CATEGORIES
ஆக.27ல் விற்பனைக்கு வரும் ஆடி ஆர்எஸ் கியூ8
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆர் எஸ் கியூ8 மாடல் கார் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் காரை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது ஆடி நிறுவனம். இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
சீனாவுடன் வணிகம் செய்ய முடியாது: டொனால்டு டிரம்ப்
சீனாவுடன் வணிகம் செய்ய முடியாது என்றும், சீனாவுடனான வணிகத் தொடர்பைத் துண்டிக்க முடியும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆக.26ல் வழிபாட்டுக்கு திறக்கப்படும் பத்மநாபசுவாமி கோயில் பக்தர்களுக்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
கோவிட் 19 தொற்று அச்சுறுத்தலால் கேரள மாநிலத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
சந்தாதாரர்களின் யுஏஎன் எண்களை இபிஎஃப்ஓ அமைப்பு புதுப்பித்தது
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கோவிட்-19 தொற்று நோய் பாதிப்பு இருந்தபோதிலும், அதன் சந்தா தாரர்கள் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (KYC) தகவ லைப் புதுப்பிப்பதில் ஜூலை-2020ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
BMW 3 சீரிஸ் GT ஷேடோ எடிசன் அறிமுகமானது ஆரம்பவிலை ரூ.42.50 லட்சம்
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ் மோ ஷேடோ எடிசன் லிமிடெட் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.42.50 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ ஆன்லைன் சேல்ஸ் சேனல் வாயிலாக இந்தக் காரை முன்பதிவு செய்யலாம்.
பசுமைத் தொழில்நுட்ப சாலைத் திட்டங்கள் அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு
நவீன பசுமைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் சாலைத் திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு செய்தார். ‘ஹரித் பாத்' மொபைல் செயலியையும் அவர் தொடங்கி வைத்தார்.
நகைக்கடைகளுக்கு இணையப் பதிவு மையம் ராம் விலாஸ் பாஸ்வான் அறிமுகப்படுத்தினார்
நகைக்கடை விற்பனையாளர்களுக்கான இணைய வழிப் பதிவு மற்றும் புதுப்பித்தல் முறையையும், இணைய வழி மதிப் பிடுதல், ஹால்மார்க்கிங் (A&H) புதுப்பித்தல் மற்றும் அங்கீகரித்தல் மையங்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிமுகப்படுத்தினார்.
விலை கண்காணிப்பு முறையால் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்கிறது: அமைச்சர் பேச்சு
சிறப்பான விலை கண்காணிப்பு முறை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்கள் கிடைக்க உதவியுள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
ரோஹித் சர்மா, மாரியப்பன் தங்கவேலுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு ஆகியோருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனைப் பொருள் குறித்த விவரங்கள் அனைத்துப் பொதிகளிலும் இருக்க வேண்டும்
மத்திய உணவு அமைச்சர் அறிவுறுத்தல்
வெளிப்படையான ஏபிஐ சேவை ஆரோக்கிய சேது அறிமுகம்
கோவிட்-19 நோய்த் தாக்குதலுடன் வாழப் பழகிக் கொள்வது என்ற புதிய நியதியை நோக்கி நாம் நகரும் நிலையில், வெளிப்படையான ஏபிஐ சேவை என்ற புதிய புதுமைச் சிந்தனைச் சேவையை ஆரோக்கிய சேது செயலிக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
3 ஆண்டுகளில் இந்திய மருந்துகள் சந்தை 12-14% வளர்ச்சி அடையும் : கேபிஎம்ஜி
அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய உள்நாட்டு மருந்துகள் சந்தை 12-14 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று சந்தை வர்த்தக ஆய்வு நிறுவனமான கேபிஎம்ஜி தெரிவித்துள்ளது.
சிஜி பவர் நிறுவனப் பங்குகளை முழுமையாக விற்றது எல் & டி ஃபைனான்ஸ்
சிஜி பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூசன்ஸ் நிறுவனத்தில், தனது வசமிருந்த பங்குகள் முழுவதையும் விற்பனை செய்துள்ளது எல் அண்ட் டி ஃபைனான்ஸ்.
ஏழு புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது பெனெல்லி இந்தியா
பெனெல்லி இந்தியா நிறுவனம், புதிய ஏழு பிஎஸ்6 தர மோட்டார் சைக்கிள்களை இந்த ஆண்டில் களமிறக்குகிறது. சமீபத்தில் தனது 29வது டீலர் ஷோரூமை உதய்பூரில் இந்நிறுவனம் திறந்தது.
எட்டு வழிச்சாலை திட்ட வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்: மத்திய அரசு வாதம்
சென்னை சேலம் 8 வழிச்சாலை , மாநில வளர்ச்சி தொடர்பான திட்டம் என்பதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.
தடையை மீறி விநாயகர் ஊர்வலம் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை
கட்டுமானத் தளவாடங்களின் தயாரிப்பு மையமாக இந்தியாவை உருவாக்குவதே லட்சியம்: நிதின் கட்கரி பேச்சு
கட்டுமானத் தளவாடங்கள், தொழில்நுட்பம், உதிரிபாகங்கள் மற்றும் கலவைகள் குறித்த இந்தியத் தொழில் கூட்டமைப்பின் மெய்நிகர் கண்காட்சி' என்னும் இணையக் கருத்தரங்கில் காணொளிக் காட்சி மூலம் அவர் உரையாற்றினார்.
தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்க அறிவிப்பு மருத்துவ சேவைகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது
மத்திய அரசு தகவல்
ஐபிஎல் தொடரின் புதிய விளம்பரதாரராக டிரீம் 11 நிறுவனம் ஒப்பந்தம்: பிசிசிஐ அறிவிப்பு
ஐபிஎல் 2020 போட்டியின் புதிய விளம்பரதாரராக டிரீம் 11 நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் இந்தத் தகவலை வெளியிட்டார்.
சுகாதார வசதிகளை நவீனப்படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்படுகிறது: மத்திய அமைச்சர் பேச்சு
இந்தியாவில் சுகாதார வசதிகளை நவீனப்படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்படுகிறது என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
சுயசார்பு பாரதம் சுதேசி நுண்செயலி சவால் ரவிசங்கர் பிரசாத் தொடங்கினார்
தன்னம்பிக்கையின் லட்சியத்தை உணரவும் மற்றும் சுயசார்பு பாரதம் நோக்கி ஒரு முக்கியமான முன்னேற்றம் காணவும் மத்திய சட்டம். நீதி, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சுதேசி நுண்செயலி சவால் ஒன்றை தொடங்கியுள்ளார்.
ஊடக தொழில்நுட்பப் பயிற்சி, ஆராய்ச்சிக்கு ஐஐஎம்சி இணைந்து செயல்பட வேண்டும்
அமித் காரே அறிவுறுத்தல்
வீட்டு வசதி குடியிருப்புகளின் கட்டுமானத்திற்கு 158 லட்சம் டன் ஸ்டீல் பயன்படுத்தப்படும்
நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் தகவல்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வீட்டுவசதி
ஸ்டீல் உரிமையாளர்களுக்கு தர்மேந்திர பிரதான் வேண்டுகோள்
முதல் சர்வதேச சூரியசக்தி மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
மத்திய அமைச்சர் தகவல்
ஸ்டெர்லைட்டை திறக்கக் கோரிய மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க் கிழமை தீர்ப்பு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஆக.18) தீர்ப்பு அளிக்கிறது.
மதுரையை 2ம் தலைநகராக்கும் கோரிக்கை செல்லூர் ராஜூவரவேற்பு
மதுரையை 2ஆம் தலைநகராக அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வரவேற்கிறேன் என மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
மதுரை வேலம்மாள் போதி வளாகத்தில் ஆன்லைன் சுதந்திர தின சிறப்பு கலை நிகழ்ச்சி
மதுரை, அனுப்பானடியில் உள்ள வேலம்மாள் போதி வளாகத்தில் 74வது சுதந்திர தின விழா ஆன்லைனில் சிறப்பாக நடைபெற்றது. காலை 8 மணி முதல் 10.30 மனி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ் தாய் வாழ்த்தில் தொடங்கி, வரவேற்புரை, கொடி ஏற்றம், வரவேற்பு நடனம், மழலையரின் குழு நடனம், சிறப்புரை என பல்வேறு பரிமாணங்களுடன் நிகழ்ச்சி தொடர்ந்தது.
கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் சாராத இறக்குமதிகள்
ஜூலை 2020ல் எண்ணெய் இறக்குமதிகள் 6.53 பில்லியன் டாலராக (ரூ.48,975.09 கோடி இருந்தன. ஜூலை 2019ன் 9.60 பில்லியன் டாலரோடு (ரூ.66,056.77 கோடி) ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர்களில் 31.97 சதமும், இந்திய ரூபாய் மதிப்பில் 25.86 சதமும் இது குறை வாகும். ஏப்ரல்-ஜூலை 2020-21ல் எண் ணெய் இறக்குமதிகள் 19.61 பில்லியன் டாலராக (ரூ 148,234.51 கோடி இருந்தன. கடந்த வருடம் இதே காலத்தின் 44.45 பில்லியன் டாலரோடு (ரூ.3,08,455.32 கோடி ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர்களில் 55.88 சதவீதமும், இந்திய ரூபாய் மதிப்பில் 51.94 சதவீதமும் இது குறைவாகும்.