CATEGORIES
Categories
தமிழகத்தில் தொற்றை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு?
அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்க மருந்தில் சிக்கினார்
புதுடெல்லி கடந்த 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுமித் மாலிக், சமீபத்தில் பல்கேரியாவில் நடைபெற்ற போட்டியில் 125 கிலோ எடைப் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
கரோனா வைரஸ் வூஹானில் இருந்து வந்தது உறுதியாகிவிட்டது சீனாவுக்கு அபராதம் விதிக்க வேண்டும்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தல்
ஆறு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க ரூ.50 ஆயிரம் கோடி திட்டத்துக்கு அனுமதி
புதுடெல்லி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.
ஊரடங்கால் மூடப்பட்டுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா பாதிப்பால் பெண் சிங்கம் உயிரிழப்பு
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 சிங்கங்களுக்கு தீவிர சிகிச்சை
ரிப்பன் மாளிகையில் ‘தமிழ் வளர்க' பெயர்ப்பலகை
சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமை அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ரிப்பன் மாளிகை கட்டிடத்தில் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் மீது, தமிழக அரசின் சார்பில் தமிழ் வளர்க' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வண்ண விளக்குகளுடன் கூடிய பெயர்ப்பலகை அமைக்கப்பட்டுள்ளது.
பயாலஜிக்கல்-இ நிறுவனத்துடன் 30 கோடி தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தம்
முன்பணமாக ரூ.1,500 கோடி வழங்குகிறது மத்திய அரசு
தெருக்களில் வசிப்போருக்கு குடும்ப அட்டை - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
புதுடெல்லி: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது விநியோகத்துறை கடந்த 2-ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தற்போது 7 ஆண்டு மட்டும் செல்லத்தக்கதாக இருக்கும் - ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
கரோனா மருந்து வாங்கியதில் முறைகேடு
கவுதம் கம்பீர் அறக்கட்டளை மீது புகார்
புதுச்சேரியில் ஒரு மாதத்துக்குப் பிறகு அமைச்சரவை அமைப்பதில் ரங்கசாமியுடன் பாஜக சமரசம்
துணை முதல்வர் பதவி கைவிடப்பட்டது
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வுகால பணப் பலன்கள்
தமிழக அரசின் கீழ் செயல்படும் 8 போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து ஏராளமானோர் ஓய்வு பெற்றுள்ளனர். 2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஓய்வுபெற்ற பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு ஓய்வு கால பணப் பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
தினமும் இரவு 8 மணி வரை மட்டுமே திருப்பதி ஏழுமலையான் தரிசனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
அரிசி அட்டைதாரர்களுக்கு 2-ம் கட்ட கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம், 14 வகை மளிகை பொருட்கள்
நலத் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி - மக்கள் குரல் எழுப்ப ராகுல் வேண்டுகோள்
புதுடெல்லி: அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக நாட்டு மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாணவர்கள் உடல்நலன் விவகாரத்தில் சமரசம் செய்ய முடியாது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து
பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
மன அழுத்தம் காரணமாக பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து நவோமி ஒசாகா விலகல்
கிராண்ட் ஸ்லாம்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள நவோமி ஒசாகா தனது முதல் சுற்றில் பாட்ரிகா மரியா டிக்கை 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வீழ்த்தியிருந்தார். இந்த ஆட்டம் முடிவடைந்ததும் ஊடகங்களின் சந்திப்பில் ஒசாகா கலந்து கொள்ளவில்லை.
மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
புதுடெல்லி: கரோனா தொற்றிலிருந்து ஏற்கெனவே குணமடைந்த மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுவையில் மே மாதத்தில் 17 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கரோனா ஊரடங்கிலும் புதுச்சேரியில் மே மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 17 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி மையங்கள் மூடல் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்
தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை மத்திய அரசும் கொள்முதல் செய்து அனுப்புகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை தமிழக அரசே கொள்முதல் செய்கிறது. இந்நிலையில், தடுப்பூசிகள் இல்லாததால் நேற்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான மையங்கள் மூடப்பட்டன. இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மே.வங்க தேர்தலுக்கு பிந்தைய வன்முறை 3 பேர் குழு அமைத்தது உயர் நீதிமன்றம்
கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக 3 உறுப்பினர் குழுவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.
கரோனா பிரச்சினையை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டதாக 63% பேர் ஆதரவு
கரோனா பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக கையாண்டதாக 63 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜூலை மாத இறுதிக்குள் கோவாக்சின் உற்பத்தி 12 கோடியை எட்டும்
டாக்டர் என்.கே. அரோரா தகவல்
பாபா ராம்தேவை கண்டித்து இன்று கருப்பு தினம் அனுசரிக்க டாக்டர்கள் முடிவு
புதுடெல்லி: கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்தார். இதற்கு டாக்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, ராம்தேவுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கண்டனம் தெரிவித்த பின்னர் ராம்தேவ் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு
50 நாட்களுக்கு பிறகு கணிசமாக குறைந்தது
சென்னையில் தீவிர தூய்மைப் பணி 4 நாட்களில் 3,599 டன் கழிவு அகற்றம்
சென்னை: சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பை மற்றும் கட்டிடக் கழிவு உள்ள பகுதிகள் மண்டல வாரியாக கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கடந்த 27-ம் தேதி முதல் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், காலி இடங்களில் தேங்கியுள்ள குப்பை மற்றும் சாலைகளில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவு ஆகியவை தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன.
உலகம் சுற்றிய அதிகாரிகள்
இந்திய அயலுறவுப் பணியில் இருப்பவர்களைப் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றை வெளியிடுவதென்று 1958-ல் நேருவின் ஆட்சியின் கீழ் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு முடிவெடுத்தது. 1940-களிலும் 1950-களிலும் வெளியுறவுத் துறையில் இணைந்தவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்டிருந்த அந்த நூலைத் தொகுக்கும் பொறுப்பை கே.பி.எஸ்.மேனன் ஜூனியர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வந்த தசாப்தங்களில் இந்தியாவின் வெளியுறவுத் துறையைச் செதுக்கியவர்களெல்லாம் அதில் இடம்பெற்றிருந்தார்கள். அந்தப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 95.
தடுப்பூசிக்காக காத்திருக்கும் மின் வாரிய தொழிலாளர்கள்
செங்கல்பட்டு: கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், தொற்றில் இருந்து தப்ப பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்துகின்றனர். கடந்த 26-ம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதால், தடுப்பூசி மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
எனது தலைமையில் நடப்பது அனைத்து மக்களுக்கான அரசு - இந்தியா மிகவேகமாக முன்னேறி வருகிறது
7 ஆண்டு ஆட்சி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவின் 46 நாட்களுக்கு பிறகு கரோனா பாதிப்பு 1.65 லட்சமானது
புதுடெல்லி: நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதலாக கரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. இம்மாத தொடக்கத்தில் இதுவரை இல்லாத அளவாக 4 லட்சத்தையும் தாண்டி தினசரி தொற்று பதிவாகியது. இதனால் நாட்டு மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வும் ஏற்பட்டது.