CATEGORIES

சமகாலத்திலேயே பாரதி தமிழை அங்கீகரித்த கரந்தைத் தமிழ்ச் சங்கம்
பாரதியை அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாமல், மறைந்தும் பல்லாண்டுகளுக்குப் பின்புகூடத் தமிழ்ப் புலமை உலகம் அங்கீகரிக்கவில்லை என்னும் கருத்து பொதுவாக நிலவி வருகிறது.

நட்சத்திரங்களின் காலம்
1965 இல் ஒருமுறை நானும் எனது தம்பியும் மாமல்லபுரம் சென்றிருந்த போது, கடற்கரைக் கோவில் அருகே ஆத்மி (இந்தி) படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கதாநாயகன் திலீப்குமார் காமிராவை எந்த இடத்தில் எந்தக் கோணத்தில் வைக்க வேண்டும், விளக்குகளை எங்கே நிற்க வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

கல்வி மேம்பாட்டை வலியுறுத்தித் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள்
தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுப் புதிய அமைச்சரவை அமைத்து முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பணி சிறக்க தலித் அறிஞர் குழுவின் வாழ்த்துகள்.

நூற்றாண்டு நினைவில் குருக்கள்
இப்போது மயிலாடுதுறை தனி மாவட்டம்; இதன் பழைய பெயர் மாயவரம்.எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது மாயவரம், மயிலாடுதுறை ஆனது.

கவிதைகள்
கண்ணாடிச் சத்தம்

கவிதைக்கு எதிரான கவிதை
இந்தியிலிருந்து தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்

ஐரோப்பிய தமிழியல் ஆராய்ச்சி அனுபவங்கள்
இன்றைய சூழலில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஐரோப்பிய மொழிகளைக் கற்று ஆராய்ந்த தமிழியல் ஆய்வாளர் ஆனந்த் அமல்தாஸ்.

காலச்சுவடும் நானும்
"எங்கிருந்து ஆரம்பிக்கிறது. இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்து தானா அல்லது அதன் அடியிலிருந்தா?

கணித்தமிழைக் கணித்தவர்
பத்மஸ்ரீ பேரா. ஆனந்தகிருஷ்ணன் இந்தியாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவர். தமிழ்நாட்டுச் சிறுநகரமான வாணியம்பாடியில் அவர் பிறந்தபோது, கல்லூரிப்படிப்பு பலருக்கும் எட்டாக்கனியாக இருந்தது.

உணவும் சாதியும்
எந்தச் சாதியிலும் இரக்கத் துணிந்து கொண்டேன்' என்று பாடிய பட்டினத்தார் போன்ற இடைக்காலச் சித்தர்கள் தொடங்கி, தற்கால அரசியல் தலைவர்கள் வரை பொதுவாழ்வை ஏற்கும் பெரும்பாலானோர் வெவ்வேறு சாதிச் சமூகத்தினரிடமிருந்து உணவைக் கொண்டல்-கொடுத்தல், சேர்ந்துண்ணல் போன்ற செயல்பாடுகளைச் சாதியக் கட்டுப்பாடுகளை மறுதலித்தலின் குறியீடாகக் காட்ட முயல்கின்றனர்.

போராடாமல் நீதி கிடைக்காது
பாதிக்கப்பட்ட பெண்களையும் உள்ளடக்கிய இந்தக் கலந்துரையாடல் வைரமுத்து மீதான மீரு குற்றச்சாட்டுக்களின் விளைவுகளை விரிவாக அலசுகிறது.

வாழ்தல் இனிது
"நமது மலைகளையும் வனங்களையும் நதிகளையும் பாதுகாப்பதில் எனக்கு முதன்மையான அக்கறை இருக்கிறது. ஏனெனில் நான் இமயத்தின் மடியில் பிறந்தவன்” இந்த வாசகங்கள் நான் பணியாற்றிய தொலைக்காட்சி நேர்காணலில் சுந்தர்லால் பகுகுணா கூறியவை. எளிய கவிதையொன்றின் வரிகளாக ஒலித்தன என்பதாலும் அவ்வாறு சொல்லவைத்த கேள்வி என்னுடையது என்பதாலும் வாசகங்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் தங்கியிருக்கின்றன. அவரது மறைவுச் செய்தி அறிந்ததும் முதலில் அகத்தில் எதிரொலித்தவை இந்த வாசகங்கள் தாம்.

நட்பார்ந்த கைகளும் புன்னகையும்
1982 இல் கர்நாடகத்தில் ஹொஸ்பேட்டெயில் தங்கியிருந்தபோது, எங்கள் முகாமுக்கு அருகில் பெயர்ப்பலகை இல்லாத ஓர் எளிய ஓட்டலுக்குக் காலைச்சிற்றுண்டி சாப்பிடச் செல்வது வழக்கம். அந்த ஓட்டலை நடத்தி வந்த குருஷாந்தப்பா பழகத் தொடங்கிய நாலைந்து நாட்களிலேயே எனக்கு நண்பராகிவிட்டார்.

கி.ரா.வின் ஆப்த நண்பர்
தமிழருக்குத் தமிழே துணை' என்னும் மந்திரத்தைத் தமிழர்களுக்குச் சொன்ன ரசிகமணியின் பேரனும் கி.ரா.வின் ஆப்த நண்பருமான தீப. நடராஜன் கடந்த 22.05.2021 அன்று காலமானார். ரசிகமணி டி.கே.சி.யின் புதல்வர் தெ.சி.தீத்தாரப்பன் என்ற செல்லையா முத்தம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக 20.06.1933 அன்று பிறந்தவர் தீப. நடராஜன். ரசிகமணியின் பேரன் அவர் என்று குறிப்பிட்டுச் சொல்கிறபோது அவரது தந்தை பற்றியும் நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது.

தேர்வுகள் சோதனைகள்
சென்ற ஆண்டு (2020) மார்ச் இறுதியில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, தமிழ்நாட்டில் மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களின் தேர்வுகள் முடிந்திருந்தன, ஒருநாள் தேர்வைத் தவிர. அது பிற்பாடு சில குழப்பங்களுக்கிடையில், ஓரிரு ஒத்திவைப்புகளுக்குப் பின்னரும் சுமூகச் சூழல் கனியாததால் ரத்து செய்யப்பட்டது. பள்ளி இதர வகுப்பு மாணவர்களின் ஆண்டிறுதித் தேர்வுகள் நடத்தப்படவில்லை.

வரலாற்றுடன் ஒரு பயணம்
உலக அளவில் கமு. நடராஜன் என்ற பெயரை அறியாத காந்தியர்களைக் காண்பது அரிது. ஆனால் சர்வோதய இயக்கத்துக்கு வெளியில் அதிகம் அறியப்படாமலே மறைந்த பெரும் ஆளுமை அவர். தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பேரிழப்புகளில் ஒன்று அண்மையில் நேர்ந்த அவரது திடீர் மரணம். 88 வயதிலும் அவர் சுமந்து கொண்டிருந்த பொறுப்புகள் ஏராளம். காந்தியையும் காந்தியத்தையும் காந்தியின் மறைவுக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்து 21ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டுவந்த காந்திய ஊழியர்களின் முதல் வரிசையில் நின்றவர் அவர். கே.எம். அண்ணாச்சி என்று மிகுந்த அன்புடன் சர்வோதய இயக்கத்தினரால் அழைக்கப்பட்டார். முதல் தலைமுறை காந்தியர்களுக்கும் அவர்களது நேரடிச் செயல்பாட்டினை அறியாத அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் அவர் ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.

இனியாவது விதி செய்வோம்
வாழ்க்கையை முன்கூட்டி மதிப்பிட உதவும் கலை என்று கல்வியைச் சொல்லலாம். மதிப்பிடல் மூலம் வாழ்க்கையை எதிர்கொள்வதும் மாறிவரும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு நம் சமன்நிலையைக் காப்பாற்றிக்கொள்வதும் சாத்தியமாகிறது. ஆனால் இன்றைய கல்வி மூலம் நம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறதா? - சுந்தர ராமசாமி (சுய கல்வியைத் தேடி

கல்வித்துறையில் மாற்றங்கள் உருவாகுமா?
கொடுந்தொற்றுக் காலத்தில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி, என ஆராய்ச்சிப் படிப்பு வரை ஒவ்வொரு பிரிவு மாணவர்க்கும் ஒவ்வொருவிதமான பாதிப்பு. கல்விக்கூடங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருத்தல், வலைவகுப்பு தொடர்பானவை, தேர்வுகள், மேற்படிப்புச் சேர்க்கை எல்லாவற்றிலும் சிக்கல்கள். ஆசிரியர்களுக்கும் பலவிதமான பிரச்சினைகள். அவ்வப்போது எழும் பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வு கண்டால் போதாது. இவற்றை ஆழ்ந்து ஆராய்ந்து தெளிவான முடிவுகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது. 2020 -2021ஆம் கல்வியாண்டு முழுவதும் பலவிதக் குழப்பங்களோடு கழிந்து போயிற்று. தொற்றின் மூன்றாம் அலை பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் 2021-2022ஆம் கல்வியாண்டையாவது முறையாகத் திட்டமிட்டால் எதிர்கொள்வது எளிதாக இருக்கும்.

தேடலில் பிறந்த அர்ப்பணம்
சென்னை மாநிலக் கல்லூரி; 1956ஆம் ஆண்டு; மேல் தளத்தில் இருக்கும் மாணவியரின் அறை; உள்ளிருக்கும் தேவிகளின் தரிசனத்திற்காக எந்நேரமும் வராந்தாவில் அலைந்து கொண்டிருக்கும் மாணவரின் கண்களில் படாமல் இருப்பதற்காக எப்பொழுதும் மூடப்பட்டிருக்கும் அறையின் கதவுகளைத் தள்ளித்திறந்து கொண்டு, கொடி போன்ற பதினேழு வயதுப் பெண் நுழைகிறாள்

காலச்சுவடும் நானும்
கோற்று கோதும் வண்ணத்துப் பூச்சி' இது என் முதல் கவிதைத் தொகுப்பு. பட்டியலில் ஊழல் கூடாது என்பதற்காக இதை ஒளிப்பதில்லை. ஆனால் என்னளவிலும் வாசகர் அளவிலும் 'உறுமீன்களற்ற நதி தான் என் முதல் கவிதைத் தொகுப்பு. இதை 2008இல் காலச்சுவடு வெளியிட்டது. இப்போது ஐந்தாம் பதிப்பாக விற்பனையில் உள்ளது.

விடுதலை உணர்வின் போராட்டம்
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசத்தில் 'தனது ஆதிக்கத்தைச் செலுத்தியவர்களில் ஐரோப்பியர்கள் முக்கிய இடத்தினைப் பெறுகிறார்கள். அவர்களின் வருகைக்கும் முன்பு முகலாயப் பேரரசு இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளை ஆட்சி செய்திருந்ததாலும், இத்தேசம் மதப் பிரிவினையாலும் ஜாதி பேதத்தாலும் பல சிற்றரசுகளாகச் சிதறுண்டு கிடந்ததே உண்மை.

மீனாட்சிசுந்தரம் என்னவானார்?
உ.வே.சாமிநாதையர் தம் ஆசிரியராகிய மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளைமீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்பதை நாடறியும். அதை மிதமிஞ்சிய குருபக்தி என்றே சொல்லலாம்.

போராட்ட வரலாற்றின் வரைபடம்
சாலையிலிருந்து தள்ளி உள்ளொடுங்கியிருக்கிறது பொடியன்குளம் கிராமம். சாலைக்கு நடந்து வந்தாலும் அவர்களுக்கெனப் பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்து தரப்பட்டிருப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள் மீது அரசு எந்திரங்கள் நிகழ்த்திவரும் வழமையான புறக்கணிப்புகளே இவை. இதனால் பொடியன்குளம் மக்கள் சற்றுத் தள்ளியிருக்கும் மேலூருக்கு நடந்து சென்று பேருந்து ஏற வேண்டியிருக்கிறது. பேருந்து ஏறவரும் அவ்வூர் மக்களை அங்கிருக்கும் அதிகாரச் சாதியினர் சீண்டி வருகின்றனர்.

போராட அழைக்கிறானா கர்ணன்?
"நாம பஸ்ஸை நிறுத்தினது கூட அவங்களுக்குப் பிரச்சினை இல்ல, தலைப்பாகை கட்டியிருக்கறதுதான் பிரச்சினை... நிமிந்து நிக்கறதுதான் பிரச்சினை..."பொடியன்குளம் என்னும் ஊரின் தலைவர் பேசும் இந்த வசனம்தான் கர்ணன் படத்தின் ஆதாரமான உணர்வு.

மூக்கையா
இந்தியக் கலை மரபில் 'தனிப்பட்ட கலைஞனின் சுயவெளிப்பாட்டு ஊடகமாக மட்டுமே கலை இருந்ததில்லை. ஆன்மீகம், அரசியல், சமயம் போன்ற அதிகாரக் குழுக்களின் உணர்வையே அது பிரதிபலித்திருக்கிறது. ஓவியங்களும் சிற்பங்களும் அவ்வாறே உருவாக்கப்பட்டன. கீழைத் தேய நாடுகளின் எல்லா இனக் குழுக்களுக்கும் இந்தத் தன்மையானது பொருந்தி வரக் கூடியதுதான்.

தனிமனிதனுடைய விடுதலையே சமூக விடுதலை
புதுச்சேரியைச் சேர்ந்த நாகரத்தினம் கிருஷ்ணா தற்போது பாரிஸில் வசிக்கிறார். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராக அங்கு செயல்படுகிறார். 'லெ கிளேஸியோ', 'பிரான்சுவாஸ் சகன்', 'அல்பர் கமுய்' போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை பிரஞ்ச் மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஓய்வறியா மொழிப்பறவை
இடுங்கிச் சுருங்கிய சிறிய கண்கள். ரொம்ப அருகில் நின்று கேட்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் மிகவும் மெல்லிய தொனி. சத்தம் வெளியில் கேட்காத வண்ணம் அமைந்த குரல். எப்போதும் சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருப்பது போன்ற முக அமைப்பு.

காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 36 ஆண்டுக்கால ஆசிரியப் பணியை நிறைவு செய்து 2012ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஓய்வு பெற்ற பிறகு, மேற்கொண்டு என்ன செய்வது, பொழுதை எப்படி பயனுறக் கழிப்பது என்ற சிந்தனை என்னிடம் மேலோங்கியிருந்தது.

தேஷ் ராகம்
நான்கு நட்சத்திர ஓட்டல் அறையின் ரசாயன நறுமணத்தை ஆழ்ந்து , ஷூக்களைக் கழற்றி ரப்பர் செருப்பை அணிந்து, வெளியே வந்தேன். மெல்லிய வெளிச்சம் நிரவிய நீண்ட வராந்தா. ஐந்து மாடிக் கட்டடத்தின் நாலாவது மாடியில் அமைந்திருந்தது என் அறை வழக்கமாகத் தங்கும் ஓட்டல்.

சிவந்த மண்ணில் படரும் காவி
மேற்கு வங்கத்தின் அரசியல், சமூகச் சூழல் குறித்துப் பொதுப் புத்தியில் ஊறியிருக்கும் கதையாடல்களைக் கடந்து நோக்கும்போது வங்கத்தில் பாஜகவின் எழுச்சியைப் புரிந்து கொள்ள முடியும். இந்தத் தேர்தலில் மமதா வென்றாலும் அது மதச்சார்பற்ற அரசியலின் வெற்றி அல்ல என்றும் புரிந்து கொள்ள முடியும்.