'கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கும்'
Dinamani Chennai|November 21, 2024
ரஷியாவுடனான போரில் கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
'கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கும்'

ரஷியாவுடனான போரில் கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே, அமெரிக்காவின் பீரங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி உள்ளது. இருந்தாலும், பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தன்னார்வலர்களால் விமர்சிக்கப்படும் கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்துவதற்கு உக்ரைனை அனுமதிக்க அமெரிக்கா இப்போதுதான் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் கூறியதாவது:

உக்ரைனில் ரஷிய தரைப்படையினருக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக பீரங்கிப் படை மூலம்தான் ரஷிய ராணுவம் இதுவரை முன்னேறிவந்தது. ஆனால், தற்போது அத்தகைய நடவடிக்கைகளில் தரைப்படை வீரர்களை முன்னிலைப்படுத்த ரஷியா தொடங்கியுள்ளது.

எனவே, மாறி வரும் ரஷிய போர் உத்திக்கு ஈடுகொடுக்கும் வகையில், பீரங்கி எதிர்ப்பு கண்ணி வெடிகள் மட்டுமின்றி கால்கண்ணிவெடிகளையும் உக்ரைன் பயன்படுத்த தற்போது அனுமதி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

முன்னதாக, உக்ரைனில் உள்ள ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் மட்டுமே உள்ள ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அந்த நாட்டுக்கு தாங்கள் வழங்கிய "அட்டாக்கம்ஸ்' ஏவுகணைகளை எல்லை தாண்டி ரஷிய பகுதிகளிலும் வீச உக்ரைனுக்கு அதிபர் பைடன் அனுமதி வழங்கினார்.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView all
கோலி, ஜெய்ஸ்வால் சதம்; வெற்றியை நோக்கி இந்திய
Dinamani Chennai

கோலி, ஜெய்ஸ்வால் சதம்; வெற்றியை நோக்கி இந்திய

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் அசத்தலான சதத்தால் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 487 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.

time-read
1 min  |
November 25, 2024
Dinamani Chennai

ஜோர்டான் : இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக் கொலை

ஜோர்டான் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரக அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

time-read
1 min  |
November 25, 2024
Dinamani Chennai

ஐக்கிய அரபு அமீரகத்தில் மாயமான யூத மத குரு கொலை

ஐக்கிய அரபு அமீரகத்தில் காணாமல்போன மால்டோவா நாட்டைச் சேர்ந்த இஸ்ரேல் குடியுரிமை பெற்ற யூத மதகுரு பயங்கரவாத சம்பவத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது.

time-read
1 min  |
November 25, 2024
இம்ரான்கான் கட்சி பேரணி அறிவிப்பு: முடங்கியது இஸ்லாமாபாத்
Dinamani Chennai

இம்ரான்கான் கட்சி பேரணி அறிவிப்பு: முடங்கியது இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதால், அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
November 25, 2024
இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி: பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பாராட்டு
Dinamani Chennai

இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி: பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பாராட்டு

இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பிரதமர் மோடிக்கு இந்திய-அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்து சமூக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

time-read
1 min  |
November 25, 2024
ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு வாங்கியது லக்னெள
Dinamani Chennai

ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு வாங்கியது லக்னெள

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சம்

time-read
1 min  |
November 25, 2024
Dinamani Chennai

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவர்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

time-read
1 min  |
November 25, 2024
அஜீத் பவார் வெற்றியை ஏற்பதில் எந்தக் கவலையும் இல்லை: சரத் பவார்
Dinamani Chennai

அஜீத் பவார் வெற்றியை ஏற்பதில் எந்தக் கவலையும் இல்லை: சரத் பவார்

'மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் அஜீத் பவார் கட்சி அதிக இடங்கள் வென்றதை ஏற்றுக் கொள்வதில் எந்த கவலையும் இல்லை' என்று தேசியவாத காங்கிரஸ் (பவார்) பிரிவு தலைவர் சரத் பவார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
November 25, 2024
Dinamani Chennai

தெற்குலகுக்கு 30,000 கோடி டாலர் பருவநிலை நிதி போதாது - ஐ.நா. மாநாட்டில் இந்தியா ஆட்சேபம்

அஜர்பைஜானில் நடைபெற்று வரும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தெற்குலகுக்கான வருடாந்திர 30,000 கோடி டாலர் பருவநிலை நிதி தொகுப்பு மிகக் குறைவு என்று இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.

time-read
1 min  |
November 25, 2024
மகாராஷ்டிர புதிய முதல்வர் யார்? நீடிக்கும் எதிர்பார்ப்பு
Dinamani Chennai

மகாராஷ்டிர புதிய முதல்வர் யார்? நீடிக்கும் எதிர்பார்ப்பு

மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்த நிலையில், புதிய முதல்வராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற கேள்வி நீடித்து வருகிறது.

time-read
1 min  |
November 25, 2024