CATEGORIES
உலக சந்தையில் 2021 நிசான் கிக்ஸ் பேஸ்லிப்ட் அறிமுகம்
நிசான் நிறுவனத்தின் 2021 கிக்ஸ் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி வழங்குவதே இலக்கு: ஜோ பைடன்
அடுத்த 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கோவிட் தொற்று தடுப்பூசி வழங்குவதே தனது இலக்கு என புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜியோ 5ஜி சேவை: முகேஷ் அம்பானி உறுதி
இந்தியாவில் 5ஜி சேவை வரும் 2021 ஆம் ஆண்டின் பிற்பாதியில் படைக்க உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அனைவருக்கும் சுகாதார சேவைகளை வழங்க இந்தியா உறுதி பூண்டுள்ளது: ஹர்ஷ் வர்தன்
மக்கள் தொகை மற்றும் வளர்ச்சியில் பங்குதாரர்கள் (பி பி டி) அமைப்பின் அமைச்சர்களுக்கிடையேயான மாநாட்டில் காணொலி மூலம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார்.
என்பிசிஎஃப்டிசி, என்எஸ்எஃப்டிசி - பஞ்சாப் நேசனல் வங்கி புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்து
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பட்டியல் இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோர் அடங்கிய தனிநபர் பயனாளிகளும், சுய உதவிக் குழுக்களும் பயனடையும் வகையில் செயல்படும் விஸ்வாஸ் திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் நோக்கத்துடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கான சிறப்பான மருத்துவ சேவைகளுக்கு முக்கிய நடவடிக்கைகளை இஎஸ்ஐசி எடுத்துள்ளது
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச் சர்சந்தோஷ் குமார் கங்கவார் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் 183-வது கூட்டத்தில், பணியாளர்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
புது நிறுவனங்களை ஊக்குவிக்க அரசின் நடவடிக்கைகள்: பியூஷ் கோயல்
ஸ்டார்ட் அப் எனப்படும் புது நிறுவ னங்களை ஊக்குவிக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், அவற்றுக்கு பல்வேறு பலன்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
புதுமையான திட்டங்களின் மூலம் மாணவர்களின் தொழில் முனைதலுக்கு ஊக்கம் அளிப்பது மிகவும் முக்கியம்: துணை குடியரசுத் தலைவர்
புதுமையான திட்டங்களின் மூலம் மாணவர்களின் தொழில் முனைதலுக்கு ஊக்கம் அளிப்பது மிகவும் முக்கியம் என்று குடியரசுத் துணை தலைவர் எம் வெங்கையா நாயுடு கூறினார்.
நாட்டில் புத்தாக்கங்கள் அதிகரிக்க வேண்டும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு
வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்க்கும் அதே நேரத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளப்படமாட்டாது என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்பதிவில் வரவேற்பு பெற்றது நிசான் மேக்னைட்
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் வாகனம் முன்பதிவில் அமோக வரவேற்பு பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரெட்மி 9 பவர் 48எம்பி கேமராவுடன் களமிறங்குகிறது
சியோமி நிறுவனத்தின் அதன் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத் தலான வடிவமைப்புடன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது:
விரைவில் அறிமுகமாகிறது ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர்
இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் விரைவில் விற் பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது தகவல்கள் வெளி வந்துள்ளன. இது குறித்து செய்தியாவது:
முதலீட்டு ஊக்குவிப்பு விருது 2020-இன் வெற்றியாளராக இந்தியாவை ஐநா அறிவித்துள்ளது
2020 ஐக்கிய நாடுகள் முதலீட்டு ஊக்குவிப்பு விருதின் வெற்றியாளராக இன்வெஸ்ட் இந்தியாவை ஐக்கிய நாடுகள் சபை (வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு அறிவித்துள்ளது.
புதிய செயலியை அறிமுகப்படுத்தியது ஐசிஐசிஐ வங்கி
நாட்டின் தனியார் துறையில் முன்னணி வங்கியாக திகழும் ஐசிஐசிஐ வங்கி செல்லிடப்பேசி வாயிலாக பணப்பரிமாற்றம் மேற் கொள்வதற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.
டெஸ்ட் பேட்டிங் தரவரிசை ஐசிசி வெளியீடு ஸ்மித் தொடர்ந்து முதலிடம், கோலிக்கு 2வது இடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக தெரிவித்துள்ளது. நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 2 இடங்கள் முன்னேறி இந்திய அணி கேப்டன் கோஹ்லியுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜன.31க்குள் அனைத்து பயணியருக்கும் கட்டண தொகையை திருப்பி வழங்க இண்டிகோ முடிவு
பொது முடக்க கட்டுப்பாடுகளால் ரத்தான விமானங்களில், முன்பதிவு செய்திருந்த அனைத்து பயணியருக்கும், அவர்கள் செலுத்திய கட்டண தொகையை, வரும், ஜனவரி, 31ம் தேதிக்குள் திருப்பி வழங்க, இண்டிகோ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவிட் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா முன்னிலை: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
இந்தியாவில் கோவிட் நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட தயாரிப்பில் உள்ளன.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்
இந்திய பைக் சந்தையில் கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் வரிசை பைக் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. துள்ளலான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் சிறந்து விளங்குவதுடன் மிக சவாலான விலையில் இந்த பைக் மாடல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றது
குவாலியர் மற்றும் ஓர்ச்சா நகரங்கள்
தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.100 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்படும்: பிரதமர் மோடி
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணியை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட இதர விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முதலீட்டு நடவடிக்கைகள் மூலம் ரூ.1.49 லட்சம் கோடி வருவாய் ஈட்டியது எல்ஐசி
ரூ.1.49 லட்சம் கோடி வருமானம் முதலீட்டு நடவடிக்கைகள் மூலம் ஈட்டியுள்ளதாக எல்ஐசி நிறுவத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜ்குமார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா புது வேரியண்ட் அடுத்த ஆண்டு அறிமுகம்?
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா புது வேரியண்ட் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
சர்வதேச சந்தையில் அறிமுகமானது 2021 ஆர்8 பேந்தர் எடிசன் மாடல்
2021 ஆர்8 பேந்தர் எடின் மாடலை ஆடி நிறுவனம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த புதிய 2021 ஆடி ஆர்8 பேந்தர் எடிஷன் மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய வண்ணத்தில் கிடைக்கிறது. மேலும், இந்த ஸ்பெஷல் எடிஷன் ஆடி ஆர் 8 ஸ்போர்ட்ஸ் கார் மொத்தம் 30 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
கோவாக்சின் தடுப்பு மருந்து சென்னையில் 3ம் கட்ட பரிசோதனை
சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் 'கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்டப் பரிசோதனை தற்போது தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சில நாட்களில் கோவிட் தடுப்பூசி: டிரம்ப் தகவல்
உலகிலேயே கோவிட் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இந்த தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கையும் 3 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 38 லட்சம் வாடிக்கையாளர்கள் பெற்றது ஏர்டெல்
செப்டம்பர் மாதத்தில் மட்டும் நாட்டின் டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 38 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று அசத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஜியோ பைபர் சேவையில் 3 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைப்பு: டிராய்
கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டாப் 5 பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை ட்ராய் வெளியிட்டுள்ளது. இதில் வையர்டு மற்றும் வயர்லெஸ் சேவை சேர்க்கப்பட்டு உள்ளது.
டிச.27 முதல் தமிழகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம்
டிச.27 முதல் தமிழகத்தில் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று லாரி உரிமையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு: ராஜீவ் குமார்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2021-22 நிதி ஆண்டில் கோவிட் தொற்றுக்கு முன்பிருந்த நிலையை எட்டும் எனவும், பங்கு விலக்கம் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி மத்திய அரசு திரட்ட இருப்பதாகவும் நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் புதிய அப்டேட் வெளியீடு
தனது ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது ரியல்மி நிறுவனம். அதன்படி UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வசதி இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அப்டேட் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.