CATEGORIES
இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ஏவுகணை தாக்குதல்
யேமனில் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்தி வரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனா்.
10 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது.
டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு முயற்சி
அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் ராஜிநாமா: தில்லி முதல்வர் கேஜரிவால்
'முதல்வர் பதவியை அடுத்த இரண்டு நாள்களில் ராஜிநாமா செய்ய உள்ளேன்' என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு: ஆய்வு செய்ய 13 பேர் குழு
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை மறுஆய்வு செய்ய 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை அமைத்தது.
நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் மீட்பு - தமிழக அரசு
உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழா்களும் காயம் ஏதுமின்றி, பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தினர் ஊடுருவலால் பெரும் அச்சுறுத்தல் - ஜார்க்கண்டில் பிரதமர் மோடி
ஜார்க்கண்டில் வாக்கு வங்கி அரசியலுக்காக, வங்கதேசத்தினர் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கயாக்களின் ஊடுருவலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான மாநில அரசு அனுமதிக்கிறது; இது, இந்த மாநிலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உக்ரைன் கோரிக்கை நிராகரிப்பு
தாங்கள் வழங்கியுள்ள ஏவுகணைகளைக் கொண்டு ரஷியாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையை அமெரிக்காவும் பிரிட்டனும் நிராகரித்துள்ளன.
பாகிஸ்தானை 2-1 என வீழ்த்தியது இந்தியா
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் கடும் சவாலுக்குப் பிறகு பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5-ஆவது தொடர் வெற்றியைப் பதிவு செய்தது நடப்பு சாம்பியன் இந்தியா.
இந்திய ஆடவர், மகளிர் அணிகள் 'ஹாட்ரிக்' வெற்றி
ஃபிடே 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தன.
நாட்டின் முதல் 'வந்தே மெட்ரோ' சேவை: பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தின் அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் பிரதமர் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைக்க உள்ளார்.
மணிப்பூர் செல்வதை கவனத்துடன் தவிர்க்கும் பிரதமர்
'மணிப்பூர் செல்வதை பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவனத்துடன் தவிர்த்து வருகிறார்' என்று காங்கிரஸ் சனிக்கிழமை விமர்சித்தது.
மேற்கு வங்கம்: போராட்ட களத்தில் மருத்துவர்களுடன் முதல்வர் மம்தா சந்திப்பு
பெண் மருத்துவரின் பாலியல் கொலைக்கு நீதி கேட்டு தொடர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர் களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேராட்டகளத்தில் சனிக்கிழமை நேரில் சந்தித்து, பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.
ஹரியாணாவில் 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி: பிரதமர் மோடி
ஹரியாணாவில் தொடர்ந்து 3-ஆவது முறை பாஜக ஆட்சியமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
அதிகாரத்தில் பங்கு என்பது நீண்ட கால நிலைப்பாடு
அதிகாரத்தில் பங்கு விடுதலைச் என்பது சிறுத்தைகள் கட்சியின் நீண்ட கால நிலைப்பாடு என அந்தக் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
நாட்டிலேயே நேர்மையற்ற கட்சி காங்கிரஸ்: பிரதமர் மோடி
‘நாட்டிலேயே நோ்மையற்ற கட்சி காங்கிரஸ்; அக்கட்சியின் ‘அரச குடும்பம்’தான், நாட்டின் மிகப் பெரிய ஊழல் வம்சம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்த இலங்கை அரசைக் கண்டித்து ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்
விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்குமொட்டையடித்த இலங்கை அரசைக் கண்டித்து, ராமேசுவரத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரிடர் பாதிப்பு பகுதிகளில் முன்கூட்டியே மீட்புப் படை
பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்புப் படைகளை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டுமென தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
மெரீனா நீச்சல் குளத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
மெரீனா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு, சீரமைப்புப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் சனாதனத்துக்கு எதிரான குரல்கள் அமைதியாகிவிட்டன
தமிழகத்தில் சனாதனத்தை விமர்சித்தவர்களின் குரல்கள் நாளடைவில் அமைதியாகிவிட்டன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ரூ.7,616 கோடி அமெரிக்க முதலீடுகள் முழுமையாக நிறைவேறும்: சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் உறுதி
அமெரிக்க பயணம் மூலம் ஈர்க்கப்பட்ட ரூ.7,616 கோடி முதலீடுகள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும் என்று, சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
6 பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷியா உத்தரவு
தங்கள் நாட்டில் உளவு பாா்த்ததாகக் கூறி, பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த ஆறு தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற ரஷியா உத்தரவிட்டுள்ளது. கியொ் ஸ்டாா்மா்.
ஐஸ்லாந்து, செக் குடியரசை வீழ்த்தியது இந்தியா
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ஆவது சுற்றிலும் ஓபன், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன.
அதானி குழும பிரதிநிதிக்கு சொந்தமான ரூ.2,610 கோடி முடக்கம்
அதானி குழுமத்தின் பிரதிநிதியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக தைவானைச் சோ்ந்தவரின் ரூ.2,610 கோடியை ஸ்விட்சா்லாந்து முடக்கியுள்ளது.
இந்தியாவின் கருத்துகளை கேட்க தயாராக இருங்கள்: ஜெய்சங்கர்
‘இந்தியாவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மற்ற நாடுகள் கருத்து தெரிவிப்பதால் கவலையில்லை.
சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்
சேத்தியாதோப்பு -விக்கிரவாண்டி வழியாக சென்னை செல்லும் புறவழிச்சாலையில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் சரிசெய்யப்பட்டு, விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும் என்றாா் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி.
சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்
மாநிலங்களில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டுமென நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு நீதிமன்றத்தில் ஆஜர்
அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப் பாவு, சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார்.
தொண்டர்களின் நியாய உணர்வுக்கு மதிப்பளிப்பேன்
தொண்டா்களின் குரலில் ஒலிக்கும் நியாயமான உணா்வுக்கு மதிப்பளிப்பேன் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.