அப்போ குமாரசாமி ராஜா முதலமைச்சர். மாநிலம் முழுக்க அரிசிப் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆறு அவுன்ஸ்தான் ஒரு குடும்பத்துக்கு அரிசி தரமுடியும்னு குமாரசாமி ராஜா சொல்லிட்டார். தி.மு.க. தலைவர் அண்ணாவோ, திராவிட நாடு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு எங்கள் ஆதரவென்று சொன்னார். வட தமிழ்நாட்டில் காமன்வீல் கட்சியென எஸ்.எஸ். ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயகர்னு ரெண்டு பேர் நடத்திகிட்டிருந்த கட்சி. அவங்க அண்ணாவோட அறிவிப்பை ஏற்றுக்கொள்வதா கையெழுத்து போட்டுத் தந்தாங்க.
காங்கிரஸ் கட்சி தரப்பில பிரச்சாரம் செஞ்சவங்க, எங்களுக்கு வாக்கு அளிக்கலைனா நாடு சிதறுண்டு போகும்னு பேசினாங்க. காங்கிரசுக்கு எதிர்ப்பா இருந்தவங்க, ஆறு அவுன்ஸ் கட்சிக்கா வாக்களிக்கப் போறீங்கனு பிரச்சாரம் செய்தாங்க. பெரியாரோ காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கணும்னு பேசினார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் ஆதரவு தந்தார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாரும் அப்போ சிறையில இருந்தாங்க.
அப்போ ஆந்திரப் பகுதி நம்ம சென்னை மாகாணத்தோடதான் இருந்தது. ஆந்திர மாநிலக் கோரிக்கைக்காக பெரிய போராட்டம் நடந்துகிட்டிருந்தது. அந்த சமயம் அந்தப் பகுதிக்குப் பிரச்சாரத்துக்குப் போனாரு, ராஜாஜி. அவர் மேல தார் வீசினாங்க. அவர் சொன்னாரு, ‘ தாரினால் ஒரு மாநிலம் கிடைக்குமானால் என் மீது தாரை வீசுங்கள். தார் வீச்சை நான் தாங்கிகிட்டா உங்களுக்கு தனி மாநிலம் கிடைச்சிடுமா'ன்னு கேட்டார்.
பெரியாருடைய விடுதலை ஏட்டுக்காக அப்போது சென்னையில் பணியாற்றினேன். ஐயாவுடைய கூட்டங்களில் அதிகமாகக் கலந்து கிட்டு அவருடைய பேச்சை செய்தியாக்குவேன். அவர்கூடவே தங்கியிருந்தேன். மௌண்ட் ரோடு, மீரான் சாகிபு தெரு வீட்டுல இருந்து சிந்தாதிரிப்பேட்டை, பாலகிருஷ்ண பிள்ளைத் தெருவில விடுதலை அலுவலகம் அப்போது... கை ரிக்ஷாவில் அவர் ஏறிப்போவார். என் தோள் மீது கைவச்சுதான் ஏறுவார். அவர் பின்னாடியே சைக்கிள்ளயே போயி அவர் இறங்கும்போது அங்க இருப்பேன்.
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.