நீங்கள் ஒரு நல்ல ஷூ வாங்கலாம் என கூகுளில் தேடுகிறீர்கள். உடனே நாம் எந்த வலைத்தளம் சென்றாலும் ஷூ பற்றிய விளம்பரங்கள் வரும். எந்த செயலியைத் திறந்தாலும் ஷூ பற்றிய விளம்பரங்கள் குவியும்.
இதுதான் இணையத்தில் உள்ள சிக்கல்.
நாம் பயன்படுத்தும் இணையம் என்பது முழுக்க முழுக்க நம் அடையாளங்களை, நம்மைப் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொண்டே இருக்கும். திரட்டப்பட்ட தகவல்கள் இணைய நிறுவனங்களுக்கு பகிரப்படும்.
அப்படித்தான் நீங்கள் ஷூவைப் பற்றி இணையத்தில் தேட அந்தத் தகவல் பிற இணைய தளங்களுக்கும், செயலிகளுக்கும் பகிரப்பட்டுவிடும். இல்லை... இல்லை விற்கப்பட்டுவிடும்.
அதாவது இணையத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளைக் குறித்து தேடும்போது நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் ஆரம்பித்து எந்த இடத்தில் உள்ளீர்கள் என்பது வரை பல்வேறு தகவல்களை சம்பந்தப்பட்ட பொருளின் நிறுவனங்கள் திரட்டிவிடும்.
நீங்கள் ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப் பயன்படுத்துகிறீர்கள்தானே? அதை எல்லாம் பணம் கொடுத்தா பயன்படுத்துகிறீர்கள்?
இல்லை. அப்படி என்றால் அந்நிறுவனங்கள் பல கோடி பயனாளர்களின் தகவல்களைச் சேமித்து வைக்க பல லட்சம் டாலர்களை ஏன் செலவு செய்ய வேண்டும்..? அவர்களுக்கு வருமானம் எப்படிக் கிடைக்கிறது / வருகிறது..?
நீங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலியைப் பயன்படுத்தும் போது உங்களுக்கு காட்டப்படும் விளம்பரங்களில் இருந்து அந்நிறுவனங்களுக்கு வருமானம் வருகிறது.
ஆனால், விளம்பரங்கள் கொடுக்கும் நிறுவனங்கள் தாங்கள் காண்பிக்கும் பொருளை கட்டாயம் வாங்க வைக்க அவர்களுக்கு உங்களைப் பற்றிய பல்வேறு தகவல்கள் தேவைப்படும். உங்களைப் பற்றி எவ்வளவு தகவல்கள் கிடைக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய தேவை என்ன என்பதை கணிக்க முடியும்.
この記事は Kungumam の 07-07-2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam の 07-07-2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.