அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
1999 முதல் 2004ஆம் ஆண்டு வரை கர்நாடகத்தின் முதல்வராக பதவி வகித்தவர் எஸ்.எம். கிருஷ்ணா. கடந்த சில ஆண்டுகளாகவே முதுமை சார்ந்த உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார். அவ்வப்போது மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், தனது வீட்டில் கடந்த சில மாதங்களாக மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு அவர் காலமானார். அவருக்கு மனைவி பிரேமா, மகள்கள் மாளவிகா, சாம்பவி ஆகியோர் உள்ளனர்.
வாழ்க்கைக் குறிப்பு: கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், சோமனஹள்ளியில் 1932ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி பிறந்த எஸ்.எம். கிருஷ்ணா ஆரம்பக் கல்வியை மைசூரிலும், சட்டக்கல்வியை பெங்களூரிலும் முடித்துள்ளார். முதுகலை சட்டப்படிப்புக் காக அமெரிக்கா சென்று திரும்பிய அவர், 1962 இல் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அதே ஆண்டில் மத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். பின்னர் பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். 1968-இல் மண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு காங்கிரஸ்கட்சியில் இணைந்து, 1971, 1980ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் மண்டியா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972 இல் மக்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கல்லூரி மாணவி மீதான பாலியல் வழக்கு: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நோ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 17-ஐ சோ்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தேசிய மகளிா் ஆணைய தலைவா் விஜயா ரஹாத்கா் உத்தரவிட்டுள்ளாா்.
திமுக கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்
திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
மாணிக்கவாசகர் இறை அருள் பெற்ற கோயில்
தொண்டை நாட்டில் சிறப்பான வழிபாடுகள் மற்றும் இலக்கியம், வரலாற்றுச் சிறப்புகள் மிக்க திருத்தலமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது.
பல்கலை. மகளிர் கால்பந்து திருச்சி, நெல்லை வெற்றி
தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான மகளிர் கால்பந்து போட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் பல்கலை. அணிகள் வெற்றி பெற்றன.
தமிழ்நாடு அணி அபார வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் உத்தர பிரதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.
ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் அசத்தல்; பௌலிங்கில் பும்ரா பதில்
இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி: எஸ்ஆர்எம் வெள்ளி, சென்னை பல்கலை. வெண்கலம்
அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான நீச்சல் போட்டியில் எஸ்ஆர்எம் பல்கலை வெள்ளியும், சென்னை பல்கலை. வெண்கலமும் பெற்றுள்ளன.
17 பேருக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 17 சிறுவர், சிறுமிகளுக்கு பிரதமரின் தேசிய குழந்தைகளுக்கான விருதுகளை (ராஷ்ட்ரீய பால புரஸ்கார்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை வழங்கினார்.
குஜராத்தில் காவலர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்எல்ஏ, 20 பேர் கைது
குஜராத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கிரீத் படேல் மற்றும் அக்கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
முழு அரசு மரியாதையுடன் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் தகனம்
மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் (91) உடல், முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை (டிச.26) தகனம் செய்யப்பட்டது.