மட்ட மத்தியானத்தில் முகூர்த்தம். வேலை நாள் வேறு. குடும்பம் கொந்தளித்துவிடும் என்பதால் நானும் இன்னொரு நண்பரும் சேர்ந்து போவது என்று தீர்மானித்திருந்தோம். இப்போதெல்லாம் திருமணங்களில் குடும்பத்தினரைத் தவிர முகூர்த்த நேரத்தில் யாரும் இருக்கவேண்டுமென்று நினைப்பதில்லை. திருமணவீட்டாரும் எதிர்பார்ப்பதில்லை. 10 மணிக்கு முகூர்த்தமென்றால் 12 மணிக்குமேல் போனால் சரியாக இருக்கும் என்று திட்டமிட்டுக்கொண்டோம். வேறென்ன, சாப்பிட சரியான நேரமாக இருக்கும் என்பதுதான். நாங்கள் மண்டபத்திற்குள் நுழைந்தபோது கூட்டம் அலை மோதியது. பெரிய மண்டபம். அளவில்லாத ஆடம்பரம். ஒரே மகனல்லவா! மணமக்களை வாழ்த்தி பரிசோ, பணமோ கொடுத்துவிட்டு பின் விருந்துண்ணச் செல்வது என்பதெல்லாம் கலாவதியாகி பலகாலமாகிவிட்டது. இப்போதெல்லாம் திருமணங்களில் கலந்துகொள்வதில் சில அநாகரிகமான நடைமுறைகள் சகஜமாக புழக்கத்திற்கு வந்துவிட்டன. இப்படி சாப்பிட்டபின் மணமக்களை வாழ்த்துவதும் அவற்றில் ஒன்று. வாசலில் சில சிறுமிகள் பட்டுப்பாவாடையில் கல்கண்டு, பன்னீர் செம்பு சகிதம் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்ததைத் தவிர ‘வாங்க..' என்று வரவேற்க யாருமில்லை. திருமணவீட்டாரின் குடும்பத்தினர் யாராவது வாசலில் நின்று கைகூப்பி ‘வாங்க... வாங்க‘ என்று வரவேற்பதெல்லாம் பழைய கதை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மேடையில் இருப்பார்கள். புகைப்படம் மற்றும் வீடியோக்களில் இருந்தாகவேண்டுமே. விருந்தினர்களை வரவேற்பதைவிட வரலாறு முக்கியமல்லவா?
மணமக்களை வாழ்த்த நின்றிருந்த நீண்ட வரிசையைப் பார்த்த நண்பர், வாங்க.. சாப்பிட்டுவிட்டு அப்புறம் பார்க்கலாம்.. என்றார். அப்புறமென்ன. ‘பாம்பு திங்கிற ஊருல நடுத்துண்டம் நமக்கு' என்று போவதுதானே தமிழர் நாகரிகம். மெல்ல நகர்ந்து பந்தி நடக்கும் கீழ்த்தளத்திற்குச் சென்றோம்.
この記事は Andhimazhai の May 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Andhimazhai の May 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.