மக்களால் நேரடியாக நுகரப்படுவதோடு, ஜாம், ஜூஸ், ஐஸ்கிரீம், கேக், மில்க் ஷேக் தயாரிப்பிலும் ஸ்ட்ராபெர்ரியின் பங்கு முக்கியமானது. அதனால் இதன் சந்தை உலகளவில் விரிவடைந்துள்ளது.
இத்தனைக்கும் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் தான் ஃபிரான்ஸில் முதல் முறையாக ஸ்ட்ராபெர்ரி தோட்டம் உருவாக்கப்பட்டு, விவசாயம் செய்யப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
இப்படியான ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தில் இறங்கி, முதல் பழங்குடி ஸ்ட்ராபெர்ரி விவசாயி என்ற சிறப்பைத் தன்வசமாக்கியிருக்கிறார் ரமேஷ் பிவா பாங்கர்.
மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடி கிராமமான கோப்ராவில் பிறந்து, வளர்ந்தவர் ரமேஷ் பிவா பாங்கர். குடும்பச்சூழல் காரணமாக ரமேஷால் பத்தாவது வரைக்குமே படிக்க முடிந்தது. பத்தாவது தேர்வு எழுதியவுடனே படிப்பை நிறுத்திவிட்டு, 2006ம் வருடம் ஒரு பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.
மிகக் குறைவான சம்பளம். இரண்டு வருடங்களுக்கு மேல் அலுவலக உதவியாளர் வேலையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பிறகு தற்காலிகமாக ஓட்டுநர் வேலை செய்து வந்தார்.
இன்னொரு பக்கம் ரமேஷின் குடும்பத்துக்குச் சொந்தமாக 22 ஏக்கர் நிலம் இருந்தது. தண்ணீர் வசதியின்மையால் இரண்டு அல்லது மூன்று ஏக்கரில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்கிற நிலை. டிரைவர் வேலையிலும் பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை.
அதனால் அந்த வேலையை விட்டுவிட்டு, விவசாயத்தில் இறங்கினார் ரமேஷ். அவரது கிராமத்தில் நெல் விவசாயம்தான் பிரபலம். ரமேஷும் நெல் பயிரிட்டார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை.
அதனால் தினமும் 350 ரூபாய் கூலி என்ற அடிப்படையில் பல வேலைகளைச் செய்து வந்தார் ரமேஷ். ‘‘கடுமையாக உழைத்து நெல் விவசாயம் செய்தேன். ஆனால், குறைந்த வருமானமே கிடைத்தது. என்னுடைய தாத்தா, அப்பா மாதிரி நெல் விவசாயத்திலேயே தேங்கிப்போக நான் விரும்பவில்லை.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார் ஹீரோ!
புது மாப்பிள்ளை சித்தார்த் கல்யாணப் பரிசாக வெளிவரவுள்ளது 'மிஸ் யூ'.
கிரிக்கெட் ஆட லஞ்சம் கேட்டார்கள்!
இன்றைய தினம் இந்திய 'அணியின் மிக முக்கிய ஆட்டக்காரராக விராட் கோலி இருக்கிறார்.
சர்க்கரை நோயின் தலைநகரமா இந்தியா?
உலகளவில் 82 கோடி 'சொச்சம் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் வயதானவரா...தடுக்கிவிழ வாய்ப்புள்ளதா...இந்தப் பரிசோதனையை செய்து பாருங்கள்!
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவு உணர்த்தும் பாடம்
3238 மனிதர்கள் பலி...3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் நாசம்...2 லட்சத்து 35 ஆயிரத்து 862 வீடுகள் தரைமட்டம்...9457 கால்நடைகள் இறப்பு...சம்பவம் செய்த தீவிர வானிலை!
274 நாட்களில் 255 நாட்கள் தீவிரமான வானிலை. இந்தத் - தீவிரமான வானிலையால் 3238 பேர் இறந்திருக்கிறார்கள்.
3 வயது சதுரங்க ஜாம்பவான்!
இந்தியச் சதுரங்கத்தின் பொற்காலம் இது என்று அடித்துச் சொல்லலாம்.
அதிபராகிறார் டிரம்ப்...கருத்தடை மாத்திரைகள் + ஹார்மோன் ஊசிகள் பதுக்கப்படுகின்றன!
அமெரிக்க தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையில் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறார் டிரம்ப்.
ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் உறவினர் நான்!
க /பெ.ரணசிங்கம்' 'மூலம் அறிமுக மானவர் பவானிஸ்ரீ. ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் என பலமான சினிமா பேக்ரவுண்ட் உள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் பவனி வரும்படி பேர் வாங்கிக் கொடுத்த படம் வெற்றி மாறனின் 'விடுதலை'.
டாப் 10 - பணக்கார பாடகர்கள்!
திரையுலகம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே வேகத்தில் திரை யுலகக் கலைஞர்களின் சம்பளமும் வளர்ந்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தோனேஷியாவில் அதிகரிக்கும் Contract Marriage!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வார்கள். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல மற்ற நாடுகளின் கலாசாரத்திலும் அப்படித்தான்.