அதனால்தான் வாசனைத் திரவியங்களின் குடுவைகள் விதவிதமான வடிவங்களில், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக இருக்கும். குடுவைக்காகவே பெரிய முதலீட்டைச் செய்திருப்பார்கள். மட்டுமல்ல, குடுவைக்காகவே வாசனைத் திரவியங்களை வாங்குபவர்கள் கூட இருக்கின்றனர். குடுவை வடிவமைப்பிற்குப் பிறகு வாசனைத் திரவிய நிறுவனங்கள் அதிகமாக கவனம் செலுத்துவது, விளம்பரம்தான்.
நறுமணத்துக்குப் பிறகு விளம்பரமும், குடுவைகளின் அழகும்தான் வாசனைத் திரவியங்களின் விற்பனைக்கு முக்கிய காரணங்கள். இந்நிலையில் விளம்பரமும் இல்லாமல், குடுவைக்கும் முக்கியத்துவம் தராமல் முழுக்க முழுக்க வாசனைத் திரவியத்தை மட்டுமே நம்பி, விற்பனையில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் ஒரு பிராண்ட், ‘லே லெபோ’. ஃபிரான்ஸில் அமைந்துள்ள ஓர் இடம், கிராஸ். உலக வாசனைத் திரவியங்களின் தலைநகரம் என்று புகழப்படுகிற கிராஸில் உருவாகி, நியூயார்க்கில் வளர்ச்சியடைந்த ஒரு பிராண்ட், இது.
இந்த பிராண்டின் வாசனைத் திரவியங்கள் சாதாரணமான, ஒரே மாதிரி இருக்கும் குடுவையில்தான் கிடைக்கும்; விளம்பரமும் கிடையாது. ஆனால், ‘லே லெபோ’வின் வாசனைத் திரவியம் உலகின் முன்னணி பிராண்டுகளுடன் சவால் விடுபவை. அதனால் ‘லே லெபோ’வை புரட்சி பிராண்ட் என்று அழைக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள லுகானோ எனும் நகரத்தில் பிறந்தவர், எடி ரோச்சி. இத்தாலியர்கள் அதிகமாக வாழும் பகுதி இது. கெமிக்கல் எஞ்சினியரிங் படித்த எடிக்கு, கெமிக்கல் துறை சார்ந்த வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. அதனால் தனக்கு விருப்பமான வேலையைத் தேடி நாடு, நாடாக அலைந்தார்.
அவருக்குப் பிடித்த வேலை கிடைக்கவே இல்லை. 1999ல் பாரிஸுக்கு வந்தார். வேலை தேடுவதை விட்டுவிட்டு, அங்கே எம்பிஏ படித்தார். பிறகு ஃபிரான்ஸில் கோலோச்சிக் கொண்டிருந்த ஆடம்பர பிராண்டுகளான ‘லோரியல்’, ‘அர்மானி’யில் வேலை செய்தார். குறிப்பாக ‘லோரியலி’ல் வேலை செய்யும்போதுதான் ஃபேப்ரைஸ் பீனோட்டைச் சந்தித்தார் எடி.
この記事は Kungumam の 07-06-2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam の 07-06-2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.