CATEGORIES
Categories
ரூ.300 மில்லியன் இழப்பீடு கோரி வழக்கு
அரச வைத்தியசாலையில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயன்படுத்தப்படும் 'ப்ரெட்னிசோலோன் அசிடேடீன்' கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் நிரந்தர பார்வை இழப்புக்கு உள்ளான மூன்று நோயாளிகள், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
செலவுக்கான அறிக்கை இன்றேல் குற்றவாளி
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 21 நாட்களுக்குள் தேர்தல் செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
"மறுப்போர் வராதீர்கள்”
மாகாண முறைமையை வழங்குவதற்கு
பெண் மருத்துவர் கொலையில் அதிர்ச்சி தகவல்
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தமுள்ளதாக கூறப்படுகிறது.
"ரகசிய உறவுக்கு அவசியம் இல்லை”
திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான உறவு வெட்ட வெளிச்சமாகி உள்ளது என அண்ணாதிராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்ததற்கு பதிலடியாக 'பா.ஜ.கவுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை' என முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சைவப்பிரகாச கல்லூரி சாதனை
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில், 20 வயதின் கீழ் பிரிவில் வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி முதலாம் இடத்தையும், உடுவில் மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தையும், மானிப்பாய் மகளிர் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
கருத்துக் கணிப்பில் ட்ரம்ப் பின்னடைவு
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் யை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக ஜனநாயக கட்சி தலைவர்கள் தயாராக வரும் நிலையில், சமீபத்திய கருத்து கணிப்பில் டொனால்ட் ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
அழகுக்கலை நிபுணர்களின் 'சோழன் உலக சாதனை'
கொழும்பில் இயங்கி வரும் 'அஸ்மா பிரைடல் அகாடமி பிரைவேட் லிமிடெட்' சார்பாக இந்த சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வானது கொழும்பு 'கிங்ஸ் ஹால் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது.
"தற்காத்துக் கொள்வோம்"
காலநிலை மாற்றத்திற்கு கூடாக உடல், உள ரீதியான தாக்கங்கள் எவ்விதமாக இருக்கிறது என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடத்தப்பட்டது.
சிலிண்டர் சின்னத்துக்கு சிக்கல் இல்லை
ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் தொடர்பான ஆட்சேபனைகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரிக்கத் தீர்மானித்துள்ளது.
"90% வேட்பாளர்கள் போட்டியிடவில்லை”
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதமானவர்கள் வெற்றிக்காக போட்டியிடாமல் வேறு தனிப்பட்ட இலக்குகள் மற்றும் நம்பிக்கைகளுக்காக போட்டியிடுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.
வரிக்கு மேல் வரியை சுமத்தி வருகின்றனர்
குறிப்பிட்ட ஒரு செல்வந்த வர்க்கத்தினை பாதுகாக்கின்ற பொருளாதாரம் முறை ஒன்றே தற்போது நாட்டில் காணப்படுகின்றது.
நெருக்கடியை வென்ற இரண்டு வருடப் பணிகள்
27 இலட்சம் மக்களுக்கு 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தை ஆரம்பித்தது
“குப்பைகளை சேர்க்க முயற்சி"
தற்போதைய அரசியல் மிகவும் தீவிரமான பாசறைகளாக மாறியிருக்கின்றது என்று தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க, குப்பைகளை சேர்க்கவே முயற்சி செய்கின்றனர் என்றார்.
"ஹரின், மனுஷ நியமனம்: சட்டங்களை மீறும் செயல்”
முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஜனாதிபதி ஆலோசகர்களாக நியமித்தமை தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹரின், மனுஷவுக்கு புதிய நியமனம்
முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
27 அங்குலம் நீளமானது
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி திருமதி கங்கானி கல்பானி லியனகே தெரிவித்தார்.
14 நாள் அவகாசம்
தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு
"குரங்கம்மை பாதிப்பு இல்லை”
தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
‘ராத்திரேர் ஷாதி’
இரவு நேர பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரவில் துணை வருபவர்கள் என்று பொருள்படும் 'ராத்திரேர் ஷாதி' (Rattirer Sathi) என்ற புதிய திட்டத்தை மேற்கு வங்க அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பங்களாதேஷ் வன்முறையில் 650 பேர் பலி
பங்களாதேஷில் நடந்த வன்முறையில் 650 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை விமலும், கென்யா அனிகாவும் முதலிடம்
அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப் போட்டியின் 21.1 கிலோ மீற்றர் போட்டியில் ஆண்கள் பிரிவில் அவிசாவளையைச் சேர்ந்த விமல் காரியவசம் முதலாம் இடத்தையும், வெலிடையை சேர்ந்த ரீ.டபள்யூ.ரத்னபால இரண்டாமிடத்தையும், டென்மார்க்கை சேர்ந்த பெஸ்டியன் குலோஸ்கோ மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
“ஜனாதிபதி ரணிலுக்கு வரலாற்று வெற்றி”
வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் மலையக மக்கள் உட்பட அனைத்து மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில், எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரலாற்று வெற்றியைப் பதிவு செய்வார் என்றும், அவரின் அடுத்த ஐந்தாண்டுகால ஆட்சியே இலங்கைக்குப் பொற்காலமாக அமையவுள்ளது எனவும், ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்று பேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
“தம்பியிடம் மனம் நொந்து அண்ணனிடம் இணைந்தேன்”
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 20 வருட கால நட்பினை முறித்துக் கொண்டுள்ள அக்கரப்பத்தனை முன்னாள் பிரதேச சபைத் தலைவர் ராமன் கோபால், தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டார்.
"தமிழ் மக்கள் ஆதரிக்கின்றவர் ஜனாதிபதியாக வேண்டும்
பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இம்முறை பல அபிவிருத்தி திட்டங்களை என்னால் மேற்கொள்ள முடிந்துள்ளது. வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் இந்த நாட்டிலே ஜனாதிபதியாக வரவேண்டும்.
பிரசாரத்தை ஆரம்பித்தார் தமிழ் பொது வேட்பாளர்
தமிழ் பொது வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் நல்லூர் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (18) காலை சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
“21/4 தாக்குதலின் உண்மை நிலையை வெளிப்படுத்துவோம்”
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மக்களின் எதிர்பார்த்தது போல உண்மைத் தன்மையை வெளிக் கொணர்வதற்குத் தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அனைவரும் தயாராக இருக்கிறோம்.
ஜப்பானிலிருந்து இந்தியா வரை பொருளாதார ஒத்துழைப்பு
இலங்கையின் நோக்கம் என்கிறார் ஜனாதிபதி
“தேர்தல் பிரசாரத்தில் தேசி கொடி வேண்டாம்"
தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
3 சிறுமிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியர் உட்பட 3 பேர் கைது
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், காத்தான்குடி, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடந்த இரு வாரங்களில் பாடசாலை சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவரையும், இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.