முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
18}ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். அவருடன் 71 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த கேபினட் அமைச்சர்கள் உள்பட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:
"பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் பயனடைய தகுதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டு, புதிதாக 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளைக் கட்ட அரசு நிதியுதவி அளிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது' என்றனர்.
この記事は Dinamani Chennai の June 11, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の June 11, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
நலம் தரும் நடராசர் தரிசனம்
வைகைக் கரை வாதவூரில், அந்தணர் குலத்தில் சம்புபாத சரிதர்- சிவ ஞானவதிக்கு மகனாகப் பிறந்தார் வாதவூரர். இவர் கல்வியில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரானார். புலமை மிக்கவருக்கு 'தென்னவன் பிரமராயன்' எனும் பட்டமும் கிடைத்தது.
திருவாதிரை வழிபாட்டில் திருவாலங்காட்டு ஆடல்வல்லான்
சிவனுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. ‘ஆதிரை நாளுகந்தான்’, ‘ஆதிரை நாளாய் அமர்ந்தோர்’, ‘ஆதிரை நன்னாளானை’, ‘திருவாதிரையானை’ என்றெல்லாம் திருமுறைகள் புகழ்கின்றன. ஆண்டில் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெறும். அதில், திருவாதிரை நாள் அபிஷேகம் மிகச் சிறப்பானதாகும்.
லெபனான் அதிபராக ஜோசப் ஆவுன் தேர்வு
லெபனான் அதிபராக ராணுவ தளபதி ஜோசப் ஆவுனை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை தேர்ந்தெடுத்தது.
டிசிஎஸ் நிகர லாபம் 12% உயர்வு
கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் 11.95 சதவீதம் உயர்ந்துள்ளது.
46 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46ஆயிரத்தைக்கடந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் விற்பனை 3.42 லட்சமாக அதிகரிப்பு
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை கடந்த டிசம்பரில் 3,41,791-ஆக அதிகரித்துள்ளது.
மியான்மர்: வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு
மியான்மரில் சிறுபான்மை ஆயுதக்குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
ரஷிய தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் ஸபோரிஷியா நகரில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் இன்னும் அதிக சேதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.