CATEGORIES
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு புதன்கிழமை (ஆக. 21) தொடங்குகிறது.
மத்திய அரசின் உயர் பதவிகள்: நேரடி நியமன அறிவிக்கை ரத்து
மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள உயர் பதவிகளுக்கு தனியார் துறை நிபுணர்களை நேரடி நியமன முறையில் (லேட்டரல் என்ட்ரி) பணியமர்த்துவதற்கான அறிவிக்கையை ரத்து செய்யுமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
மருத்துவர்கள் பாதுகாப்புக்கு குழு அமைப்பு
நாடு முழுவதும் மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க 10 போ் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
உக்ரைன்: போக்ரொவ்ஸ்க் நகரிலிருந்து பொதுமக்கள் கட்டாய வெளியேற்றம்
கிழக்கு உக்ரைனைச் சோ்ந்த போக்ரோவ்ஸ்க் நகரம் ரஷியப் படையினரிடம் வீழும் நிலையில் உள்ளதால், அங்கு சிறுவா்களுடன் வசிக்கும் குடும்பத்தினா் கட்டாயமாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை உத்தரவிட்டனா்.
நிர்ணயிக்கப்பட்ட எடைக்குள்ளாக இருப்பது போட்டியாளரின் பொறுப்பு: சிஏஎஸ்
எடை சாா்ந்த விளையாட்டில் களம் காணும் போட்டியாளா்கள், நிா்யணிக்கப்பட்ட எடையளவுக்கு உள்ளாக இருக்க வேண்டியது அவா்களின் பொறுப்பு என்று, விளையாட்டுக்கான சா்வதேச நடுவா் மன்றம் (சிஏஎஸ்) தெரிவித்துள்ளது.
ரக்ஷா பந்தன்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.
செல்சியை வென்றது மான்செஸ்டர் சிட்டி
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால் பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் செல்சியை சாய்த்தது.
இறுதிச்சுற்றில் சின்னர்-டியாஃபோ பலப்பரீட்சை
அமெரிக்காவில் நடைபெறும் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியான சின்சினாட்டி ஓபனில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், இத்தாலியின் யானிக் சின்னா்-அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ செவ்வாய்கிழமை மோதவுள்ளனா்.
தஞ்சாவூர் ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு
தஞ்சாவூர் மாவட்டஆட்சியர், ஆட்சியராக இருக்கவே தகுதியற்றவர் என்று கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அக்.28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 150 இடங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரித்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கருணாநிதி நினைவு நாணயம்: அரசியல் நோக்கம் இல்லை
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் எல். முருகன் கூறினாா்.
பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே 8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விசாரணை மேற்கொண்டு வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.
செயற்கைக்கோள் உருவாக்கிய எஸ்ஆர்எம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
எஸ்.ஆா்.எம்.பப்ளிக் பள்ளி மாணவா்கள் உருவாக்கிய செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமைச் செயலர் உத்தரவு
கொல்கத்தாசம் பவத்தின் எதிரொலியாக, தமிழ கத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணி: சென்னையில் இன்று தொடக்கம்
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து வாக்காளர் விவரங்க ளையும் சரிபார்க்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஆக.20) தொடங்கவுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
நாமக்கல் பள்ளி மாணவர் பி.ரஜனீஷ் முதலிடம்
புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் பொறுப்பேற்பு
தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலராக நா. முருகானந்தம் இன்று பொறுப்பேற்றார்.
திமுக ஆட்சியைக் காப்பாற்றவே மத்திய அமைச்சரை அழைத்து விழா
திமுக ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே, மத்திய அமைச்சரை அழைத்து கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா நடத்தப்பட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.
பாஜகவுடன் ரகசிய உறவு இல்லை
பாஜகவுடன் ரகசியமாக உறவு வைக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
கமலா ஹாரிஸைவிட நான் அழகானவன்
அமெரிக்க அதிபா் தோ்தலில் என்னை எதிா்த்துப் போட்டியிடும் கமலா ஹாரிஸைவிட நான் அழகானவன் என்று குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் பேசினாா்.
தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டம் 3 நாள்களில் முடிவுக்கு வந்தது.
அரையிறுதியில் மோதும் சின்னர் - ஸ்வெரெவ்
மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியான சின்சினாட்டி ஓபன் அரையிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், 3-ஆம் நிலை வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.
குவைத் பிரதமருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு
குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா அல்-அகமது அல்-ஜபீர் அல்-ஷபா, பட்டத்து இளவரசர் ஷேக் ஷபா அல்-கலீத் அல்-ஷபா ஆகியோரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அகதிகளுக்கு குடியுரிமை மறுத்த காங்கிரஸ் அரசுகள்
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசுகளின் ஒருதரப்பினரை திருப்திப்படுத்தும் கொள்கையால், நம் நாட்டில் ஏராளமான அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர் கருணாநிதி
வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
அக்.2-இல் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக். 2-ஆம் தேதி மது, போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் ஹம்சத்வனி அமைப்பின் ஆண்டு விழா
’கலாசார அமைப்பான ஹம்சத்வனியின் முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்' என்று அதன் ஆண்டு விழாவில் பங்கேற்ற மேகாலய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதன் தெரிவித்தார்.
பள்ளி மேலாண்மைக் குழு புதிய உறுப்பினர்கள் விவரம் பதிவேற்ற கல்வித் துறை உத்தரவு
தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விவரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா நிறைவு
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய சர்வதேச காற்றாடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.