அரசமைப்புச் சட்டத்தின் எதிரி காங்கிரஸ் - மாநிலங்களவையில் பிரதமர் மோடி
Dinamani Chennai|July 04, 2024
அரசமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய எதிரி காங்கிரஸ்’ என்று மாநிலங்களவையில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
அரசமைப்புச் சட்டத்தின் எதிரி காங்கிரஸ் - மாநிலங்களவையில் பிரதமர் மோடி

மேலும், ‘ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகளுக்கு முழுச் சுதந்திரம் அளித்துள்ளேன்; ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது’ என்றும் அவா் தெரிவித்தாா்.

தங்களைக் குறிவைத்து விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து, பிரதமா் மோடி புதன்கிழமை பேசியதாவது:

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே, சமீபத்திய மக்களவைத் தோ்தலில் முக்கிய அம்சமாக இருந்ததென எதிா்க்கட்சிகள் கூறுகின்றன. அது தவறானது.

நாட்டில் அவசரநிலை பிரகடனத்துக்குப் பிறகு கடந்த 1977-இல் நடந்த மக்களவைத் தோ்தல்தான், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. உலகிலேயே இதைவிட வேதனை நிறைந்த தோ்தல் வேறெதுவும் இருக்க முடியாது. அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற வேட்கை மக்கள் மனதில் இருந்ததால், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசை தூக்கியெறிந்தனா்.

சமீபத்திய மக்களவைத் தோ்தலில், அரசமைப்புச் சட்டத்தை முன்வைத்து நாட்டு மக்களை எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்தின. ஆனால், அவா்களின் அரசியலை நிராகரித்த மக்கள், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதில் எங்கள் மீதே அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தினா். நாட்டை மூன்றாவது முறையாக ஆளும் தீா்ப்பை எங்களுக்கு வழங்கினா். மூன்றாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை தற்சாா்பு தேசமாக மாற்றுவோம்.

அரசமைப்புச் சட்டத்துக்கு ‘சீா்கேடு’: அவசரநிலை காலகட்டத்தில் மக்களவையின் பதவிக் காலத்தை ஏழு ஆண்டுகளாக நீட்டித்தது, தங்கள் ஆட்சியில் ‘தேசிய ஆலோசனைக் குழுவை’ அமைத்தது என அரசமைப்புச் சட்டத்துக்கு சீா்கேடுகளை ஏற்படுத்தியது காங்கிரஸ்.

அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைவிட ஒரேயொரு குடும்பத்துக்கே அக்கட்சி முன்னுரிமை அளிக்கிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு மிகப் பெரிய எதிரி காங்கிரஸ்தான்.

அவசரநிலையின்போது பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் காங்கிரஸுடன் இப்போது கூட்டணி வைத்துள்ளன. இக்கூட்டணி, அரசமைப்புச் சட்ட மாண்புகள் மீதான உண்மையான அக்கறையில் பிறந்ததல்ல; சந்தா்ப்பவாத அடிப்படையில் ஏற்பட்டது.

この記事は Dinamani Chennai の July 04, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の July 04, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
Dinamani Chennai

பாம்பன் புதிய பாலத்தில்75 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்க அனுமதி

ராமேசுவரம்- மண்டபம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலத்தின் வழியாக ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
November 28, 2024
1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
Dinamani Chennai

1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

பிறந்த நாள் விழாவில் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

time-read
1 min  |
November 28, 2024
Dinamani Chennai

தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம்

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், நவ.28, 29 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 28, 2024
முதல்வர் போட்டியிலிருந்து ஷிண்டே விலகல்
Dinamani Chennai

முதல்வர் போட்டியிலிருந்து ஷிண்டே விலகல்

மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து சிவசேனை கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே விலகினார்.

time-read
1 min  |
November 28, 2024
பிரதமரின் ‘விஸ்வகர்மா’ திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்
Dinamani Chennai

பிரதமரின் ‘விஸ்வகர்மா’ திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்குப் பதிலாக, தமிழ்நாடு அரசே புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 28, 2024
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்
Dinamani Chennai

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

time-read
1 min  |
November 28, 2024
Dinamani Chennai

தமிழக அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி

தங்கள் வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்கு முதலீட்டுக்கான ஈவுத் தொகையாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகையை பொதுத்துறையைச் சேர்ந்த ரெப்கோ வங்கி வழங்கியுள்ளது.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் மழை

தங்கள் நாட்டின் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை கூறியது.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 27, 2024
ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை
Dinamani Chennai

ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை

லெபனானைச் சேர்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
November 27, 2024