‘கட்டா குஸ்தி’யில் கீர்த்தி கதாபாத்திரம் இவருடைய இன்னொரு முகத்தை காண்பித்தது. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் ‘தக் லைஃப்’ செய்கிறார். தீபாவளி வெடிச் சத்தம் அடங்கிய நிலையில் ஐஸ்வர்யா லட்சுமியிடம் பேசினோம்.
தொடர்ந்து வெற்றிக்கொடி பறக்க விடுகிறீர்களே..?
பெரிய சூத்திரமெல்லாம் கிடையாது. என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தை செலக்ட் பண்ண ரொம்ப டைம் எடுத்துக்க மாட்டேன். எப்படியென்றால், கதை கேட்கும்போது எனக்கு சில கேள்விகள் இருக்கும்.
அதற்கு திருப்திகரமான பதில் வரும்போது உடனே ஓகே சொல்லிடுவேன்.இந்தப் படத்தை ஓடிடியில் பார்க்க முடியுமா, என்னுடைய கதாபாத்திரம் கதையை நகர்த்த உதவுமா, என்னுடைய கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டாலும் படம் மக்கள் மத்தியில் சென்றடையுமா என்றெல்லாம் யோசிச்ச பிறகுதான் படங்களை கமிட் செய்கிறேன்.
தெலுங்கில் ‘அம்மு’ என்ற படம் செய்யும்போது எல்லோரும் ‘அது அழுத்தமான கதை. தெலுங்கில் இப்போதுதான் அறிமுகமாகிறீர்கள். உங்களால் அழுத்தமான கதை பண்ண முடியுமா’ என்று சந்தேகத்துடன் கேட்டார்கள். ஆனால், எனக்கு அந்தக் கதை ஒர்க்கவுட் ஆகும் என்ற நம்பிக்கை இருந்துச்சு. துணிச்சலோடுதான் அந்தக் கதையை செலக்ட் பண்ணினேன். படம் பெரிய வெற்றி. சவால்கள் இல்லையென்றால் வாழ்க்கை போரடித்துவிடும்.
காமெடி ரோலில் பின்னியெடுக்கிறீர்களே?
என்னுடைய நட்பு வட்டாரத்தில் நான்தான் கொஞ்சம் ஓவரா கலாட்டா பண்ணுவேன். என்னுடைய உண்மையான முகத்தை நீங்கள் இன்னும் திரையில் பார்க்கவில்லை. டிவி பேட்டிகளில் கூட சபை நாகரீகம் கருதி என்னை கன்ட்ரோல் செய்துகொண்டுதான் பேசுகிறேன்.
மலையாளத்தில் நீங்கள் வெற்றிகரமான நடிகை. தமிழில் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சினிமாவுக்கு வந்த சமயத்தில் சராசரி நடிகையாக, கிடைச்ச வாய்ப்பை நழுவ விடாமல் படங்களை கமிட் செய்த காலம் உண்டு. அந்தப் படங்களில் எனக்கான முக்கியத்துவம் குறைவாகவே இருந்துச்சு. அந்த சமயங்களில் எனக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்துச்சு. ஒண்ணு, வந்த வாய்ப்பை பண்ணணும்.
この記事は Kungumam の 22-11-2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam の 22-11-2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.