தென் சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் நேற்று அதிகாலை சேலத்தில் கைது செய்தனர். கடந்த வாரம் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியான இவர் மீது, 10 கொலை உட்பட 32க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து சென்னையில் ரவுடிகள் மற்றும் கூலிப்படை கும்பலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருண், ‘ரவுடிகளுக்கு அவர்களின் மொழியிலேயே சொல்லிக் கொடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து சென்னையில் வாலாட்டி வந்த ரவுடிகளுக்கு அச்சம் ஏற்பட்டு அண்டை மாநிலங்களுக்கு தப்பி ஓடினர்.
அதேநேரம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்ட கூலிப்படை தலைவன் குன்றத்தூர் திருவேங்கடம், என்கவுன்டரால் அதிரடியாக கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னையில் பல ஆண்டுகளாக சிம்ம சொப்பனமாக இருந்து வந்து சம்பவ செந்தில், சீசிங் ராஜ், காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி (எ) மணிகண்டன் உள்ளிட்ட ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, தேடப்பட்டும் வந்தனர். இந்நிலையில் பல ரவுடிகள் என்கவுன்டருக்கு பயந்து சென்னையை விட்டு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியதாக கூறப்பட்டது.
இருந்தாலும், தலைமறைவாக உள்ள ஏ பிளஸ் ரவுடிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண், தனது மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவை தொடங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த பிரிவானது ரவுடிகளை மட்டுமே கண்காணித்து நடவடிக்கை எடுக்கும், மற்ற பணிகளில் இவர்கள் ஈடுபட மாட்டார்கள். இந்த பிரிவுக்கு என தனியாக எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உள்ள மோட்டர் வாகன வளாகத்தில் தனி அலுவலகம் இயங்கி வருகிறது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
செங்கல்பட்டில் பிரபல வெற்றி ரியல்ஸ் கட்டுமான நிறுவனத்திலும், திருப்போரூரில் பாலி ஹோஸ் என்ற நிறுவனத்திலும் வருமானவரித்துறையினர், போலீசாரின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை - பினாங்கிற்கு தினமும் விமான சேவை
மலேசியா நாட்டின் தனித்தீவான பினாங்கிற்கு, சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை வருகிற டிசம்பர் 21ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.
அயனாவரம் போலீஸ்காரர் கைது
கேரளாவை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் போதைப்பொருள் வாங்கி, சென்னையில் விற்பனை செய்த அயனாவரம் சட்டம் ஒழுங்கு காவலரை, நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.
மெட்ரோ மேம்பால தூண்கள் அமைக்கும் பணி 100% நிறைவு
மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தட மெட்ரோ ரயில் திட்டத்தில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு வரை, 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பையிலிருந்து வாங்கி வந்து 10 மடங்கு கூடுதல் விலைக்கு போதை மாத்திரை விற்பனை
மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து 10 மடங்கு விலை வைத்து விற்பனை செய்த 6 பேர் கும்பலை பெரம்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் சுற்றி வளைத்தனர்.
மாணவர்களிடம் தன்னம்பிக்கை வளர்ப்போம்
இன்றைய உலகில் உள்ள போட்டி நிறைந்த மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கிய அம்சம்.
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த புடின் ஒப்புதல்
உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில் 1000 நாள்களை கடந்து நீடித்து வருகிறது.
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி
காசா, உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலாக மனிதாபிமான உதவிகள் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜி20 மாநாட்டில் கூட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மணிப்பூர் தீவிரவாதிகள் மீது 7 நாளில் கடும் நடவடிக்கை
கடந்த ஒன்றரை ஆண்டாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் சமீபத்தில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 3 குழந்தைகள், 3 பெண்கள் என 6 பேர் கடத்திக் கொலை செய்யப்பட்டனர்.
பிரமிக்க வைக்கும் அற்புத ஆட்டக்காரர்
ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் நடந்து வரும் டேவிஸ் கோப்பை பைனல்ஸ் டென்னிஸ் போட்டிகளுடன் ஓய்வு பெறும் டென்னிஸ் உலகின் ஜாம்பவான் வீரர் ரபேல் நடாலுக்கு, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற பிரபல வீரர் ரோஜர் பெடரர் இதயத்தை உருக்கும் வகையில் பிரியாவிடை கடிதம் எழுதி உள்ளார்.