CATEGORIES
Categories
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் ரூ.6,683 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்
6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம் ரூ.1,580 கோடியில் 2,700 புதிய பேருந்துகள்
பிரதமர் மோடி நாளை கோவை வருகை - பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
அரசு நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை கோவை வருகிறார். இதையொட்டி 6,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நீதித்துறை மீது அதிகாரம் செலுத்த முயற்சி மத்திய அரசு மீது ராகுல் கடும் தாக்கு
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக நேற்று கேரள மாநிலத்துக்கு வருகை தந்தார்.
இதுவரை 1.17 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்
புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை 1.17 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு சரியானதுதான்: எச்.ராஜா விளக்கம்
ஈரோட்டில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசினார்.
நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்ததாக பேரவைத் தலைவர் அறிவிப்பு புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது • அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார் நாராயணசாமி
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் வெளி நடப்பு செய்ததால், ஆளும் அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததாக சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்தார். அதையடுத்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. முதல்வர் நாராயணசாமி, தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.
ரூ.70 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு ஆயுதம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
புதுடெல்லி: பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறை ஒதுக்கீடு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற வீடியோ கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:
சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்-முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.23) காலை 11 மணிக்கு துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
ரேஷன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு • அரசாணை வெளியீடு
ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான பணிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார்.
ஊரடங்கின் போது 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்ததே தவறு: ப.சிதம்பரம் கருத்து
புதுக்கோட்டை: கரோனா ஊரடங்கின்போது தமிழகத்தில் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்ததே தவறு என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டது மேற்கு வங்கம் - ஹூக்ளி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஆந்திர முதல்வர் ஜெகனின் தங்கை புதிய கட்சி தொடங்க ஆலோசனை
ஹைதராபாத்: ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2009 செப்டம்பரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவர், காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2004 முதல் இறக்கும் வரை முதல்வராக பதவி வகித்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். கடந்த 2019-ல் நடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை ஜெகன் கைப்பற்றினார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு
வளிமண்டல மேல் அடுக்கில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றிலும், வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றிலும் சுழற்சி நிலவுகிறது. இதனால் காற்று வீசுவதில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்
புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் வலிமைப்படுத்துவதே மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
'அதிமுகவுக்கு இது வாழ்வா, சாவாதேர்தல்' வைத்திலிங்கம் எம்.பி. கருத்து
வரும் சட்டப்பேரவைத் தேர்தல், அதிமுகவுக்கு வாழ்வா, சாவா தேர்தல். நாம் வெற்றி பெறவில்லை எனில், நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல் மார்ச் 14-க்குள் முன்பதிவு செய்யலாம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடும் வருடாந்திர பரீக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் நாராயணசாமி அரசுக்கு கடும் நெருக்கடி பிப்.22-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு • பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
புதுச்சேரியில் 4 எம்எல்ஏக்கள் பதவி விலகியுள்ள நிலையில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு, வரும் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவையைக் கூட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஏற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி நாடு முழுவதும் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக கூறி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இவை பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாக கூறி, இந்த சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
முன்னாள் தலைமை நீதிபதி கோகோய்க்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு
புதுடெல்லி: கடந்த 2018 அக்டோபர் 3-ம் தேதி முதல் 2019 நவம்பர் 17-ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி வகித்தார். கடந்த 2019 மார்ச் மாதம் தொடக்கத்தில் அவர் மீது முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1-ல் சென்னை வருகை
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய தலைவர்கள் பலரும் தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்றார்.
நாளை மறுதினம் பாஜகவில் இணைகிறார் கேரளாவை சேர்ந்த மெட்ரோ மேன் ஸ்ரீதரன்
புதுடெல்லி: கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் (88). டெல்லியில் முதன்முதலில் மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்துக்கு தலைமையேற்கும் பொறுப்பு ஸ்ரீதரனுக்கு 1995-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
திருமலையில் இன்று ரத சப்தமி விழா மாட வீதிகளில் பாதுகாப்பு தீவிரம்
திருமலை: திருமலையில் இன்று ரத சப்தமி திருவிழா நடைபெற உள்ளது. இதனை மினி பிரம்மோற்சவம்' என்று அழைக்கும் அளவுக்கு இன்று ஒரே நாளில் காலை முதல் இரவு வரை உற்சவ மூர்த்திகள் 7 வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். ரத சப்தமியை முன்னிட்டு இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருள உள்ளார்.
தமிழகம் முழுவதும் 8.19 லட்சம் பேர் எழுதுகின்றனர் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3-ம் தேதி தொடக்கம் கூடுதல் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல்
பிளஸ் 2 பொதுத் தேர்வுமே 3-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 8.19 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். கரோனா காரணமாக கூடுதலாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெலங்கானா முதல்வரின் பிறந்த நாள் அம்மனுக்கு 2.5 கிலோ தங்கப் புடவை
ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் 68-வது பிறந்த நாளை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியினர் நேற்று உற்சாகமாகக் கொண்டாடினர்.
டெல்லி செங்கோட்டை வன்முறையில் மிகவும் தேடப்பட்ட மனீந்தர் சிங் கைது
புதுடெல்லி: கடந்த ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது.
காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தலால் 31 ஆண்டு மூடப்பட்டிருந்த கோயில் திறப்பு
காஷ்மீரில் கடந்த 1980-ம் ஆண்டு காலக்கட்டங்களில் தீவிரவாத அச்சுறுத்தலால் ஸ்ரீநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஷீத்தல் நாத் கோயில் 1990-ம் ஆண்டு மூடப்பட்டது.
இந்தியாவில் உற்பத்தியை தொடங்குகிறது அமேசான்
'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு உந்துதல் அளிக்கும் வகையில் அமேசான் நிறுவனம், அதன் மின்னணு சாதனங்களை இந்தியாவிலே தயாரிக்க இருப்பதாக மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று தெரிவித்தார்.
தேசத் துரோக வழக்கில் கன்னையா குமாருக்கு சம்மன்
புதுடெல்லி: நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் 3-ம் ஆண்டு நினைவு தினத்தன்று, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் 2016-ம் ஆண்டு சில மாணவர்கள் சார்பில் கண்டனப் பேரணி என்ற பெயரில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதற்கு அப்போதைய ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவரான கன்னையா குமார் தலைமை வகித்தார். இந்தப் பேரணியின் போது இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.