CATEGORIES
பருத்திக்கொட்டை விலை உயர்வால் கால்நடை வளர்ப்போர் தவிப்பு
பருத்தி கொட்டை விலை உயர்ந்துள்ளதால் கால்நடை வளர்ப்போர் தவிக்கின்றனர்.
பருத்தி சந்தையில் ரூ.90 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல்
கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் ரூ.90 லட்சத்து 74 ஆயிரத்துக்கு பஞ்சு மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.
கிசான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள், மாவட்டங்களுக்கு விருதுகள் மத்திய வேளாண் அமைச்சர் வழங்கினார்
பிரதமரின் கிசான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங் களுக்கும், மாவட்டங்களுக்கும் மத்திய அரசு விருதுகளை வழங்கி உள்ளது.
எள், ஆமணக்கு ரூ.8.18 லட்சத்திற்கு ஏலம்
திருச்செங்கோடு ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் எள், ஆமணக்கு ரூ.8.18 லட்சத்திற்கு ஏலம் போனது.
5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் பிரதமர் மோடி டுவீட்
விவசாயிகளின் கவுரவமான, வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டம் பிப்.24 அன்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது.
மக்காச்சோள மகசூல் கடும் பாதிப்பு
மக்காச்சோளம் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஏக்கருக்கு 25 டன் வரை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் ஏக்கருக்கு 7 முதல் 8 டன் மட்டுமே கிடைத்துள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு
சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேளாண் பல்கலையில் கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டில் உள்ள சவால்கள் பற்றிய கலந்தாய்வு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 24.02.2021 அன்று 'கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டில் உள்ள சவால்கள் பற்றிய கலந்தாலோசனை அமர்வு வேளாண் பூச்சியியல் துறை சார்பில் நடைப்பெற்றது. இதில் வேளாண் விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை துறையை சேர்ந்த உயர்நிலை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தஞ்சையில் இதுவரை 3.5 லட்சம் டன் நெல் கொள்முதல்
தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய இதுவரை 457 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
வேளாண்மைக் கல்லூரியில் முப்பெரும் விழா
திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் அருகே உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அங்கமான வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் 19.02.2021 அன்று முப்பெரும் விழா திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரத்தில் தர்ப்பூசணி கிலோ ரூ.20க்கு விற்பனை
தர்ப்பூசணி சீசன் துவங்கியதை தொடர்ந்து, உத்திரமேரூரில், கிலோ, ரூ.20க்கு விற்பனை ஆகிறது.
கறிவேப்பிலை கிலோ ரூ.100க்கு விற்பனை
காய்கறி மற்றும் மளிகை கடைகளில் காய்கறி வாங்கும்போது கறிவேப்பிலையை இலவசமாக வழங்குவது வாடிக்கையாகும். அப்பேர்ப்பட்ட கறிவேப்பிலைக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கறிவேப்பிலை விலை, வரத்து குறைவால் விலை கடுமையாக உயர்ந்து தற்போது ரூ.80 முதல் ரூ.100 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
மானாமதுரை அருகே நெல் கொள்முதல் நிறுத்தி வைப்பு
சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை அருகே சின்னக் கண்ணனூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வது திங்கள்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் ரூ.9 கோடியில் தென்னை நார் கூட்டுக்குழுமம் காணொளி காட்சியில் மத்திய அமைச்சர் துவக்கினார்
பொள்ளாச்சியில், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான பாரம்பரிய பொருட்கள் உற்பத்தி செய்யும், தென்னை நார் கூட்டுக் குழுமத்தை, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி காணொளியில் துவக்கி வைத்தார்.
ரூ.1,503 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில், மரக்காணம் அருகே கூனிமேட்டில் ரூ.1,503 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயம் விலை சரிவு
உள்நாட்டு வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால், , மதுரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 ஆக விலை குறைந்து விற்பனையானது.
மழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு
மழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.
ரூ.100 கோடியில் கலப்பின பசு உற்பத்தி மையம் முதல்வர் பழனிசாமி தகவல்
கருமந்துறையில், ரூ.100 கோடி ரூபாயில், கலப்பின பசு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம் அமைக்கப்படும், என, தலைவாசலில், முதல்வர் பழனிசாமி பேசினார்.
நெல் மகசூல் பாதிப்பு நிவாரணம் வழங்கக் கோரி மனு
பழனி அருகே பட்டா இல்லாத நிலத்தில் மகசூல் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை விவசாயிகள் மனு அளித்தனர்.
வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு சிறந்த துணைவேந்தர் விருது
பேராசிரியர் ஜெயசங்கர் தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து இந்திய வேளாண் மாணவர்கள் சங்கம், புது தில்லி ஏற்பாடு செய்திருந்த ஆறாவது தேசிய இளைஞர் மாநாட்டில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நீ.குமார் அவர்களுக்கு 2020ம் ஆண்டிற்கான சிறந்த துணைவேந்தருக்கான விருது வழங்கப்பட்டது.
நடப்பாண்டில் கோதுமை உற்பத்தி சாதனை அளவை எட்ட வாய்ப்பு நிபுணர்கள் எதிர்பார்ப்பு
கோதுமை சாகுபடி பரப்பு அதிகரிப்பு, சாதகமான பருவநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடப்புப் பயிர் ஆண்டில் கோதுமை உற்பத்தி சாதனை அளவை எட்ட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தாமிரபரணி, நம்பியாறு இணைப்பு திட்டம் 2022ல் முடிக்கப்படும் துணை முதல்வர் தகவல்
அடுத்தாண்டு மார்ச் 31க்குள் தாமிரபரணி, நம்பியாறு இணைப்பு திட்டம் முடிக்கப்படும் என தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கடலூரில் 91 ஆண்டுக்கு பின் பிப்ரவரி மாதத்தில் பெய்த கனமழை
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் கன மழை பெய்தது. கடலூரில் மிக கன மழை கொட்டியது. இந்த மழை கடலூரில் வரலாற்று சாதனையாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் 2 நாட்களாக தொடர் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை மழை பெய்தது. இந்த மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.
வாணியாறு அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணையிலிருருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வெயிலுக்கு தர்பூசணி பழம் விற்பனை அமோகம்
மடத்துக்குளம் பகுதியில் தர்பூசணி பழம் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளரி பிஞ்சு விற்பனை அதிகரிப்பு
கோடை தொடங்கிய நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்து கொள்ள இளநீர், பழ ஜூஸ், தர்ப்பூசணி போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை வாங்கி விரும்பி குடித்து வருகிறார்கள்.
நடப்பு காரீப் பருவத்தில் நெல் கொள்முதல் 15.91% அதிகம்
கடந்த வருடத்தின் காரீப் பருவத்தைக் காட்டிலும் 15.91% அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் வெங்காயம் ரூ.33க்கு விற்பனை
நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு சமையல் பொருளாக வெங்காயம் இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் சின்ன மற்றும் பெரிய வெங்காயம் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.