CATEGORIES
Categories
தொலைபேசி அழைப்புகளில் மோசடி: அரசுப் பணியாளர்களுக்கு எச்சரிக்கை
தொலைபேசி அழைப்பு வரும்போது திரையில் தோன்றும் ‘அழைப்பாளர் ஐடி’ தகவலை முழுமையாக நம்ப வேண்டாம் என்று சைபர் பாதுகாப்பு ஆலோசனையில் அரசுப் பணியாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அரசமைப்பின் மாண்புகளை அழிக்க பாஜக, பிரதமர் மோடி முயற்சி
பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
ஹிமாசல் காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு
காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேசத்தில் அக்கட்சியின் மாநிலக் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டது.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரதான வாயில் தடுப்புகள் அகற்றம்
பொதுதீட்சிதர்கள் மற்றும் பெருமாள் கோயில் அறங்காவலர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உட்கோயிலாக உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடிமரம் முன் பிரதான வாயிலில் இருந்த தடுப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
2,553 மருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர்
2,553 மருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்தார்.
சொத்து வரி நிலுவை: கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்க மாநகராட்சிக்கு அதிகாரமில்லை
தமிழ்நாடு நகர்ப்புறச் சட்டத்தின் கீழ் சொத்து வரி செலுத்தாமல் இருப்பவரிடமிருந்து குற்றவியல் அல்லது உரிமையியல் நீதிமன்றம் மூலமே வரியை வசூல் செய்ய முடியும். இதை மீறி, ஒருவரது கட்டடத்தைப் பூட்டி 'சீல்' வைக்க மாநகராட்சிக்கு அதிகாரமில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாற்று நில முறைகேடு வழக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்த அதிகாரிகள் விசாரணை
மைசூரு, நவ. 6: மாற்று நில முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்த போலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
காவிரி நீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்: 4 மாநிலங்களுக்கும் ஆணையம் அறிவுறுத்தல்
காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் புதன்கிழமை அறிவுறுத்தியது.
இலகுரக உரிமம் பெற்றவர்கள் சரக்கு வாகனங்களை இயக்கலாம்
7,500 கிலோ எடை வரையிலான சரக்கு வாகனங்களை இயக்க இலகுரக வாகன (எல்எம்வி) ஓட்டுநர் உரிமம் போதுமானது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை தீர்ப்பளித்தது.
அரசின் திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு
கொள்கை உருவாக்கம் உள்பட எட்டு முக்கிய செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் இந்திய மகளிரின் பணி நேரம்
இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஆண்களைவிட கூடுதல் நேரம் பணிபுரியும் பெண்கள் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
தற்சார்பு கிராமங்கள் எப்போது சாத்தியம்?
இந்தியாவில் வாழும் 142 கோடி பேரில், சுமார் 82 கோடி பேர் குடிநீர், உணவுக்கு பெரும் போராட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த 82 கோடி பேருக்குத்தான் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இலவச அரிசித் திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு. இவர்களின் வாழ்க்கை மேம்படாமல் இந்தியா ஒரு நாளும் முன்னேற்றமடையாது.
வாகனச் சோதனையில் இரு காவலர்கள் மீது கத்தியால் தாக்குதல்: புதுச்சேரியைச் சேர்ந்தவர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே வாகன சோதனையின் போது, இரு காவலர்களை கத்தியால் தாக்கியதாக, புதுச்சேரியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
பாடம் நடத்த மாற்று நபரை அனுப்பிய ஆசிரியர் இடைநீக்கம்: கல்வித் துறை நடவடிக்கை
பள்ளிக்கே வராமல் மாற்று நபரை வகுப்பெடுக்க அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியரை இடைநீக்கம் செய்து கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் மீது அலட்சியம் கூடாது: காவல் துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல்
காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் மீது அலட்சியம் காட்டாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ பதில் மனு தாக்கல்
சென்னை, நவ. 6: குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காகித வடிவில் வழங்க முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 வழிச்சாலையாக மாறும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அதிவேக 8 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மலைச்சாமி காலமானார்
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.மலைச்சாமி (87) சென்னையில் புதன்கிழமை (நவ.6) காலமானார்.
தண்டனைக் கைதி சித்திரவதை வழக்கு; மேலும் 11 பேர் பணியிடை நீக்கம்
வேலூர் சிறையில் தண்டனைக் கைதி சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார்.
தாமதமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்
தாமதமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நவ.15-இல் அரியலூர் வருகை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.15-ஆம் தேதி வரவிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணி கட்சிகள் மீது விமர்சனம் வேண்டாம்
அதிமுக செயலர்களுக்கு இபிஎஸ் கட்டுப்பாடு
அரசுத் திட்டங்கள் மூலம் அனைவரும் பயன்பெற நடவடிக்கை
அதிகாரிகளுக்கு துணை முதல்வர் அறிவுறுத்தல்
ஒப்பந்தப் பணிகளை செய்ததாக ரூ.15 கோடி மோசடி: தனியார் ஊழியர் கைது
சென்னையில் தனியார் நிறுவனப் பணிகளைச் செய்வதாகக் கூறி ஒப்பந்தம் வாங்கி ரூ.15.50 கோடி மோசடி செய்த வழக்கில், நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
குரங்கு குட்டியை பார்வையிட மருத்துவருக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு
நாய்களால் கடிக்கப்பட்ட குரங்கு குட்டியின் நிலை குறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய கால்நடை மருத்துவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்தல் நிலம் வணிகத்தின் ஊற்றாக விளங்கியது
நெய்தல் நிலம் வணிகத்தின் ஊற்றாக விளங்கியது என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் மருத்துவர் சுதா சேஷய்யன் கூறினார்.
சென்னையில் 331 புதிய தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன
சென்னை, நவ. 6: சென்னையில் இதுவரை 331 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.