அம்மாவுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம். அதில் ஒரு பகுதியை பிள்ளைகளுக்கு அனுப்புகிறார். அண்ணனுக்கு கூலி வாரம் ரூ.1500 கிடைக்கும். வீட்டு வாடகை கொடுத்து, அன்றாட செலவுகளைத் தாக்குப்பிடித்து வாழ்ந்தும் தபித்தாவுக்கு, தான் படித்த தனியார் பள்ளியில் பீஸ் கட்ட முடியவில்லை.
எனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இரண்டு மாதம் இருக்கும் போது அருகாமையில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் சேர்ந்தார். தபித்தாவின் சூழ்நிலை அறிந்து ஆசிரியர்கள் கூடுதல் அக்கறை எடுத்து பாடங்கள் நடத்தினர். தேர்ச்சியும் பெற்றார்.
இந்த நேரத்தில் தபித்தாவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.13 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்டட் ரேஸ் சைக்கிளை வழங்கியுள்ளார்!
எதற்காக இந்த சைக்கிள்?
2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 14 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் (Track) வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக்கில் 07.01.2023 முதல் 10.01.2023 வரை நடைபெற்ற 27வது தேசிய அளவிலான மிக இளையோர் (மகளிர்) சைக்கிளிங் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கியுள்ளார்.
சமீபத்தில் தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று, இப்பொழுது National Centre of Excellence (NCOE) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதன்மூலம் ஷா தபித்தா பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு ஆசைப்பட்டார். அதற்கு ஏதுவாக இப்போட்டிகளுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரேஸ் சைக்கிள் வேண்டும். என்ன செய்யலாம்?
மார்ச் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பினார். எண்ணி மூன்றே மாதம். கடந்த 22ம் தேதி மாணவியை சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் வரவழைத்து தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூபாய் 13.99 லட்சம் மதிப்பீட்டிலான Argon 18 PRO (Complete bike) Competition Wheel Set, Mavic Front Five Spoke Wheel Set and Mavic Rear Dic Wheel set சைக்கிளை வழங்கியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி.
この記事は Kungumam の 09-06-2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam の 09-06-2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.