டூரிங் டாக்கீஸ்
Nakkheeran|July 31 - August 02, 2024
வடிவேலு கம்பேக்! "அரண்மனை 4" படம்‌ எதிர்‌ பார்த்ததை விட வசூலில்‌ சக்கப்போடு போட்டதால்‌, சுந்தர்‌.சி அடுத்ததாக பெரிய பொருட்செலவில்‌ கலகலப்பு 3' படத்தை தொடங்க திட்டமிட்டார்‌. ஆனால்‌ தற்போது அதற்கு முன்பாக சிறிய பட்ஜெட்டில்‌ ஒரு படம்‌ பண்ண முடி வெடுத்துள்ளார்‌. இதில்‌ அவரே ஹீரோவாக நடிக்க, முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கத்‌ திட்டமிட்டுள்ளார்‌. இதற்காக வடிவேலுவை இப்படத்தில்‌ கமிட்‌ செய்துள்ளார்‌. இருவரின்‌ காம்பினேஷனில்‌ ஏற்கனவே வெளியான வின்னர்‌, தலைநகரம்‌, நகரம்‌ மறுபக்கம்‌ உள்ளிட்ட படங்கள்‌ ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக அமைந்தது. அதனால்‌ அதை இந்தப்‌ படத்திலும்‌ கொடுக்க வேண்டும்‌ என பணியாற்றி வருகிறார்‌. அதோடு இப்படத்தில்‌ அவரது ரெகுலர்‌ டச்சான குத்துப்பாடலும்‌ இடம்பெறுகிறது. அதற்காக அவரது ஆஸ்தான கதாநாயகியாக மாறியுள்ள தமன்னா மற்றும்‌ ராஷி கண்ணா ஆகியோரிடம்‌ பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்‌. முதற்கட்ட படப்பிடிப்பை சமீபத்தில்‌ தொடங்கியுள்ளார்‌. இதில்‌ வடிவேலுவும்‌ கலந்து கொண்டுள்ளார்‌. விறுவிறு தனுஷ்! நடிகராக தனது கரியரை ஆரம்பித்த தனுஷ்‌, தொடர்ந்து தயாரிப்பாளர்‌, பாடகர்‌, இயக்குநர்‌ என அடுத்தடுத்து பயணித்து வருகிறார்‌. பா. பாண்டிக்குப்‌ பிறகு இரண்டாவதாக அவர்‌ இயக்கிய "ராயன்‌" படம்‌ சமீபத்தில்‌ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து மூன்றாவது படமாக "நிலவுக்கு என்‌ மேல்‌ என்னடி கோபம்‌' படத்தை இயக்கி முடித்துள்ளார்‌. இதில்‌ அவரது சகோதரி மகன்‌ பவிஷ்‌ ஹீரோவாக நடிக்க, அனிகா சுரேந்திரன்‌, பிரியா பிரகாஷ்‌ வாரியர்‌ உள்ளிட்ட பலர்‌ நடித்துள்ளனர்‌. இறுதிக்கட்ட பணிகள்‌ விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்‌ படத்தை தொடர்ந்து மீண்டும்‌ ஒரு படம்‌ இயக்கவுள்ளார்‌ தனுஷ்‌. இதில்‌ எஸ்‌.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ்‌, நித்யா மேனன்‌ உள்ளிட்ட பிரபலங்கள்‌ நடிக்கவுள்ளனர்‌. படப்பிடிப்பு அடுத்த மாதம்‌ இறுதியில்‌ அல்லது செப்டம்பர்‌ தொடக்கத்தில்‌ ஆரம்பிக்கப்‌ படவுள்ளது. உடனடியாக படப்பிடிப்பை தொடங்குவதால்‌, அதே வேகத்தில்‌ மொத்தப்‌ படப்பிடிப்பையும்‌ முடிக்க தனுஷ்‌ திட்டமிட்டுள்ளார்‌. பின்பு அடுத்தடுத்து அவர்‌ கமிட்‌ செய்துள்ள இந்தி படம்‌, மாரி செல்வராஜ்‌ படம்‌ என நடிக்கவுள்ளார்‌. இப்போது இளையராஜா பயோ-பிக்‌, சேகர்‌ கம்முலாவின்‌ குபேரா உள்ளிட்ட படங்களில்‌ நடித்து வருகிறார்‌ என்பது குறிப்பிடத்தக்கது. கமல் பேச்சுவார்த்தை! "திகிரேட்டஸ்ட்‌ ஆஃப்‌ ஆல்‌ டைம்‌' படத்தில்‌ நடித்துள்ள விஜய்‌, தற்போது அடுத்த படத்தின்‌ பணிகளில்‌ கவனம்‌ செலுத்தத்‌ தொடங்கிவிட்டார்‌. இப்படத்தை முடித்த பின்பு முழு நேர அரசியல்வாதியாக மாறவுள்ள விஜய்‌, இப்படத்தை கொஞ்சம்‌ கூடுதல்‌ கவனத்துடன்‌ அணுகி வருகிறார்‌. இப்படத்தை வினோத்‌ இயக்கவுள்ளார்‌. கமலை வைத்து வினோத்‌ இயக்கவிருந்த கதைதான்‌ தற்போது விஜய்‌ நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்‌ சொல்கின்றன. அரசியல்‌ கதைக்களத்தை இப்படம்‌ பேசுகிறது. அதனால்‌ தன்னுடைய அரசியல்‌ பிரவேசத்துக்கு சரியாக இருக்கும்‌ என எண்ணிய விஜய்‌, படத்தின்‌ பணிகளை வேகப்படுத்த வினோத்திடம்‌ சொல்லியுள்ளார்‌. வினோத்தும்‌ நடிகர்‌ நடிகைகள்‌ தேர்வு செய்வதில்‌ பிஸியாக இருக்க, ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்‌ மோகன்லாலை நடிக்க வைக்க முடிவு செய்து பேச்சுவார்த்தையும்‌ நடத்தினார்‌. ஆனால்‌ அது சுமுகமாக முடிய வில்லை. இதனால்‌ அந்த கதாபாத்திரத்திற்கு வேறொரு பெரிய நடிகரை தேடி வந்த வினோத்‌, கமல்‌ சரியாக இருப்பதாக எண்ணியுள்ளார்‌. இதை விஜய்யிடம்‌ கூற, அவரும்‌ கமலுக்கு ஓ.கே. என்றால்‌ எனக்கும்‌ ஒ.கே.தான்‌. மற்றபடி அவரை ஃபோர்ஸ்‌ செய்யவேண்டாம்‌ என கேட்டுக்கொண்டாராம்‌. ரிது ஹேப்பி! "அரண்மனை 4" படம் எதிர்பார்க்கப்பட்டதை விட வசூலில் சக்கப்போடு போட்டதால், சுந்தர்.சி அடுத்ததாக பெரிய பொருட்செலவில் கலகலப்பு 3' படத்தை தொடங்க திட்டமிட்டார்.
கவிதாசன்‌ ஜெ.
டூரிங் டாக்கீஸ்

வடிவேலு கம்பேக்!

ஆனால் தற்போது அதற்கு முன்பாக சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் பண்ண முடிவெடுத்துள்ளார். இதில் அவரே ஹீரோவாக நடிக்க, முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக வடிவேலுவை இப்படத்தில் கமிட் செய்துள்ளார். இருவரின் காம்பினேஷனில் ஏற்கனவே வெளியான வின்னர், தலைநகரம், நகரம் மறுபக்கம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக அமைந்தது. அதனால் அதை இந்தப் படத்திலும் கொடுக்க வேண்டும் என பணியாற்றி வருகிறார். அதோடு இப்படத்தில் அவரது ரெகுலர் டச்சான குத்துப்பாடலும் இடம்பெறுகிறது. அதற்காக அவரது ஆஸ்தான கதாநாயகியாக மாறியுள்ள தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பை சமீபத்தில் தொடங்கியுள்ளார். இதில் வடிவேலுவும் கலந்து கொண்டுள்ளார்.

விறுவிறு தனுஷ்!

この記事は Nakkheeran の July 31 - August 02, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Nakkheeran の July 31 - August 02, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

NAKKHEERANのその他の記事すべて表示
கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!
Nakkheeran

கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!

டெல்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் 'கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' என்று சொல்லி விட்டு பா.ஜ.க. வை ஆட்சி யமைக்கத் தேர்ந்தெடுக்குகிறார்கள்.

time-read
2 分  |
February 12-14, 2025
ஆன்மிகப் பாதை!
Nakkheeran

ஆன்மிகப் பாதை!

ரஜினிக்காக பல நாட்கள் சிந்தித்து ஒரு வசனத்தை உருவாக்கினேன். அதை அடித்தளமாக, அஸ்திவாரமாக வைத்துத்தான் 'தனிக்காட்டு ராஜா'வின் கதையை எழுதினேன்.

time-read
2 分  |
February 12-14, 2025
கைது பயத்தில் சீமான்!
Nakkheeran

கைது பயத்தில் சீமான்!

'ஹலோ தலைவரே, மீண்டும் அதிரடியாக 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி யிருக்கிறது தமிழக அரசு.\"

time-read
3 分  |
February 12-14, 2025
கைதி எண் 9658
Nakkheeran

கைதி எண் 9658

(21) உணவுப் பஞ்சமும் உளுத்த சோளமும்!

time-read
2 分  |
February 12-14, 2025
தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!
Nakkheeran

தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முகமாக தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸை துவக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரெங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.

time-read
2 分  |
February 12-14, 2025
வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!
Nakkheeran

வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!

\"எங்கள் அரசியல் கோட்பாடுகள் சரியென்று பட்டால் வாக்கு தாருங்கள்... அல்லது அவர்களுக்கே தாருங்கள்! எங்களை ரோட்டில் போட்டீர்கள்...

time-read
2 分  |
February 12-14, 2025
முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !
Nakkheeran

முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !

சுமார் 9,368 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பணிகளையும் நெல்லை மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கிற வகையிலும், கள ஆய்விற்காகவும் இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

time-read
1 min  |
February 12-14, 2025
அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?
Nakkheeran

அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் மூவர் கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

time-read
2 分  |
February 12-14, 2025
5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!
Nakkheeran

5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!

அ.தி.மு.க. தனது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை வேகமாக நடத்திவருகிறது. கடந்த 9ஆம் தேதி ஒரு தொலைக்காட்சியில் அறிவிப்பு ஒன்று திடீரென வெளியானது.

time-read
2 分  |
February 12-14, 2025
மாவலி பதில்கள்
Nakkheeran

மாவலி பதில்கள்

நீ முடியும்னு நினைச்சா முடியும்... நீ முடியாதுனு நினைச்சா முடியாது... அவ்வளவுதான் வாழ்க்கை எல்லாம் நீயே தான்...

time-read
2 分  |
February 12-14, 2025