அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கல்வித் துறையில் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளின் நோக்கங்களை மேலும் விரிவுபடுத்தவும் மக்களிடையே இதைக் கொண்டு சேர்க்கும் விதமாகவும் ‘ஒரே நாடு - ஒரே சந்தா’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன்மூலம் இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வி வழங்கப்படுவது உறுதி செய்யப்படவுள்ளது.
வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கை எட்ட புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையின்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட அணுசந்தான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.6,000 கோடி ஒதுக்கீடு: இந்த திட்டத்தின் கீழ் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இதழ்களைக் காண நாடு முழுவதும் ஒரே மாதிரியான சந்தா முறையை பின்பற்ற ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2025, 2026, 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நலம் தரும் நடராசர் தரிசனம்
வைகைக் கரை வாதவூரில், அந்தணர் குலத்தில் சம்புபாத சரிதர்- சிவ ஞானவதிக்கு மகனாகப் பிறந்தார் வாதவூரர். இவர் கல்வியில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரானார். புலமை மிக்கவருக்கு 'தென்னவன் பிரமராயன்' எனும் பட்டமும் கிடைத்தது.
திருவாதிரை வழிபாட்டில் திருவாலங்காட்டு ஆடல்வல்லான்
சிவனுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. ‘ஆதிரை நாளுகந்தான்’, ‘ஆதிரை நாளாய் அமர்ந்தோர்’, ‘ஆதிரை நன்னாளானை’, ‘திருவாதிரையானை’ என்றெல்லாம் திருமுறைகள் புகழ்கின்றன. ஆண்டில் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெறும். அதில், திருவாதிரை நாள் அபிஷேகம் மிகச் சிறப்பானதாகும்.
லெபனான் அதிபராக ஜோசப் ஆவுன் தேர்வு
லெபனான் அதிபராக ராணுவ தளபதி ஜோசப் ஆவுனை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை தேர்ந்தெடுத்தது.
டிசிஎஸ் நிகர லாபம் 12% உயர்வு
கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் 11.95 சதவீதம் உயர்ந்துள்ளது.
46 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46ஆயிரத்தைக்கடந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் விற்பனை 3.42 லட்சமாக அதிகரிப்பு
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை கடந்த டிசம்பரில் 3,41,791-ஆக அதிகரித்துள்ளது.
மியான்மர்: வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு
மியான்மரில் சிறுபான்மை ஆயுதக்குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
ரஷிய தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் ஸபோரிஷியா நகரில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் இன்னும் அதிக சேதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.