முடியும் பெல் அடித்ததும் பையைத் தூக்கிக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டேன்.
முட்டிக்கொள்ளும் சசிகலாவின் முன்னாள் சகாக்கள்!
என்னை முதல்வராக அடையாளம் காட்டியது புரட்சித் தலைவி அம்மா, உங்களை முதல்வராக்கியது சசிகலா " இது ஓ.பன்னீர் முதல்வராக்கியது சசிகலா " இது ஓ.பன்னீர் செல்வத்தின் உரத்தகுரல்.
பேரன்பின் குரல்!
அது ஒரு தெலுங்குச் சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டி, தொடர்ந்து மூன்றாண்டுகள் முதற்பரிசு பெறுகிறவருக்குப் பெரிய வெள்ளிக்கோப்பையும் சேர்த்துத் தருவதாக அறிவித் திருந்தார்கள். அந்த இளைஞன் இரண்டாண்டுகள் முதல்நிலை பெற்றிருந்தான். குறிப்பிட்ட அந்த மூன்றாம் ஆண்டு, அவனை இரண்டாம் நிலைக்குரியவனாக நடுவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அந்த முடிவை அவனும் முழுமனதாக ஏற்றுக்கொண்டான்.
உண்மையான பொய்!
If you are not paying the product, then you are the product!
உயிரின் கையெழுத்து!
அழகுக்கும், காதலுக்கும் உருவம் , கொடுத்துப் பண்டைய ரோமர்களினால், பெண் தெய்வமாக வணங்கப்பட்டவள்தான் வீனஸ்'.
இந்த ஒரு ஜென்மம் போதாது!
இந்த ஸ்டூடியோவிலயும் நீ தான் எஞ்சினியரா?
'சிலிர்ப்பு': எங்கள் ஊரில் எழுதிய கதை!
சலங்கை ஒலி போல் காவிரியின் சலசலப்பு காதில் விழும். அறுவடை காலத்தில், நெல் மணம் காற்றில் தவழ்ந்து வரும். அழகான குத்தாலம் கிராமத்தில் சன்னதி தெருவில் நடுநாயகமாக இருந்தது எங்கள் வீடு!
சேம் சைடு கோல்!
சோனியா காந்தி, சோனியா காந்தியிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க, சோனியா காந்தி, சோனியா காந்தியை பதவியில் தொடரச் சொல்லி கேட்குக்கொண்டதால் சோனியா காந்தியே தொடர்கிறார். இதைப் போன்ற கொடூரமான நக்கல்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கிப் பாயும்வண்ணம் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது.
கொங்கு நாட்டுக் கவியுலகம்!
மூதறிஞர் இராசாசி யைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைப் படிக் கையில் அவர் பிறந்த ஊர் கூறப்பட்டிருக்கிறது. "அவர் சேலம் மாவட்டம் தொரப்பள்ளியில் பிறந்தார்'' என்பதே அது.
விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்!
அது ஓர் அற்புதமான அர்ரியர்ஸ் காலம். புகுமுக வகுப்பில் சயின்ஸ் குரூப்பில் சேர்த்துவிட்டு டு மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்பது அப்பாவின் ஆசை.
குதிரையின் மதிப்பு ஏழரை கோடி!
குதிரைப்பண்ணைகளில் வேலைகள் அதிகாலை ஐந்தரை மணிக்கே தொடங்கிவிடும். அன்று எனக்கு நாள் சரியில்லை போலும். இல்லையெனில் குதிரையிடம் உதை வாங்கி பத்தடி தள்ளிப்போய் விழுந்திருப்பேனா?
மினிமலிசம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வோம்!
மினிமலிசம் என்ற வார்த்தையே போது மான விளக்கத்தை கொடுத்துவிடுகிறது. ஜோஸ்வா பீல்ட்ஸ், ரியான் நிகோடிமஸ் என்ற இரு அமெரிக்க இளைஞர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவத்தைக் கொண்டு எழுதிய புத்தகம் மினிமலிசம் (Minimalism : Live a meaningful life). இந்த அனுபவத்தோடு தொடர்புடைய பலரின் கருத்துக்களையும் சேர்த்து மினிமலிசம் (Minimalism) என்ற டாகுமெண்ட்ரியும் நெட்ஃபிளிக்ஸில் கிடைக்கிறது.
பேப்பர் போட்டுட்டீங்களா?
ராஜினாமாவை 2000க்கு முன் 2000 க்கு பின் என்று பிரித்து விடலாம். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பிறகு தான் ரெஸிக்னேஷன் என்ற வார்த்தை சாதாரண வார்த்தையாக மாறியது. இதற்கு முன் அது எப்போதேனும் கேள்விப்படும் புரட்சிகர வார்த்தையாக இருந்தது.
யாருடன் பைக்கில் ஊர் சுற்றினீர்கள்?
பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் Lead SQA ஆக இருந்த நான், எனது வேலையை விட்டது செப்டம்பர் 1, 2015. எனது பிறந்தநாளில். அதற்குக் காரணம், அந்தச் சமயத்தில் சினிமாவிலும் சாஃப்ட்வேரிலும் ஒரே சமயத்தில் வேலை செய்ய முடியாததே.
புதிய கதைகளின் தோற்றுவாய்!
கேளிக்கைக்கு பெயர்போன மியாமி கடற்கரையில் அன்று ஒருவரது உடைகள் கேட்பாரற்று கிடக்கின்றன. சந்தேகத்தில் சோதித்த போலீஸிற்கு உடையிலிருந்து பாஸ்போர்ட் கிடைக்கிறது. உடைக்கு சொந்தக்காரர் பிரித்தானிய முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான ஜான் ஸ்டோன் ஹவுஸ் என்று தெரிகையில் விசாரணை தீவிரமாகிறது.
ராஜினாமா கடித ரகசியங்கள்!
''மக்களுக்கு சேவை செய்ய பதவி தடையாக இருந்தால் தூக்கி எறிவேன். ராஜினாமா கடிதம் எப்போதும் என் சட்டை பையில் இருக்கிறது!"இப்படி முழங்கி விட்டு, ஒற்றை காகிதத்தை எடுத்து உயர்த்தி காட்டுவார் தலைவர். வட்டாரத்தை அதிர வைக்கும் கரகோஷம். கடிதத்தில் என்ன எழுதி இருந்தது என்பது கடைசிவரை எவருக்கும் தெரியாது.
‘ஜேபியில் ராஜினாமா கடிதம்!'
"மணிக்கொடி ஆசிரியர் ஸ்ரீவ. ராமஸ்வாமி ஐயங்கார்'' ” பல இடங்களில் பேசியதாக பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. இது தவறு. ஸ்ரீவ. ராமஸ்வாமி ஐயங்காருக்கும் மணிக்கொடி'க்கும் இம்மாதம் 1உயிலிருந்து யாதொரு சம்மந்தமும் கிடையாதென்பதை அறிவித்துக்கொள்கிறோம். ஆசிரியர்"
காலக்கண்ணாடி மட்டுமே!
ஓரு பத்திரிகைக்கு ஆசிரியரே முதலாளியாகவும், அந்த ஆசிரியர் பெரும் இலக்கிய ரசிகராகவும், மக்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ளும் உறுதி உள்ளவராகவும் இருந்தால் திறமைமிக்க எவரையும் தனது நிறுவனத்தை விட்டு வெளியேற விட மாட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தமிழ் பத்திரிகை உலகம் வளர்ந்து வந்தது.
காளையனும் கொடுக்காப்புளியும்!
ஆரண்ய காண்டம் படத்தில் காளையன் பாத்திரம் ஞாபகம் இருக்கிறதா? குரு சோமசுந்தரம் அந்தப் பாத்திரத்தில் பின்னி எடுத்திருப்பார். அதில் அவர் அடிக்கடி தன் புத்திசாலிப் பிள்ளை கொடுக்காப்புளியிடம் சொல்லும் வசனம், “நமக்கு எங்கப்பா விடியப் போவுது?”