அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும், நலத்திட்டங்கள் அரசின் மக்களை கள் சென்றடைவதை உறுதி செய்திடவும், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஆய்வில் முதலமைச்சர்" போன்ற திட்டங்களையும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கான விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 போன்ற முன்னோடி திட்டங்களையும் இவ்வரசு அறிவித்து சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அதன்தொடர்ச்சியாக, அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக "மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு கல்விக்குழு நிர்வாகிகள் நியமனம்
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் நிர்வாகிகள் அலோசனைக் கூட்டம் அகரக்கட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தென்பெண்ணை, சங்கராபரணியில் வெள்ளப்பெருக்கு: கவர்னர் ஆய்வு
அரியபாளையத்தில் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று பார்வையிட்டார்.
பெஞ்சல் புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ஆய்வு
செஞ்சி, டிச. 3-பெஞ்சல் புயல் தாக்கத்தினால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்து வந்தது.
மொரப்பூர், கம்மைநல்லூர் பகுதிகளில் மழைக்கு வீடுகள் இடிந்து சேதம் நிவாரணம் வழங்க நடவடிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக மழை மற்றும் கனமழை பெய்து வந்தது.
எம்.பி.பி.எஸ்., சிறப்பு கவுன்சிலிங் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
எம்.பி.பி.எஸ்., ஆயுர்வேத சிறப்பு கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க இன்று வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூரணாங்குப்பம் கிராமத்துக்கு 66 சிகரம்” விருது
தமிழ்நாடு நியூஸ் 18 டிவி நடத்திய சிகரம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பூரணாங்குப்பம் கிராமத்தில் தன சுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி செய்த சமூகப் பணியை பாராட்டி பூரணாங்குப்பம் கிராமத்தை சிறந்த கிராமமாக தேர்வு செய்து \"சிகரம்\" விருது வழங்கப்பட்டது.
அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதாக பஞ்சாயத்து தலைவர் மீது புகார்
தென்காசி, டிச. 3- சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட வீரசிகாமணி ஊராட்சி பகுதியை சேர்ந்த வடநத்தம்பட்டி அம்பேத்கர் காலனியை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உணவு, குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்
மழை வெள்ளத்தால் சாலை துண்டிப்பு - முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி