மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் இலங்கை 144 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது. தொடா்ந்து 2 வெற்றிகளை பதிவு செய்த அந்த அணி, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் சோ்க்க, மலேசியா 19.5 ஓவா்களில் 40 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டது. சதம் விளாசிய இலங்கை கேப்டன் சமரி அத்தபட்டு, ஆட்டநாயகி ஆனாா்.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, முதலில் பேட் செய்தது. தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த சமரி அத்தப்பட்டு அதிரடியாக ரன்கள் சோ்த்தாா். அவருடன் ஹா்ஷிதா சமரவிக்ரமா நிலைக்க, 2-ஆவது விக்கெட்டுக்கு அந்த பாா்ட்னா்ஷிப் 64 ரன்கள் சோ்த்தது.
இதில் ஹா்ஷிதா 5 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். மறுபுறம், அரைசதம் கடந்து சிறப்பாக ரன்கள் சோ்த்துவந்த சமரியுடன் கூட்டணி அமைத்தாா் அனுஷ்கா சஞ்சீவனி. இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சோ்த்தது. இவா்களில் அனுஷ்கா 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
この記事は Dinamani Chennai の July 23, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の July 23, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
தங்கம் பவுனுக்கு ரூ.1,080 சரிவு
சென்னையில் தங் கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ. 56,680-க்கு விற்பனையானது.
மருத்துவ அறிவியல் விநாடி வினா: இராமச்சந்திரா மாணவர்கள் முதலிடம்
மருத்துவ அறிவியல் தொடர்பான சர்வதேச விநாடி வினா போட்டியில் போரூர், ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அணியினர் முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.
சாலை பள்ளத்தில் சிக்கியது குப்பை லாரி
போரூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகா ரட்சி குப்பை அள்ளும் லாரி சிக்கியது.
கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழா இரு நாள்கள் கொண்டாட்டம்
சென்னை, நவ. 12: கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி, வரும் டிச.31, ஜன.1 ஆகிய இரு நாள்கள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மண் விளக்கு வைத்து பூஜை
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை மண்விளக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய கட்டடங்கள்
தமிழகத்தில் 17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
ரூ.1.60 கோடியை டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக் கூடாது
சென்னை, நவ.12: ஃபியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1 கோடியே 60 லட்சத்தை நீதிமன்ற பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சில்லறை பணவீக்கம் 14 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 6.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவைச் சந்தித்தன.