CATEGORIES
Categories
தடுமாறும் வாகன ஓட்டிகள் 17வது நாளாக எகிறிய பெட்ரோல், டீசல் விலை
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியே வருகின்றன.
நாடுகளின் ஒற்றுமையே கொரோனாவை வீழ்த்தும் உலக சுகாதார அமைப்பு சொல்கிறது
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியாயேசஸ் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கார்பன் மாசு குறைந்த போக்குவரத்து நிதி ஆயோக் அமைப்பு திட்டம்
இந்தியாவில் குறைந்த அளவு கரியமில வாயுவை வெளியேற்றக் கூடிய போக்குவரத்துக்கு வழிவகுக்கும் சர்வதேசத் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஆயாக் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கரியமில வாயு பயன்பாடு குறைவாக உள்ள போக்குவரத்துக்கு வழிவகுக்கக்கூடிய இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்து குறித்த ஆய்வை, நிதி ஆயோக் அமைப்பு சர்வதேசப் போக்குவரத்து அமைப்புடன் இணைந்து, ஜூன் 24, 2020 அன்று தொடங்க உள்ளது.
முக்கிய துறைகளில் உற்பத்தி மார்ச் மாதத்தில் குறைந்தது
புது தில்லி, ஜூன் 23
மருத்துவக் கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் உரையாடல்
தேசிய மருத்துவக் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் காணொளி வாயிலாக உரையாடினார்.
புலம்பெயர் தொழிலாளர்களால் பலமான அமெரிக்கா: சுந்தர்பிச்சை கருத்து
அமெரிக்காவில் பணி புரிய வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்-1பி மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஹெச்-4 விசா உள்பட பல்வேறு விசாக்களை நடப்பாண்டின் இறுதி வரை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் அறிமுகம் ரியல்மி நார்சோ 10ஏ 4ஜிபி வேரியண்ட்
ரியல்மி ஸ்மார்ட் போனின் புதிய நார்சோ 10ஏ 4ஜிபி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் அறிமுகம் செய்யப்பட்டது.
கம்ப்ரஸ்டு பயோகேஸ் ஆலைகளுக்கு நிதியுதவி முன்னுரிமைக்கடன் பட்டியலில் சேர்க்கப்படும்
அழுத்தத்தில் செயல்படக்கூடிய உயிரி எரிவாயு ஆலைகளுக்கு நிதியுதவி செய்வது, முன்னுரிமைக் கடன் பட்டியலில் சேர்க்கப்படும் என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள அழுத்தத்தில் செயல்படக்கூடிய உயிரி-எரிவாயு ஆலை மற்றும் உயிரி எரிபொருள் நிரப்பும் மையங்களை, தமிழக முதலமைச்சருடன் இணைந்து பிரதான் தொடங்கிவைத்தார்.
இரண்டு நிதியாண்டுகளில் இபிஎஃப்ஓ பட்டியலில் 1.39 கோடி சந்தாதாரர்கள் சேர்ப்பு
கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 1.39 கோடி சந்தாதாரர்களை இபிஎஃப்ஓ சேர்த்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ அண்மையில் வெளியிட்ட தற்காலிக சம்பளப் பட்டியல் தரவுகள், 2017 செப்டம்பர் மாதம் சம்பளப்பட்டியல் தரவுத் தொகுப்பு பெறப்பட்டதிலிருந்து, ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் சந்தாதாரர் அடிப்படை எண்ணிக்கை உயர்ந்து வருவதைக் காட்டுகிறது.
அமெரிக்க அரசு கடன் பத்திரங்கள் முதலீட்டில் இந்தியாவுக்கு 12வது இடம்
இதுகுறித்து அமெரிக்க கருவூலத்துறை புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:
புதிய காய்கனி தூய்மையாக்கி சாதனம் பிரெஸ்டீஜ் கிளீன்ஹோம் அறிமுகப்படுத்தியது
புதிய காய்கனி கிருமிநாசினி சுத்தப்படுத்தும் சாதனத்தை பிரெஸ்டீஜ் கிளீன் ஹோம் அறிமுகப்படுத்தி உள்ளது. காய்கனிகளை தண்ணீரில் மட்டுமே அலசிவிட்டு சுத்தப்படுத்தி விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் படிமங்கள் சுத்தப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய நுண்கிருமிகளையும் சுத்தப்படுத்த வேண்டிய அவசியத்தை நாம் இன்று உணர்ந்து கொண்டுள்ளோம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு நெருக்கடியான நேரம் மத்திய அமைச்சர் பேச்சு
நீரிழிவு நோயாளிகளுக்கு நெருக்கடியான நேரத்தை கோவிட் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளதாக பிரபல நீரிழிவு நிபுணரான மத்திய பணியாளர் மற்றும் பொதுமக்கள் குறைதீர்த்தல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
பஞ்சாப் நேசனல் வங்கி 2019-20 நிதியாண்டு வருவாய் ரூ.64,306 கோடி
நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேனல் பேங்க் கடந்த 2019-20ம் நிதியாண்டில் ரூ.64,306.13 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ். மல்லிகார்ஜூன ராவ் கூறியதாவது:
வெளியூர் செல்ல இ-பாஸ் கேட்டு 34 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு
தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள அனுமதி கேட்டு தற்போதைய நிலவரப்படி 34 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.
திணறும் வாகன ஓட்டிகள் கடந்த 16 நாட்களில் டீசல் ரூ.8 உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு தக்கபடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது.
கடன் இல்லை என்பதில் பெருமிதம் முகேஷ் அம்பானி மகிழ்ச்சி
ஜியோவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ததன் மூலமாகவும், உரிமை வெளியீடுகள் மூலமும் 59 நாட்களில்ட ரிலையன்ஸ் 1 லட்சத்து 68 ஆயிரத்து 818 கோடிகளுக்கு மேல் நிதி திரட்டியுள்ளது. இது குறித்து பேசிய முகேஷ் அம்பானி கூறுகையில்,
24 மணி நேரத்தில் அதிக நிலக்கரியை இறக்கி வஉசி துறைமுகப் பொறுப்புக் கழகம் சாதனை
24 மணி நேரத்தில் நிலக்கரியை இறக்குவதில் புரிந்தது வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் அடுத்தடுத்து சாதனை புரிந்துள்ளது.
116 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கரீப் கல்யாண் திட்டம் செயல்படுத்தப்படும்
மத்திய உள்துறை அமைச்சர் தகவல்
எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் வேகமெடுக்கும் 508 பாசஞ்சர் ரயில்கள்
இந்தியா முழுவதும் 200 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்படும் 508 பயணிகள் ரெயில்களை எக்ஸ்பிரஸ் ரெயில்களாக இயக்க இந்திய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை அமெரிக்க அரசு பரிசீலனை
இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் ஜிஎஸ்பி அந்தஸ்தை மீண்டும் வழங்குவது குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைதிஸர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க செனட்சபை உறுப்பினர்கள் பேசியது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஒரே கல்வித் திட்டம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு
நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு ஒரே கல்வித் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராம்கோ சிமெண்ட்ஸ் நிகர லாபம் 13% சரிவு
ராம்கோ சிமெண்ட்ஸ் நிகர லாபம் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் 13 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ரயில்களுக்கு இந்திய உதிரிபாகங்கள் இறக்குமதியை தவிர்க்க முயற்சி
இந்திய ரயில்வேயின் தேவைகளுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை மட்டுமே பயன்படுத்தப்படும் என இந்திய ரயில்வே வாரியத்தலைவர் வி.கே. யாதவ் தெரிவித்தார்.
ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தைப் பார்வையிட ஜூலை 31 வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தைப் பார்வையிட ஜூலை 31 வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
14 வது நாளாக விலை உயர்வு பெட்ரோல் டீசல் எட்டாக்கனியாகிறதா?
சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்பட பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன.
கிரெடிட் ஸ்கோர் இனி இலவசம் எக்ஸ்பீரியன் நிறுவனம் அறிவிப்பு
வங்கிகளில் கடன் பெறுவதற்கு 'கிரெடிட் ஸ்கோர்' என்ற அறிக்கை முக்கியமாக கருதப்படுகிறது. இந்த அறிக்கையை இந்த ஆண்டு முழுவதும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே வழங்க இருப்பதாக எக்ஸ்பீரியன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:
பாதுகாப்பு பிரச்சினை - சீனா கருவிகளை பயன்படுத்துவதில்லை பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சீன தயாரிப்புக் கருவிகளை பயன்படுத்துவதை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவாதவது:
காருக்கு கடன் கரூர் வைஸ்யா வங்கி மாருதி ஒப்பந்தம்
மாருதி சுசூகி பிராண்ட் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, கடனுதவி செய்யும் வகையில் கரூர் வைஸ்யா வங்கி மாருதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
டொசிலிஜூமாப் சிறப்பு மருந்து அமெரிக்காவில் இருந்து வரவழைப்பு
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு அளிப்பதற்கான டொசிலிஜூமாப் (Tocilizumab) மருந்து அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் மருந்தகங்களில் ரூ.1 க்கு சானிடரி நாப்கின்
மக்கள் மருந்தகங்களில் ரூ.1க்கு சானிடரி நாப்கின் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.