அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்!
ஆடு, மாடு, பூனை, நாய், குதிரை, குரங்கு, கீரி, வௌவால், ஓநாய், நரி ஆகிய உயிரினங்களில் ஏதேனும் ஒன்று மனிதரைக் கடித்தாலும் கூட, ரேபிஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆயினும், மனிதர்களுடன் மிகவும் நட்பாகப் பழகிவரும் நாய்களிடம் கடிபடுவதன் மூலமே அதிகமான ரேபிஸ் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ரேபிஸ் நோயின் காரணமாக இவ்வுலகம் முழுவதிலும் ஒவ்வோர் ஆண்டும் 65 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படுவதாகத் தரவுகள் கூறுகின்றன. நமது தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கடந்த ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியதில், உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது போன்ற காரணங்களால் 43 பேர் மரணமடைந்திருக்கின்றனர்.
இவ்வாண்டின் முதல் இரண்டரை மாத காலத்தில் சுமார் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியதில், நான்கு பேர் மரணமடைந்திருக்கின்றனர் என்பதும் கூட கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக, ரேபிஸ் பாதிப்பின் உச்சத்தில், மரணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களின் கடைசி நாள்களை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. சில வாரங்களுக்கு முன்பு கோவையில் ரேபிஸ் சிகிச்சை பெற்றுவந்த வடமாநிலத்தவரின் கடைசி நிமிடங்களின் காணொளியைச் செய்தி ஊடகங்களில் பார்த்தவர்களின் மனம் நிச்சயம் கனத்துப்போயிருக்கும்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
‘42,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’
தமிழ்நாட்டில் 42,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய ‘வாட்ஸ்ஆப்’ குழு
பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’ என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை இயக்குநர் கே.வன்னிய பெருமாள் தொடங்கி வைத்தார்.

நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10%, அகவிலைப்படியில் 10% உயர்த்தி வழங்கப்படும்
அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்
தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க திட்டங்களை உருவாக்கவும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

வேளாண் உரங்களுக்கு ரூ.37,216 கோடி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நிகழாண்டு காரீஃப் (கோடைப் பருவம்) பருவ காலத்தில் விளைநிலங்களில் உரிய அளவில் மண்ணுக்கு ஊட்டச் சத்தை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான ரூ. 37,216 கோடி மானியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மனித - வன உயிரின மோதலை தவிர்க்க ரூ.31 கோடியில் உயிர்வேலி
மனித - வன உயிரின மோதலைத் தவிர்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிர்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்தார்.

தமிழகத்தில் பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு
தொழில்முனைவோருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
உக்ரைனில் ஐ.நா. தலைமையிலான இடைக்கால அரசு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள, அந்த நாட்டில் ஐ.நா. தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளின் குறைகளை தீர்க்க சிலர் விரும்பவில்லை
விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க சிலர் விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஆக்கபூர்வ அரசியல் செய்ய முன்வாருங்கள்; அதிமுக, பாஜகவுக்கு முதல்வர் அழைப்பு
ஆக்கபூர்வமான அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.