CATEGORIES
பாரதம் குறித்து குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
குழந்தைகளுக்கு பாரதம் குறித்து விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
உ.பி. தீவிபத்தில் குழந்தைகள் உயிரிழப்பு: காங்கிரஸ் கண்டனம்
சென்னை, நவ. 16: உத்தர பிரதேச தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி வயது வரம்பை உயர்த்த வேண்டும்
சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59-ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தெலுங்கு மக்களை அவதூறாகப் பேசிய வழக்கு; நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது
சென்னை, நவ.16: தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நெல்லையில் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கு மீது பெட்ரோல் குண்டுகளை மர்ம நபர்கள் வீசினர். இதுதொடர்பாக இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜேடர்பாளையம் அருகே சாலை விபத்து: 3 இளைஞர்கள் உயிரிழப்பு
பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் பெண் கொலை: சென்னை ஹோட்டல் ஊழியர் கைது
சென்னை, நவ. 16: மேற்கு வங்கத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னையில் ஹோட்டல் ஊழியராக வேலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
‘நரம்பியல் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் கவனம் தேவை’
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் தாய்மார்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய சுகாதார இயக்க கூடுதல் இயக்குநர் ஜி.ஜெரார்ட் மரிய செல்வம் தெரிவித்தார்.
தொழிலதிபரிடம் ரூ. 2.22 கோடி ஆன்லைன் மோசடி: கேரள இளைஞர் கைது
சென்னையில் தொழிலதிபரிடம் ரூ.2.22 கோடி ஆன்லைன் மோசடி செய்ததாக கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.
வங்கிக் கொள்ளை முயற்சி வழக்கு: இளைஞர் சிக்கினார்
சென்னை திருவல்லிக்கேணியில் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய இளைஞரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இளைஞர்கள் நாட்டுக்காகவும் உழைக்க வேண்டும்
மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன்
கோயம்பேடு சந்தையில் தேங்கும் குப்பைகளை அகற்றக் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
சென்னை, நவ. 16: கோயம்பேடு சந்தையில் தேங்கும் குப்பைகளை முறையாக அகற்றாததைக் கண்டு காய்கறி வியாபாரிகள் சந்தை வளாகத்துக்குள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலிமனைகளில் குப்பை: உரிமையாளர்களுக்கு அபராதம்
தாம்பரம் மாநகராட்சிக்குள் பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி, 42 காலி மனை உரிமையாளர்களுக்கு தலா ரூ.14,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சென்னையில் ஆய்வு
பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவினர் சென்னையில் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
கழிவுநீர் மேலாண்மை: மக்கள் கருத்து தெரிவிக்கலாம்
மாநகராட்சி அழைப்பு
அடையாறு மண்டலத்தில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
அடையாறு மண்டலத்துக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (நவ.18, 19) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
சபரிமலை சீசன்: சென்னை – கொச்சி இடையே விமான சேவை அதிகரிப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால், தினமும் சென்னை - கொச்சி இடையேயான விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மின் தடை: நோயாளிகள் அவதி
கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மின் தடையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
கார்த்திகை: மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதம் தொடங்கியதைத் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: தீவிர சிகிச்சையில் மேலும் 16 குழந்தைகள்
உத்தர பிரதேச மாநிலம், ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மேலும் 16 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 17) 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் நவ. 27-இல் தமிழகம் வருகை
நீலகிரி, திருச்சி, திருவாரூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
மணிப்பூர்: எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறை
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டு நடைபெற்ற போராட்டத்தில் எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.
தமிழ்நாடு கிராம வங்கியில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடக்கம்
கோவை, நவ. 15: தமிழ்நாடு கிராம வங்கியில் 'அற்புதம் 555' என்ற பெயரில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம்
தஞ்சாவூர், நவ. 15: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது (படம்).
லி.ஜி.பாலச்ப்பிரமணியம், நாகநாத தேசிகருக்கு தமிழ் இரைர் ரங்க விருதுகள் அறிலிப்பு
தமிழ் இசைச்சங்கத்தின் இசைப் பேரறிஞர் பட்டம் தவில் இசைக்கலைஞர் வேதாரண் யம் வி.ஜி.பாலசுப்பிரமணி யத்துக்கும், பண் இசைப்பேர றிஞர் பட்டம் மயிலை ௯.நாக நாத தேசிகருக்கும் வழங்கப்ப டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை
ராம்நாத் கோயங்கா விருது விழாவில் சுவாமி ஸ்வரூபானந்தஜி
ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சிட்னி, நவ. 15: பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்கா: சுகாதார அமைச்சர் நியமனத்துக்கு எதிர்ப்பு
வாஷிங்டன், நவ. 15: அமெரிக்காவின் அடுத்த சுகாதாரத்துறை அமைச்சராக, முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் உறவினர் ராபர்ட் எஃப். கென்னடியை (ஜூனியர்) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.