தலைநகர் ராஞ்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக (நவ. 13, 20) தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய கட்சிகள் இடம்பெற்ற 'இண்டி' கூட்டணி 56 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முன்னெப்போதும் இல்லாத அளவில் 34 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதேநேரம், தனிப்பெரும்பான்மை (41) கிடைக்கவில்லை. காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை கட்சி 2 இடங்களில் வென்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 24 இடங்களே கிடைத்தன. பாஜக 21 தொகுதிகளிலும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
'தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்'
தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வியாழக்கிழமை பதிலளித்துள்ளார்.
ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி
ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நன்மை அளிக்கும் இறைவன்...
பழையதிருமுனைப்பாடி நாட்டில் கடிலம், பெண்ணை ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஊர் திருநாவலூர். இங்குள்ள கோயில் நான்கு யுகங்களுக்கு முன்பே தோன்றியதாகும்.
உக்ரைன் ‘அதிகார மையங்கள்' மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை
மேற்கத்திய நாடுகளின் ஏவு கணைகளைக் கொண்டு தங்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால், உக்ரைனின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையங்கள் மீது தாங்கள் உருவாக்கியுள்ள - இடைமறிக்க முடியாத - 'ஆரெஷ்னிக்' ரக அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தெற்கு லெபனான் சாலைகளில் ரோந்து செல்லும் அந்த நாட்டு ராணுவம்.
ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இரும்புத் தாது உற்பத்தி
நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
உகாண்டா: நிலச்சரிவில் 15 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்.
இந்தியா டூர்: மே.தீவுகள் மகளிர் அணி அறிவிப்பு
இந்திய மகளிர் அணியுடனான வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட வரும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
டெஸ்ட்: இலங்கை 42-க்கு 'அல் அவுட்'
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.