இந்திய fantasy படங்களில் இது புது முயற்சி!
Kungumam|21-07-2023
‘ஒரு ஓட்டு அப்படி என்ன செய்துவிடும்’ என்ற கேள்விக்கு எளிமையாகவும் நிதர்சனத்துடனும் பாமரனுக்கும் புரியும்படி வகுப்பெடுத்து, ‘ஓட்டுக்கு பணம் வாங்காதீர். அதனால் இவ்வளவு விளைவுகள் உள்ளன’ என தெளிவாக எடுத்துரைத்த படம் ‘மண்டேலா’.
ஷாலினி நியூட்டன்
இந்திய fantasy படங்களில் இது புது முயற்சி!

அப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வினின் அடுத்த படைப்புதான் ‘மாவீரன்’.

முதல் படம் கொடுத்த பெயரும் புகழும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் ஹேர் ஸ்டைல், சரும நிறம், லுக் என படத்திற்கு அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. ரிலீஸ் பரபரப்பிற்கு இடையே நம்மிடம் பேசினார் ‘மண்டேலா’ புகழ் ‘மாவீரன்’ பட இயக்குநர் மடோன் அஷ்வின்.

திரைக்கதை எழுத்தாளர் அஷ்வின் முதல் ‘மாவீரன்’ அஷ்வின் வரை உங்களைப் பற்றி சொல்லுங்க?

நாகர்கோவில்தான் எனக்கு பூர்வீகம். அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஆசிரியர்கள். ஸ்கூல் படிப்பு எல்லாம் அங்கேதான். பிறகு சென்னை எம்ஐடியில் கல்லூரிப் படிப்பு. அதையும் முடிச்சதுக்குப் பிறகு பெங்களூருவில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்துட்டு இருந்தேன்.

காலேஜ்ல படிக்கும் பொழுது சினிமா மேல நிறைய ஆர்வம். பெங்களூருவில் வேலை செய்திட்டு இருக்கும்போது சினிமாவுக்காக ஒரு கிராஷ் கோர்ஸ் படிச்சேன். அதற்கு ஏற்ப ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்துக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முதல் விதை போட்டவர் பிரபு சாலமன் சார். அவர் கூட சில காலம் பயணம் செய்தேன்.

பெங்களூருவில் சினிமாவுக்காக ஒரு கோர்ஸ் செய்தப்ப, அங்கு எனக்கு பயிற்சியாளரா சஞ்சய் நம்பியார் சார் இருந்தார். ஒரு ஷார்ட் ஃபிலிம் ஸ்கிரிப்ட் எழுதிட்டு போய் அவர்கிட்ட காண்பித்தேன். அவர்தான் ‘சினிமா பார்த்து கதை எழுதாதே. உன் வாழ்க்கையில் நீ என்ன பார்க்கறியோ அதை கதையாக மாத்து’னு சொன்னார்.

தொடர்ந்து நிறைய குறும்படங்களுக்கு கதை எழுத ஆரம்பிச்சேன். இந்த நேரத்தில்தான் நண்பர் நித்திலன் ‘குரங்கு பொம்மை’ படத்திற்கு என்னை வசனம் எழுதச் சொன்னார். எனக்கு ஆரம்பத்தில் தயக்கம். ‘சும்மா எழுது மாப்ள, உன்னால் முடியும்’னு ஊக்கம் கொடுத்தார் நித்திலன். முதல் எழுத்து பெரிய ஸ்கிரீனில் அங்கேதான் ஆரம்பித்தது.

‘மாவீரன்’ - இந்தப் பெயருக்கே பெரிய வரலாறு உண்டு... இந்தப் படம் என்ன வரலாறு கொடுக்கப் போகிறது?

この記事は Kungumam の 21-07-2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Kungumam の 21-07-2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

KUNGUMAMのその他の記事すべて表示
ஹியூமன் வாஷிங் மெஷின்
Kungumam

ஹியூமன் வாஷிங் மெஷின்

மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.

time-read
1 min  |
20-12-2024
வீட்டை உடைக்கும் இளைஞர்!
Kungumam

வீட்டை உடைக்கும் இளைஞர்!

‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

time-read
1 min  |
20-12-2024
ஏஐ டாய்லெட் கேமரா!
Kungumam

ஏஐ டாய்லெட் கேமரா!

இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.

time-read
1 min  |
20-12-2024
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
Kungumam

விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

time-read
1 min  |
20-12-2024
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
Kungumam

நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!

பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

time-read
2 分  |
20-12-2024
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 分  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 分  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 分  |
20-12-2024