CATEGORIES
பெண் மருத்துவர் படுகொலை: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து செவ்வாய்க்கிழமை (ஆக. 20) விசாரணை மேற்கொள்ள உள்ளது.
ஐஏஎஸ் பணிகளை தனியார்மயமாக்குவதே மோடியின் உத்தரவாதம்
மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள உயர்பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதில் தனியார் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களை நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு மக்கள் விரோத எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தார்.
தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா மாற்றம்
தமிழக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத் தலைவராக மாற்றப்பட்டுள்ளாா்.
மத்தியில் நிலையான ஆட்சிக்கு பங்களித்தவர் கருணாநிதி
கட்சி, சித்தாந்த கோட்பாடுகளைத் தாண்டி, மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு ஆக்கபூர்வ பங்களிப்பைத் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.
காங்கேசன்துறையிலிருந்து நாகை திரும்பியது பயணிகள் கப்பல்
இலங்கை காங்கேசன்துறைமுகத்துக்கு 44 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை புறப்பட்ட ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்துக்கு சனிக்கிழமை திரும்பி, முதல் பயணத்தை நிறைவு செய்தது.
'குரங்கு அம்மையால் உலகத்துக்கே ஆபத்து!'
ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த நோய் உலகம் முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
'இதுவரை இல்லாத நெருக்கத்தில் காஸா ஒப்பந்தம்’
காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான தருணம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நெருக்கத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
காலிறுதியில் ஸ்வியாடெக், சபலென்கா, சின்னர், ருனே
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு மகளிர் பிரிவில் ஸ்வியாடெக், சபலென்கா, ஆன்ட்ரீவா, சாம்ஸோனாவா, ஜெஸிக்கா பெகுலா, பாவ்லா படோஸா, ஆடவர் பிரிவில் ஜேனிக் சின்னர், அலெக்ஸ் வெரேவ், ஹோல்கர் ருனே, ருப்லேவ், பென் ஷெல்டன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
ஐஎம்எஃப்புடன் ஒத்துழைப்பை அதிகரிக்க எப்போதும் தயார்: மத்திய நிதியமைச்சர்
சர்வதேச நிதியத்து டனான (ஐஎம்எஃப்) ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய் வதற்கு இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தார்.
லிவர்பூல், மான்செஸ்டர், பிஎஸ்ஜி அணிகள் வெற்றி
ஐரோப்பிய கால் பந்து தொடர்களில் லிவர்பூல், மான் சேஸ்டர் யுனைடெட், பிஎஸ்ஜி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
மம்தா பதவி விலக வேண்டும்: நிர்பயாவின் தாய் வலியுறுத்தல்
மேற்கு வங்கத்தில் நிலைமையை சரிவர கையாளத் தவறிய முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தில்லியில் கடந்த 2012-இல் பாலியல் கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் தாய் ஆஷா தேவி வலியுறுத்தியுள்ளார்.
சவால் நிறைந்த முன்னோடித் திட்டம்!
கோவை, ஆக. 17: கோவை, திருப் பூர், ஈரோடு மாவட்டங்கள் மேற் குத் தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள மாவட்டங்களாக இருந்தா லும், இந்த மாவட்டங்களின் பல வட்டங்கள் வறட்சியானவையா கவே உள்ளன.
உலகளாவிய வளர்ச்சி ஒப்பந்தம்: பிரதமர் மோடி பரிந்துரை
இந்தியா சாா்பில் விரிவான ‘உலகளாவிய வளா்ச்சி ஒப்பந்தம்’ மேற்கொள்வதற்கான பரிந்துரையை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை முன்வைத்தாா்.
முழுவீச்சில் தயாராகும் தாம்பரம் ரயில் முனையம்
தாம்பரம் ரயில் நிலையத்தை சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக கடந்த பல நாள்களாக பாதிக்கப்பட்ட ரயில் சேவை, திங்கள்கிழமை முதல் வழக்கமாக இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
மழைக்கால முன்னேற்பாடு பணிகள்: தலைமைச் செயலர் ஆய்வு
சென்னை கிண்டி கத்திப்பாரா சாலையில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த தலைமைச் செயலாளா் சிவ் தாஸ் மீனா.
பயன்பாட்டுக்கு வந்தது அத்திக்கடவு - அவிநாசி திட்டம்
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் 67 ஆண்டுகால கனவை நனவாக்கும் வகையில் ரூ.1,916 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
இன்றும், நாளையும் 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்' எச்சரிக்கை
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள் (ஆக.18, 19) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு: ஆளுநர் அனுமதி : மாற்று நில முறைகேடு புகார்
மாற்றுநில முறைகேடு புகார் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் : சேவைகள் கடும் பாதிப்பு
மேற்கு வங்கத்தில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
தாய்லாந்து பிரதமராக பேடொங்டான் ஷினவத்ரா தேர்வு
தாய்லாந்தின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ராவின் மகள் பேடொங்டான் ஷினவத்ரா நாடாளுமன்றத்தால் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
ரஷிய படை அதிவேக முன்னேற்றம் - உக்ரைன் நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேற உத்தரவு
கிழக்கு உக்ரைனைச் சோ்ந்த போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி ரஷியப் படையினா் அதிவேகமாக முன்னேறிவருவதால் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறவேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்வெரெவ்
அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றாா்.
'பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க பாஜக கூட்டணி கட்சிகள் தயக்கம்'
‘மதச்சாா்பற்ற பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்’ என வலியுறுத்தி சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி பேசிய நிலையில், அதனை ஆதரிக்க பாஜக கூட்டணி கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.
மேற்காசிய பதற்றம்: இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு
மேற்காசியாவில் பதற்றத்தை தணிப்பது அவசியம் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
'பாஜகவுக்கு கிடைத்த வெற்றி'
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்குவது பாஜகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: 22 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
கனமழை எச்சரிக்கை காரணமாக, 22 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
மதச்சார்பற்ற சிவில் சட்டம்: பிரதமரின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
மதச்சாா்பற்ற சிவில் சட்டத்தை வலியுறுத்தி பிரதமா் மோடி பேசியுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
சென்னையில் பெண் எஸ்ஐ மீது தாக்குதல்:நேபாள பெண் கைது
சென்னையில் பெண் உதவி ஆய்வாளரை தாக்கியதாக நேபாளத்தைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா்.
பேருந்து மீது மின்கம்பி உரசியதில் ஓட்டுநர் உயிரிழப்பு
கோத்தகிரி அருகே அரசுப் பேருந்து மீது உயரழுத்த மின்கம்பி உரசியதில் பேருந்து ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கருணாநிதி உருவ நாணயம்: ராஜ்நாத் சிங் நாளை வெளியிடுகிறார்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) வெளியிடுகிறாா்.