நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் - கவர்னர் விருப்பம்
Maalai Express|February 22, 2024
நல்ல நோக்கத்தை புரிந்து கொண்டு, நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள் என கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் - கவர்னர் விருப்பம்

புதுவை கவர்னராக பொறுப் பேற்ற தமிழிசை சௌந்தர்ராஜன், தனது மூன்று ஆண்டு நிறைவு செய்து நேற்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதனையொட்டி அவர் கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, புதுவைக்கு பணியாற்ற வேண்டும். சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சுயலாபம் இல்லாமல் நான் பணியாற்றி வருகிறேன். நல்லது நடக்க வேண்டும் என்றால் நல்லவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

புதுச்சேரிக்கு என்னென்ன செய்ய முடியுமோ? அந்த அளவிற்கு நான் பணியாற்றுவேன். இதற்கு பத்திரிகையாளர்களின் ஆதரவு வேண்டும். ஒரு மிகப்பெரிய பத்திரியை கயாளர்கள் சந்திப்பில் எதிர் கருத்தை கூறினாலும் அதை எளிதில் எதிர்கொண்டு அதற்கு பதில் கூறி இருக்கிறேன் என்னுடையது சுமுகமான பயணம் அல்ல. நான் நேரடி வாரிசாக அரசியலில் பயணம் செய்யவில்லை.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.