இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய போா் நிறுத்த திட்டத்துக்கு ஆதரவாக கவுன்சில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது இதுவே முதல்முறை.
இந்த ஒப்பந்த திட்டத்தை இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஏற்பது குறித்து சந்தேகம் நீடித்துவரும் நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள இந்தத் தீா்மானம் அதை ஏற்பதற்கான அழுத்தத்தை இரு தரப்பினருக்கும் கொடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது தொடா்பாக கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்தை ஆதரித்து 15 உறுப்பு நாடுகள் வாக்களித்தன; ரஷியா வாக்களிப்பைப் புறக்கணித்தது; தீா்மானத்தை எதிா்த்து ஒரு நாடு கூட வாக்களிக்கவில்லை. அதையடுத்து அந்தத் தீா்மானம் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்களிப்பைத் தொடா்ந்து, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், ‘காஸாவில் போரை நிறுத்தவும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்குமான ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு ஹமாஸ் அமைப்பை வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகக் கூறும் ஹமாஸ், அதை நிரூபிப்பதற்கான நேரம் இது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்தத் தீா்மானத்தை வரவேற்பதாக ஹமாஸ் அமைப்பினரும் தெரிவித்துள்ளனா். இருந்தாலும், ஒப்பந்த திட்ட அம்சங்களை தங்கள் தலைமை ஏற்றுக்கொண்டுவிட்டதா என்பதை அவா்கள் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
この記事は Dinamani Chennai の June 12, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の June 12, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ஊழியர்களைக் கண்காணிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
உணவு மற்றும் மளிகை பொருள்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் விநியோக நபர்களைக் கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயமே வெற்றியின் எதிரி
காலைப் பொழுதில் நமக்கு இருக்கும் மனநிலை, இரவு படுக்கும்போது நமக்கு இருப்பதில்லை. இது ஏழை, பணக்காரன் எல்லோருக்கும் பொருந்தும். இவற்றில் நேர்மறை உணர்வுகளும், எதிர்மறை உணர்வுகளும் அடங்கியுள்ளன. ஆனால், நேர்மறை உணர்வுகளைவிட, எதிர்மறை உணர்வுகள் நம் மனத்தின் மீது அதிக ஆதிக்கத்தை எளிதில் செலுத்துகின்றன என்பதுதான் எதார்த்தமான உண்மை.
குடியரசு தின விழா: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி, (ஜன. 26) தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நிலத்தில் தொடங்கியது இரும்புக் காலம்
ஆதாரங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஞானசேகரனுடன் தொடர்பிலிருந்த போலீஸார் குறித்து புலனாய்வுக் குழு விசாரணை
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுடன் தொடர்பிலிருந்த போலீஸார் குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்தியாவின் பாரம்பரியம்; தமிழகத்தின் பங்களிப்பு: ராகுல் காந்தி பாராட்டு
'இந்தியாவின் வளமான பாரம்பரியம் உலகுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. இதில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது' என்று இரும்புக் காலம் தொடக்கம் குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார்.
‘வளர்ந்த பாரதம்’ இலக்கை எட்ட ஒற்றுமை அவசியம்: பிரதமர் மோடி
'வளர்ந்த பாரதம்' இலக்கை எட்ட மக்களிடையே ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லிக்கு ஷீலா தீட்சித்தின் வளர்ச்சி மாதிரிதான் தேவை: ராகுல்
தில்லிக்கு தற்போது முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் உண்மையான வளர்ச்சி மாதிரிதான் தேவைப்படுகிறது; பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலின் தவறான பிரசாரம் அல்ல' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு: முதியோருக்கான தபால் வாக்குப் பதிவு தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.