செய்தி ஊடகமான மீடியாவிலிருந்து காட்சி ஊடகமான சினிமாவுக்கு வந்தவர். அறிமுகமான 'மேயாத மான்' படத்திலேயே தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர். தொடர்ந்து 'பொம்மை', 'ரத்னம்' என பல படங்கள் செய்தவருக்கு 'இந்தியன் - 2', 'டிமாண்டி காலனி - 2' போன்ற படங்கள் நற்பெயர் கொடுத்துள்ளன.
'டிமாண்டி காலனி - 2' அனுபவம் எப்படி இருந்துச்சு?
கமர்ஷியல் படத்தில் ஹீரோவுக்கு சமமா ரோல் கொடுத்த அஜய் ஞானமுத்துவுக்கு நன்றி. அஜய்யை, பேய்க்கதை ஸ்பெஷலிஸ்ட்னு சொல்லலாம்.
அருள்நிதி யதார்த்தமா பழகுவார். எதையுமே மனசுல வெச்சுக்கமாட்டார். யாரையும் புண்படுத்தமாட்டார். எதையாவது பேசிட்டு நான் அப்படி பேசியிருக்கக் கூடாதுல்லன்னு அப்பாவியா கேட்பார்.
'என்னைப் பத்தி எதாவது பேசுறதா இருந்தா தனியா பேசி கலாய்ங்க. மைக் முன்னாடி, பொதுவெளியில வேணாம்'னு சொல்லுவேன். மைக் முன்னாடி நின்னதும் விளையாட்டா முகத்தை என் பக்கம் திருப்புவார். அந்தளவுக்கு ஃபன் பண்ணுவார்.
பேய்க் கதையில் ரொம்ப தாமதமா நடிக்க ஆரம்பிச்சிருக்கீங்களே?
பேய்க் கதைகள் நிறைய வந்துச்சு. க்ளாஸுக்கு லேட்டாவர்ற ஸ்டூடண்ட் மாதிரி எல்லாரும் க்ளாஸ்ல உட்கார்ந்துட்டீங்களேப்பா என்பதுபோல இப்போ தான் ஆரம்பிச்சிருக்கேன்.
என்னுடைய முழுமுதல் பேய்ப் படம் என்றால் தெலுங்கில் நடித்துவரும் 'தாத்தா - 2'. அது வேற மாதிரி பேய்ப்படம். பேயை கண்ல காட்டமாட்டாங்க. ஹாரர் ட்ரீட்மென்ட் வேற லெவலில் இருக்கும்.
சொந்த வாழ்க்கையில பேய்க்கு பயந்த அனுபவம் உண்டா?
நாங்க பெரிய குடும்பம். அப்பா கூட பிறந்தவர்கள் அத்தை இல்லாம 6 பேர். வாண்டூஸ் அதிகம். அதுல ஒரு பெரியப்பா எங்க எல்லாரையும் உட்காரவைத்து பேய்க் கதை சொல்வார். நான் அவரை 'பேய் பெரியப்பா'ன்னு கூப்பிடுவேன். அந்தக் கால வீடுகளில் மச்சு அறைன்னு ஒண்ணு இருக்கும். அந்த அறையில் பண்டிகைக்கு செய்த பலகாரங்களை வெச்சிருப்பாங்க.
நாங்க அந்த ரூமுக்குள்ள போயிடக் கூடாது என்பதற்காக நெத்தில விபூதி பூசி கதை சொல்ல ஆரம்பிச்சுடுவார். அப்போலைட்டா பேய்பயம் இருந்துச்சு. வளர வளர, பெரியப்பா உருட்டுறார்னும், அவர் காப்பாத்த நினைச்சது உள்ள இருக்கிற முறுக்கு, லட்டைத் தானே தவிர எங்களை இல்லன்னும் தெரிஞ்சது.
この記事は Kungumam の 30-08-2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam の 30-08-2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
பெஞ்சல் புயல் மர்மம்...அரசை குற்றம் சொல்ல முடியாது!
ஒரு புயல் முழுமையாக கரையைக் கடந்தபின்பும் கூட தென்மேற்கு \" மற்றும் வடகிழக்குப் பருவங்களில் பெய்யும் மழை அதற்குக் கூடு தல் ஈரப்பதத்தையும் ஆற்றலையும் வழங்கலாம் என்பதை பெஞ்சல் புயல் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!
இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :
தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!
'பொண்ணுங்களோட கற்பனையா மட்டும் தான்டா நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது!' 'சூப்பர் மாமா...'
விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!
'சராசரியாக உலகளவில் இந்த சுமார் 140 பெண்கள் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
8 வயது உலக சாம்பியன்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு 'நவம்பர் மாதத்தின் மதிய வேளை. ஹைதராபாத்தில் உள்ள ஓர் அமைதியான, விசாலமான ஹால். அங்கே சதுரங்கப் போட்டி ஆரம்பமானது.ஒரு பக்கம் இந்தியாவின் முன்னணி சதுரங்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குகேஷ் அமர்ந்திருந்தார்.