மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் வரும் சூழல் வந்தால், முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் நடந்த கடும் விவாதங்களுக்கு இடையே முதல்வர் இவ்வாறு கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு: டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது: மதுரை நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமம் வழங்கி இருப்பது அப்பகுதி மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் 2024, நவம்பர் 20-இல் கடிதம் எழுதியதாக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முதல்வரின் கடிதத்தில் 2023, அக்டோபர் 3-இல் மத்திய அமைச்சருக்கு தமிழக அரசின் நீர்வளத் துறை அமைச்சர் கடிதம் எழுதியதாகவும், அதற்கு 2023 நவம்பர் 2-இல் கடிதம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த 2 கடிதங்களின் விவரங்களும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. 2023-இல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது தொடர்பாக மத்திய அரசு 2023, செப்டம்பர் மாதமே அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கல்லூரி மாணவி மீதான பாலியல் வழக்கு: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நோ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 17-ஐ சோ்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தேசிய மகளிா் ஆணைய தலைவா் விஜயா ரஹாத்கா் உத்தரவிட்டுள்ளாா்.
திமுக கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்
திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
மாணிக்கவாசகர் இறை அருள் பெற்ற கோயில்
தொண்டை நாட்டில் சிறப்பான வழிபாடுகள் மற்றும் இலக்கியம், வரலாற்றுச் சிறப்புகள் மிக்க திருத்தலமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது.
பல்கலை. மகளிர் கால்பந்து திருச்சி, நெல்லை வெற்றி
தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான மகளிர் கால்பந்து போட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் பல்கலை. அணிகள் வெற்றி பெற்றன.
தமிழ்நாடு அணி அபார வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் உத்தர பிரதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.
ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் அசத்தல்; பௌலிங்கில் பும்ரா பதில்
இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி: எஸ்ஆர்எம் வெள்ளி, சென்னை பல்கலை. வெண்கலம்
அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான நீச்சல் போட்டியில் எஸ்ஆர்எம் பல்கலை வெள்ளியும், சென்னை பல்கலை. வெண்கலமும் பெற்றுள்ளன.
17 பேருக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 17 சிறுவர், சிறுமிகளுக்கு பிரதமரின் தேசிய குழந்தைகளுக்கான விருதுகளை (ராஷ்ட்ரீய பால புரஸ்கார்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை வழங்கினார்.
குஜராத்தில் காவலர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்எல்ஏ, 20 பேர் கைது
குஜராத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கிரீத் படேல் மற்றும் அக்கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
முழு அரசு மரியாதையுடன் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் தகனம்
மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் (91) உடல், முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை (டிச.26) தகனம் செய்யப்பட்டது.