துணை ஜனாதிபதி தன்கருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தேவகவுடா பேச்சால் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் இருஅவைகளும் அமளியால் முடங்கி வருகின்றன. முதலில் அமெரிக்கா நீதிமன்றத்தில் அதானி மீதான குற்றச்சாட்டு, அதை தொடர்ந்து அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரஸ் மற்றும் காங்கிரஸ் தொடர்பு குறித்த புகார், தற்போது துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் காரணமாக அவைகள் முடங்கி வருகின்றன.
நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் அவை நடவடிக்கை தொடர்பாக வழங்கப்பட்ட 5 நோட்டீஸ்களை அவைத்தலைவர் தன்கர் நிராகரித்தார். மேலும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் அவமதிப்பு பேச்சு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி அளித்த ஆறாவது நோட்டீசும் நிராகரிக்கப்படுவதாகவும் தன்கர் கூறினார். அதைத்தொடர்ந்து பேசிய அவை முன்னவர் ஜே.பி. நட்டா, செய்தியாளர் கூட்டத்தில் தன்கரை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கடுமையாகக் கண்டித்தார்.
மேலும்,’அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசுக்கும், சோனியா காந்திக்கும் என்ன தொடர்பு? நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது’ என்றார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது சோனியா காந்தியும் அவையில் இருந்தார். நட்டாவின் கருத்துகளுக்கு பதிலளிக்க கார்கேவுக்கு தன்கர் அனுமதி அளித்தார். ஆனால் பா.ஜ எம்பிக்கள் அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியவில்லை. இதனால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
この記事は Dinakaran Chennai の December 13, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の December 13, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மாதவரம் தொகுதியில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற நடவடிக்கை
மாதவரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின் வாரியத்துக்கு சொந்தமான மின்கம்பிகள் மேலே செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் நியமனம்’
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி, திருவேற்காடு பகுதிகளில் கனமழை தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டத்தில் 2,79,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 6ம் சுற்றில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2,79,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
மதுரவாயல் மேம்பாலம் அருகே ₹1.5 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்
மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கனமழை காரணமாக பூண்டி, பிச்சாட்டூர், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றம்
கொசஸ்தலை, ஆரணி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திட்டமிட்டு பதிவு செய்து வரவழைத்து ரேபிடோ டிரைவரை தாக்கிய 3 டாக்சி ஓட்டுநர்கள் கைது
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முகுந்தன் (28), சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். பகுதி நேரமாக ரேபிடோ பைக் டாக்சி ஓட்டி வருகிறார்.
பூந்தமல்லி அருகே 7 கடைகளில் கொள்ளை
பூந்தமல்லி அருகே பிரபல மூக்குக்கண்ணாடி கடை பூட்டை, கடந்த 9ம் தேதி இரவு மர்ம நபர் உடைக்க முயன்றார்.
சிந்தாதிரிப்பேட்டையில் கோயிலுக்கு சொந்தமான ₹30 லட்சம் நிலம் மீட்பு - அறநிலையத்துறை தகவல்
சிந்தாதிரிப்பேட்டை நாகேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள வணிக மனை மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
படப்பை அருகே காரணிதாங்கல் பகுதியில் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி
படப்பை அருகே காரணி தாங்கல் பகுதியில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.`