'என் மண், என் மக்கள்' நடைபயண நிறைவு விழா பல்லடத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க்குகிறார் பிரதமர் மோடி - குவியும் பா.ஜ.க. தொண்டர்கள்
Maalai Express|February 27, 2024
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்' நடைபயணத்தை நிறைவு விழாவாகவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவும் பல்லடத்தில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
'என் மண், என் மக்கள்' நடைபயண நிறைவு விழா பல்லடத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க்குகிறார் பிரதமர் மோடி - குவியும் பா.ஜ.க. தொண்டர்கள்

இதற்காக பல்லடம் மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் மலை எதிரில் உள்ள 1400 ஏக்கர் இடம் தேர்வு சய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு இன்று 27 ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இன்று பகல் 12 மணியளவில் பல்லடம் மாதப்பூரில் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா மற்றும் பா.ஜ.க.வின் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் தொடங்கியது.

இதில் பங்கேற்பதற்காக திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்தனர்.

இன்று காலை முதல் பொதுக்கூட்டம் மைதானத்திற்கு பொதுமக்கள், பனியன் நிறுவன தொழிலாளர்கள் என ஏராளமானோர் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சாரை சாரையாக திரண்டு வந்தனர். அவர்களை பா.ஜ.க.வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்து மைதானத்திற்குள் அழைத்து

சென்றனர். தொண்டர்கள், ர்வாகிகள், பொதுமக்கள் அமருவதற்காக மைதானத்தில் ஏராளமான சேர்கள் போடப்பட்டு இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் பங்கேற்க திரண்டு வந்தனர்.

மத்திய அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனை செய்து மைதானத்திற்குள் அனுப்பி வைத்தனர்.

கூட்டத்தி ல் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதியம் 1.30 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார்.

பின்னர் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் பொதுக்கூட்டம் நடைபெறும் மூலமாக மைதானத்தை மாதப்பூர் வந்தடைகிறார்.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.