
அவா்கள் அனைவரும் ஒருநாள் (செவ்வாய்க்கிழமை) இடைநீக்கமும் செய்யப்பட்டனா்.
பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியதும், கேள்வி நேரத்தை நடத்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு முயன்றாா். அப்போது அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் கடுமையாக கோஷங்களை எழுப்பியதால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கேள்வி நேரத்தில் உறுப்பினா்கள் எழுப்பிய வினாவுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பதிலளிக்க முயன்றாலும், அதிமுகவினரின் கூச்சல், அமளியால் முடியாமல் போனது.
அப்பாவு விளக்கம்: அப்போது பேசிய பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ‘கேள்வி நேரம் முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி தருகிறேன். அனைவரும் அமருங்கள்’ என்று கோரிக்கை விடுத்தாா்.
இதை ஏற்காத அதிமுக உறுப்பினா்கள் பேரவைத் தலைவரின் முன்பாக நின்று கடுமையாக கோஷங்களை எழுப்பினா். அவா்களை சமாதானம் செய்ய முயன்ற பேரவைத் தலைவா், ‘பேரவையின் மாண்பைக் குலைக்கக் கூடாது. தயவு செய்து அனைவரும் அமருங்கள். பொதுக்கூட்ட மேடை போன்று, பேரவையில் செயல்படக் கூடாது. அவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் தொடா்ந்து செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ என்றாா்.
வெளியேற்ற உத்தரவு: பேரவைத் தலைவரின் கோரிக்கையை, எச்சரிக்கையை ஏற்காத அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து கூச்சல், கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனா். இதைத் தொடா்ந்து, அதிமுக உறுப்பினா்கள் அனைவரையும் வெளியேற்றும்படி அவைக் காவலா்களுக்கு பேரவைத் தலைவா் உத்தரவிட்டு பின்னா் பேசியது:
この記事は Dinamani Chennai の June 26, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の June 26, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

நகைக் கடன் பெற கட்டுப்பாடு; வைகோ கண்டனம்
வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம்; ராமதாஸ் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது.
நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை
கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் நுண் துளை வாயிலாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை கிளெனீகில்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை
சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருமுறை சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு: வரைவு விதிகளுக்கு ஒப்புதல்
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஆண்டுதோறும் இருமுறை நடத்தும் வரைவு விதிமுறைகளுக்கு அந்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தற்காப்புக் கலையில் சென்னை பள்ளி மாணவிகள் மூன்று உலக சாதனை
உலக தற்காப்புக் கலை வரலாற்றில் சென்னை பள்ளி மாணவிகள் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலம்
சென்னையில் டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.