ராசாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
Andhimazhai|July 2022
எனது ஆதங்கங்கள் அத்தனையும் ராஜா மீது நான் வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை. அதை சமூக வலைதளங்களில் மிகக் கேவலமாக திரித்து வெளியிட்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது
முத்துராமலிங்கன்
ராசாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள்... "ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது விஜய் சேதுபதியிடமிருந்து போன்... 'யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்புல இளையராஜா சார், யுவன் மியூஸிக்ல நாம ஒரு படம் பண்ணப்போறோம்' என்றபோது திகைப்பின் உச்சிக்கே போய் அது காலம் எனக்குத் தந்த பரிசு என்று அளவிலா மகிழ்வடைந்தேன். ஆனால் அப்படத்தின் தொடக்கத்திற்குப் பின்னர் நான் அடைந்த வேதனைகள்...வேறு யாருக்கும் நடக்கவேண்டாம். அந்த ஆதங்கத்தைத்தான் நான் என் மேடையில் வெளிப்படுத்தினேன். ஆனால் அதுவும் மிகத்தவறாக சித்திரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது' என்று கவலையுடன் சீறுகிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

'2007இல் எனது முதல் படமான நகர்' வெளியானது. அப்படம் 'கூடல் விமர்ச கர்களால் பாராட்டப்பட்டாலும் வசூல் சரியில்லை என்பதால் எனது இரண்டாவது படமான 'தென்மேற்குப் பருவக்காற்றை' சுவாசிக்க அடுத்து மூன்று ஆண்டுகள் ஆனது. அது ஒரு மிகச்சிறிய பட்ஜெட் படம். நாயகன் விஜய் சேதுபதியின் முகம் யாருக்கும் தெரியாது. 'கூடல் நகர்’ இயக்குநரை மக்கள் மறந்துவிட்டார்கள். நாயகி, இசையமைப்பாளர் உட்பட யாருக்கும் மார்க்கெட் கிடையாது. ஆனால் கடுமையான உழைப்பின் காரணமாக தரமான படைப்பாக வந்ததால் தேசிய விருதுகள் வரை வென்று என்னையும் விஜய் சேதுபதியையும் தமிழ்த் திரையுலகில் காலூன்ற வைத்தது. அவர் அடுத்தடுத்த வெற்றிப்படங்களால் நல்ல உயரத்துக்குப் போனார்.

ஆனால் அந்த அளவுக்கு சுலபமான வெற்றி எனக்கு சாத்தியப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் வெறுமனே 7 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறேன். வழக்கமான மசாலாப்படங்கள் பண்ணும் மனநிலை எனக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். நாயகர்கள் ஆளும் இந்த சினிமாவில் என் கதைகளில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருப்பதுவும் இன்னொரு முக்கிய காரணம். எனவே எனக்கு எனது அடுத்த ஒவ்வொரு படம் கிடைப்பதும் முதல் படப்போராட்டம்தான்.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM ANDHIMAZHAIView all
வாகை சூடிய வாழை!
Andhimazhai

வாகை சூடிய வாழை!

இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.

time-read
1 min  |
September 2024
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
Andhimazhai

"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி

\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.

time-read
2 mins  |
September 2024
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
Andhimazhai

சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.

time-read
1 min  |
September 2024
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
Andhimazhai

புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்

புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.

time-read
1 min  |
September 2024
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
Andhimazhai

கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்

இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.

time-read
2 mins  |
September 2024
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
Andhimazhai

வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!

வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.

time-read
1 min  |
September 2024
அவன் மாதிரி ஒருத்தன்
Andhimazhai

அவன் மாதிரி ஒருத்தன்

கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.

time-read
1 min  |
September 2024
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
Andhimazhai

அவர் கொடுத்த விலை மிக அதிகம்!

அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.

time-read
2 mins  |
September 2024
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
Andhimazhai

அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்

மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.

time-read
1 min  |
September 2024
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
Andhimazhai

தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?

'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.

time-read
1 min  |
September 2024