தென்காசி மாவட்டத்தின் கரிசல்குளம் கிராமத்தில் மட்டும் சுமார் 3,100 ஏக்கர் விளைநிலங்களில் மக்காச்சோளம், சூரியகாந்தி மகசூல் தான் பிரதானம். 12 வருடங்களாக இவற்றை பயிரிட்டுவருகிறார்கள். எந்நேரம் எந்த நோய் தாக்கிப் பயிர்களை அழிக்குமோ என்கிற பதட்டத்தி லிருக்கிற அந்த விவசாயிகளிடம் பேசினோம்.
"தென்காசி மாவட்டத்தின் கீழ்க்கோடி பகுதியான கரிசல்குளம், குருவிகுளம் மற்றும் திருவேங்கடம் ஏரியாக்களை ஒட்டிய அத்தனை நிலங்களும் வானம் பார்த்த பூமிதான். மற்ற பகுதிகளைப் போன்று பணப்பயிரோ, பருத்தியோ போடமுடியாது. தண்ணீர் வரத்திருக்கும் பகுதிகளுக்குத்தான் அந்தப் பாசன முறை சாத்தியம். வருடத்தில் இரண்டு முறை பொழிகிற கோடையின் தென்மேற்குப் பருவ மழை, வடகிழக்குப் பருவ மழைதான் எங்களுக்குப் பிரதானம். அதனால்தான் கோடைக்கு ஏற்ற பயிரான மக்காச்சோளம் பயிரிடுவது. கரிசல் பூமியான இந்தப் பகுதியில் கிணற்றுப் பாசனம் கைகொடுக்காது. கிணற்றில் போதிய தண்ணீரும் ஊறுவதில்லை. உப்புத் தண்ணீரும் மக்காச்சோளப் பயிர் மகசூலுக்கு ஒத்துவராது.
அதனால் காலத்தில் பெய்கிற மழைத் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் என்பதால் புரட்டாசி மாதத்திலேயே மக்காச்சோள விதைகளை ஊன்றிவிடுவோம். பின்னர் தொடர்ந்து பெய்கிற மழையை விளைநிலங்கள் உள்வாங்கிக் கொள்வதோடு கம்மாய்களில் மழை நீர் வந்துவிடும். மற்ற பயிர்களைப் போல அதிக நீர் தேவையில்லை. மக்காச்சோளப் பயிர்கள் உள்வாங்கும் முதல் தண்ணீரிலேயே முட்டுக்கால் வரை வளர்ந்துவிடும். பின்னால் தேவைப்படும் தண்ணீரை மகசூலுக்குப் பயன்படுத்துவோம். களை போன்ற ஊடு முளைப்புகளிருக்காது. மக்காச் சோளம் நல்ல விளைச்சல் என்றால் ஏக்கருக்கு 30 குவிண்டால் கிடைக்கும்.
கரிசல்குளத்தில் மட்டும் 3100 டன், பிர்க்காவில் மொத்தம் 25 ஆயிரம் டன் என்று மக்காச்சோளம் விளைகிறது. ஒட்டியுள்ள பிற பகுதிகள் சேர்த்து மொத்தம் ஆயிரம் ஏக்கரில் இது பயிரிடப்படுகிறது. கரிசல்குளம், குருவிகுளம், 20 பிர்க்காவில் உள்ளவர்களில் 80 சதவிகிதம் பேர் விவசாயிகளே. மக்காச்சோளம் மகசூல்தான் எங்களின் ஒட்டுமொத்த ஜீவாதாரம்.
この記事は Nakkheeran の October 26-29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Nakkheeran の October 26-29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மருமகளிடம் அத்துமீறல்...கருக்கலைப்பு...-அ.தி.மு.க. நிர்வாகி டார்ச்சர்!
வீட்டுக்கு வந்த இளம் மருமகளிடம் பாலியல் அத்துமீறலிலும், கட்டாயக் கருக்கலைப்பிலும் ஈடுபட்டுக் கொடுமைப்படுத்திய தூத்துக்குடி மாநகரின் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவாகியிருக்கிறது.
அ.தி.மு.க.! டிசம்பரில் பூகம்பம்!
வைத்திலிங்கம், இளங்கோவன் ஆகியோர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டுகள் நாம் ஏற்கெனவே கூறியிருந்தபடி பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிராக ஒரு பெரிய அஸ்திரத்தை ஏவப் போகிறது என குறிப்பிட்டிருந்ததை உறுதி செய்வதாக உள்ளது.
நான் சிவன்-நீ சக்தி! பெண் பக்தர்களை சீரழித்த ஜக்கி!
ஜக்கியின் ஈஷா மையத்தில் மேலாடை யின்றி பெண் குழந்தைகளுக்கு தீட்சை கொடுக்கின்றார்கள்.
இஸ்ரேல் Vs ஈரான் போர்! பெட்ரோல் விலையேற்ற அச்சத்தில் இந்தியா!
2023 அக்டோபரில், இஸ்ரேல் -ஹமாஸ் போராளி களுக்கிடையே தொடங்கிய போரானது, காஸா பகுதியி லுள்ள 34,000 பேருக்கும்
சர்ச்சையில் வாரியக் குடியிருப்பு? -அரசு கவனிக்குமா?
சேலத்தை அடுத்த கருப்பூர் அருகே, கோட்டகவுண்டம்பட்டியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், சேலம் கோட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 216 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பயிர்களைத் தாக்கும் அமெரிக்க ராணுவ படைப்புழு! அச்சத்தில் விவசாயிகள்!
அமெரிக்கன் மிலிட்டரி வார்ம் (AMERICAN MILITARY WARM) எனப்படும் அமெரிக்க ராணுவ படைப்புழு அடையடையாய் பயிர்களைத் தாக்கி நாசம்செய்வதால் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள் தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம், கரிசல்குளம், குருவிகுளம் பிர்க்கா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதி வேளாண் மக்கள்.
பங்கு தருவதில்லை! குமுறும் கவுன்சிலர்கள்!
மாநகராட்சி கூட்டம் நடக்கும்போது செய்தியாளர்கள் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என வேலூர் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதத்திலுள்ள திராவிடத்தை எதிர்க்க சீமானுக்கு நெஞ்சுரம் இருக்கிறதா? -தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை!
தூர்தர்ஷன், சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கொண்டாடப்பட்ட இந்தி மாத நிறைவு நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆ கலந்துகொண்டார்.
மாவலி பதில்கள்
நல்ல உறவுகள் என்பது கடிகார முள்களைப் போன்றது அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை... ஆனால் தொடர்ந்து ஒன்றுக்கொன்று நல்ல தொடர்பில்தான் எப்போதுமே இருக்கும்!
மறுக்கப்படும் வேலை வாய்ப்பு! குமுறும் மக்கள்!
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமி ஷன் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 4 தேர்வுப் பணிகளில் 15 ஆயிரம் பேர் வரை நிரப்பும் அளவுக்கு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் இல்லை என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.