CATEGORIES
முதன் முதலில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தவர்!
அட்லாண்டிக் கடலில் பிரிட்டனின் தெற்கு பகுதியையும், பிரான்சின் வடக்குப் பகுதியையும் பிரிப்பதுதான் ஆங்கி லக்கால்வாய். இதன் அதிகபட்ச நீளம் 560 கி.மீ. அதிகபட்ச அகலம் 240 கி.மீ. அதிகபட்ச ஆழம் 571 அடி. உலகில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் இதனை நீந்திக் கடந்துள்ளனர். இக்கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியர் மிஹிர் சென். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் 1958ம் ஆண்டு 14 மணி மற்றும் 45 நிமிட நேரத்தில் நீந்திக் கடந்தார். 1966ம் ஆண்டு ஐந்து கண்டங்களிலுள்ள வெவ் வேறு கால்வாய்களை நீந்திக் கடந்து சாதனை படைத்தார்.
சங்கடங்களைக் கடந்து சேவை செய்யும் புதுயுக ஜான்சி ராணி!
இன்றும் ஒருசிலர் பெண் குழந் "தைகளுக்கு ஆசையாக ஜான் சிராணி என்று பெயர் வைப்பார்கள். ஏனென்றால் வீரத்தோடு போராடிட வேண்டும் என்ற ஆசையில்தான். அந்த பெயர் வைத்த காரணமோ என் னவோ தெரியவில்லை ஒவ்வொரு நாளைய வாழ்க்கை போராட்டத்தோடு மட்டுமில்லாமல் கொரோனா காலத் திலும் பல வெற்றிகரமான காரியங்க ளைச் செய்துவருகிறார் அரசுப்பள்ளி ஆய்வக உதவிபாளர்ஜான்சிராணி.
கொரோனா காலத்திலும் அடங்காத ஆன்லைன் மோசடிகள்!
சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். கப்பற்படையில் மூத்த பொறியாளராக கவுரவமான உத்தியோகம். தனது வீட்டிலிருந்த மரக்கட்டில் ஒன்றை ரூ.10,000-க்கு விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். கட்டிலை பார்க்கலாமா?' என செல்போனில் ஆனந்திடம் அனுமதி பெற்று அவரது வீட்டுக்கு வந்த நபர், பின்னர் “நானும் ராணுவத்தில் நல்ல பொறுப்பில் உள்ளேன்.
செவ்வாய்க் கோளுக்குச் செல்லவிருக்கும் அரபு நாட்டு விண்கலம்!
முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று செவ்வாய்க் கோளுக்குப்பயணம் மேற் கொள்ளத் தயாராகிவருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. மேலும் ஜப்பானிய ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ள இந்த விண்கலம் மூன்று விதமான உணர்விகளைக் கொண்டுள்ளது.
புள்ளியியல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!
இனிவரும் அதிநவீன தொழில் நுட்பமயமான உலகம் தகவல்களால் கட்டமைக்கப்படவிருக்கிறது.
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை!
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது விணியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தற்போது திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம் புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மூளை யோசிக்கும் கண்கள் அலைபாயும்!
மனிதர்கள் எதையும் ஊடுருவலாய்ப் பார்த்து, கண்களை சிமிட்டிக்கொள்ளாததால்தான் கண்களுக்கு பல பிரச்னைகள் உண்டாகிறது. கண் சிமிட்டாமல் நீண்ட நேரம் இருக்கும் போது, கண்கள் அயர்ச்சி அடைந்து, நீரை வழியச்செய்கிறது. அது உடல் வெளிப்படுத்தும் மௌனமொழி. ஒரு நிமிடத்தில் ஏழு முதல் ஒன்பது முறை கண்களை இமைத்துக்கொள்பவர்கள் தான் ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.
மாணவர் சேர்க்கை - அவசரம் காட்டும் தனியார் பள்ளிகள்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அனை வரும் தேர்ச்சி என அரசு அறிவித்ததுதான் தாமதம், தனியார் பள்ளிகள் பதினொண்ணாம் வகுப்பு சேர்க்கையை ஆரம்பித்துவிட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து கல்வியாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் கருத்துகளைக் கேட்டோம். இனி அவர்கள் தரும் பதில்களைப் பார்ப்போம்....
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்!
உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் இணைந்து சமீபத்தில் இரண்டு விண் வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. இரண்டு விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர்.
கேட்டல் குறைபாடு சார்ந்த பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்!
பேசுதல், கேட்டல் உள்ளிட்ட செய்தித்தொடர்பு குறைபாடுகளை நீக்க உதவும் பயிற்சிக ளைத் தரும் 17 விதமான சிறப்புப் படிப்புகளை 'All India Institute of Speechand Hearing' என்ற கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் சுகாதாரம் மற்றும் உடல்நல அமைச்சகத்தின் கீழ் 1966 முதல் இயங்கிவருகிறது.
அன்று: கைத்தறி குடோன் பணியாளர் இன்று: சக்ஸஸ் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் நல்வாக்கை, பொருளாதார வசதியற்ற நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கு கல்வி கற்பித்து வெற்றி சாதனையாளர்களாக்கியுள்ளார் கோயமுத்தூரை சேர்ந்த சுரேஷ் தர்ஷன்.
வெற்றிக்கான ரகசியங்கள் உங்களிடம் உள்ளன!
வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டலும் திருக்குறளில் உண்டு. அதனால்தான் திருக்குறளை உலகப் பொதுமறை என்றார்கள். 'தீதும் நன்றும் பிறர் தரவாரா' என்பது புறநானூற்றுப்புலவன் கணியன் பூங்குன்றனார் வாக்கு. அதாவது நன்மையும் தீமையும் பிறரால் ஏற்படுவதை விட நம்மிடம் உள்ள எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அமையும் என்பதுதான் அதன் பொருள். ஆகவே, பெரும்பாலான பிரச்னைகள் தங்களிடமிருந்துதான் தொடங்குகின்றன என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வரப்போகும் நன்மைகளும் தீமைகளும் அவர்கள் விதைத்த விதையிலிருந்து தொடங்குபவைதான்.
ஊரடங்கைப் பயனுள்ளதாக்குவோம்..!
மாணவர்களுக்குச் சில ஆலோசனைகள்!
எஞ்சினியரிங் படிக்க வேதியியல் வேண்டாமா?
பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தற்போது கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயம் என்கின்ற நடைமுறை உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வரும் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறையில் மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைக் கட்டாயம் படித்தால் போதுமானது. இதன்மூலம் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை.
10ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டில் குழப்பம்!
நடப்புக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் (புதிய பாடத்திட்டம்) வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப் பதிவியல் (பழைய பாடத்திட்டம்) ஆகியவற்றிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது அனைவரும் அறிந்ததுதான்.
வெட்டுக்கிளிகளை வெட்டியெறியும் டிரோன்கள்..!
கொரோனா என்ற பெருந்தொற்று 2020-ன் ஆரம் பத்திலேயே உலக மக்களை அவதிக்குள்ளாக்கி இன்னும் அந்தப் பிரச்னையே தீரவில்லை. இந்தச் சூழலில் இந்தியாவுக்கு இன்னொரு சிக்கல் உருவாகிவிட்டது. இந்த 6 மாதங்களுக்குள் இந்தியா ஏகப்பட்ட சவால்களை எதிர்கொண்டுவருகிறது. இப்போது உருவாகியிருக்கும் அடுத்த சிக்கல் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு.
பொய்மை உணர்த்திடும் பார்வை!
மனிதர்கள் தங்கள் பார்வையால் அடுத்தவரை ஈர்க்க வேண்டும், அடுத்தவர் கவனத்தைக் கவர வேண்டும் என்பதை ஒரு ஆசையாகவே மனதிற்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மாற்றுச் சிந்தனை பெண்!
பள்ளிப் படிப்பிலிருந்து போட்டித் தேர்வு வரை பரீட்சை என்றாலே நிறைய பேருக்கு அலர்ஜி. ஆனால், பரீட்சை எழுத உதவி தேடும் பலரின் சமய சஞ்சீவியாக இருக்கிறார் புஷ்பா பிரியா. அப்படியாக கடந்த 12 ஆண்டுகளில் இவர் 800 தேர்வு மற்றும் 25 செய்முறைத் தேர்வு என 825 தேர்வுகள்களை எழுதியுள்ளார். இதில் என்ன செய்தி இருக்கு என்கிறீர்களா?
மருத்துவக் கல்வியில் சமுகநீதி காக்கப்படுமா?
நீட் தேர்வும்...இடஒதுக்கீடும்...
மாணவர்களை அலைக்கழிக்கும் இணையவழிக் கல்வி
கொரோனா வைவரஸின் தாக்கம் கோவிட் -19 உலகெங்கும் பரவலாகி அச்சுறுத்தி வரும் வேளையில், நம் தமிழகத்தையும் குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களில் தன் தாக்கத்தை வலுவாகக் காட்டிவருகிறது. கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்று வரை நீடித்து பள்ளி, கல்லூரிகளை வழக்கமான முறையில் செயல்படாத சூழலுக்குத் தள்ளிவிட்டது. இது ஒரு அசாதாரண சூழல்.
கொரோனா ஊரடங்கும் கற்றல் கற்பித்தல் நிலையும்!
உலகையே முடக்கிப் போட்டுள்ளது கொரானோ நோய்த் தொற்று பரவல். அன்றாடம் வேலை செய்து சம்பாதித்து சாப்பிடவேண்டிய நிலையிலிருந்த மக்கள் உணவுக்கே வழியின்றி பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் பிழைப்புக்காக இடம்பெயர்ந்த சுமார் 30 கோடி தொழிலாளர்கள் படும் துயரங்கள் மனிதநேயம் உள்ளவர்களைத் தூங்கவிடாமல் செய்கின்றன.
பெட்ரோலின் தரத்தை அறிவதற்கான சில வழிகள்!
உணவுப் பொருள் முதல் எரிபொருள் வரை எங்கும் எதிலும் கலப்படம் என்ற நிலைதான் உள்ளது.
வெற்றியாளராக மாற்றுச் சிந்தனைகளை மலரச் செய்யுங்கள்!
புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!!
சூரிய மண்டலத்திற்குள் நுழையும் பனிப்பாறை!
விண்வெளி ஆய்வாளர்கள் சூரிய மண்டலத்திற்குள் 900 அடி நீளமுள்ள பனிப்பாறை வருவதை கண்டு பிடித்துள்ளனர்.
பணி ஓய்வு வயது உயர்வால் குறையும் வேலைவாய்ப்பு!
இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் எப்போதுமில்லாத அளவு வேலையின்மை அதிகரித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தும் பல கோடி நஷ்டமும்...
உலக மக்கள் அனைவரும் கொரோனாவால் கலக்கத்தில் இருக்கும் நிலையில் தமிழகத்தின் 10ம் வகுப்பு மாணவர்களை பதற்றத்துக்குள்ளாக்கி வந்தது பொதுத்தேர்வு.
கதை சொல்வதால் உறவுகள் மேம்படும்!
"சிறுவர் முதல் பெரியவர் வரை இன்றைய காலகட்டத்தில் நேரம் அழிவது செல்போனோடுதான். அன்பு, பாசம், அரவணைப்பெல்லாம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி. பெரியவர்கள் சிறியவர்களிடமும், சிறியவர்கள் பெரியவர்களிடமும் அன்பு செலுத்த, மனம் விட்டுப் பேச வேண்டும். ஒரு காலத்தில் கதை சொல்வது இந்த குறையைத் தீர்த்துவந்தது” என்று சொல்லும் ஈரோடு மாவட்டத்தில் கதைக்களம் & பட்டாம்பூச்சி நூலகம் அமைத்து செயல்பட்டுவரும் ‘கதை சொல்லி’ சி.வனிதாமணி அருள்வேல் கதை சொல்வதன் அவசியம் குறித்து விளக்குகிறார்.
உலக அளவில் நடந்த இணையவழிப் போட்டி முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி ஆசிரியர்!
சமூகத்தில் கல்வியாளர்கள் ஒவ் வொருநாளும் செய்யும் அனைத்து அற்புதமான மற்றும் ஊக்கமளிக்கும் விஷயங்களைக் கொண்டாடும் வகையில் ‘wakelet ' நிறுவனம் சார்பில் வேக்லெட் சமூக வார நிகழ்வு ஜூன் 1 முதல் 5 வரை நடைபெற்றது. இதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூலம் பல அற்புதமான போட்டிகள் நடை பெற்றன. இதில் உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நி கழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஆப்பிள் ஐபேடு பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்று: தனியார் நிறுவன ஊழியர் இன்று: திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவன உரிமையாளர்
இப்போது உள்ள இளைய தலைமுறையினர் பெரும்பாலும் பழைய படம் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்' என்ற எம்.ஜி.ஆர். படப் பாடல்வரி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது. அப்படி தன் திறனை அறிந்து வெற்றியாளரானவர்தான் இளங்கோ. அவரது தனித்துவமான கவனத்தால் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்க உதவியிருக்கிறாரென்றால் சாதாரண சாதனையா என்ன? தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு பிறருக்கும் வழிகாட்டிவரும் வெற்றிக்கதையை இனி அவர் விவரிப்பதைப் பார்ப்போம்...
UNADAP-ன் நல்லெண்ணத் தூதர்!
உலக மக்களின் வாழ்க்கையைத் தலை கீழாக புரட்டிப்போட்டுவிட்டது சீனாவில் உருவான கொரோனா வைரஸ். வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் உலகம் முழுவதும் ஊரடங்கு கையாளப்பட்டது. அதன்படி இந்தியாவிலும் மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளில்லாமல் வாழ்வாதாரம் இழந்து மக்கள் அவதிக்குள்ளாகினர். நாடு முழுவதும் நல்லுள்ளம்கொண்டவர்களும், தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்தனர்.