சின்னர், சபலென்கா சாம்பியன்
Dinamani Chennai|August 21, 2024
சின்சினாட்டி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஆடவர் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னர், மகளிர் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் சாம்பியன் கோப்பை வென்றனர்.
சின்னர், சபலென்கா சாம்பியன்

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனுக்கு முன்னோட்டமாக இருக்கும் இந்தப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், உலகின் நம்பர் 1 வீரரான சின்னர் 7-6 (7/4), 6-2 என்ற நேர் செட்களில், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை வீழ்த்தினார். இருவருக்குமே இந்தப் போட்டியில் இதுவே முதல் இறுதிச்சுற்றாகும். இதற்கு முன் இருவரும் இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 3-ஆவது சுற்று வரை வந்துள்ளனர்.

டியாஃபோவை 5-ஆவது முறையாகச் சந்தித்த சின்னர், 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். வெற்றிக்குப் பிறகு பேசிய சின்னர், "சர்வதேச டென்னிஸில் தற்போது நான் இருக்கும் இடத்துக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நிலையை அப்படியே தொடர முயற்சி செய்வேன். அடுத்ததாக, யுஎஸ் ஓபன் போட்டிக்கு தயாராவதே முக்கியமானது' என்றார்.

முன்னதாக, முதல் செட்டை டை பிரேக்கர் வரை கொண்டு சென்ற டியாஃபோ, அதில் தொடர்ந்து 3 தவறுகளைச் செய்து செட்டை இழந்தார். 2-ஆவது செட்டில் சின்னர் 5-1 என முன்னிலையில் இருக்க, டியாஃபோ 3 மேட்ச் பாய்ன்ட்களை பெற்று 5-2 என முன்னேறினார். எனினும், சின்னர் ஒரு சர்வ் மூலமாக செட்டை தனதாக்கி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

சின்னருக்கு இது 3-ஆவது மாஸ்டர்ஸ் பட்டமாகும். வெற்றியை இழந்தாலும், இறுதிச்சுற்று வரை வந்ததன் மூலமாக உலகத் தரவரிசையில் 20-ஆவது இடத்துக்கு வந்திருக்கிறார் டியாஃபோ. தற்போது, டாப் 20 இடத்தில் டெய்லர் ஃப்ரிட்ஸ் (12-ஆம் இடம்), பென் ஷெல்டன் (13), டாமி பால் (14), செபாஸ்டியன் கோர்டா (16), ஃபிரான்சஸ் டியாஃபோ (20) என 5 அமெரிக்கர்கள் உள்ளனர். 1997-க்குப் பிறகு ஏடிபி தரவரிசையில் டாப் 20 இடத்தில் 5 அமெரிக்கர்கள் இருப்பது இதுவே முதல் முறையாகும்.

பரிசுத் தொகை & ரேங்கிங் புள்ளிகள்

この記事は Dinamani Chennai の August 21, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の August 21, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
Dinamani Chennai

'கங்குவா' திரைப்படத்தை வெளியிடத் தடையில்லை

ரிலையன்ஸுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் முழுமையாக செலுத்திவிட்டதால், அந்நிறுவனத்தின் தயாரிப்பான 'கங்குவா' திரைப்படத்தை வெளியிட அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
November 09, 2024
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு
Dinamani Chennai

'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு

'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னையில் 46 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

time-read
1 min  |
November 09, 2024
திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
Dinamani Chennai

திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

time-read
1 min  |
November 09, 2024
பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அளிப்பு
Dinamani Chennai

பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அளிப்பு

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை பேராசிரியர் மா.செல்வராசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

time-read
1 min  |
November 09, 2024
நிகர இழப்பு அதிகரிப்பு ஏன்?: இந்தியா சிமென்ட்ஸ்
Dinamani Chennai

நிகர இழப்பு அதிகரிப்பு ஏன்?: இந்தியா சிமென்ட்ஸ்

சிமென்ட் விலை குறைந்ததன் காரணமாக நிகர இழப்பு அதிகரித்துள்ளது என்று இந்தியா சிமென்ட்ஸ் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 09, 2024
நெதர்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்
Dinamani Chennai

நெதர்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்

ஆம்ஸ்டர்டாம்,நவ. 8: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இஸ்ரேல் அணி ரசிகர்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
November 09, 2024
தீரம் மிக்கவர் டிரம்ப்: புதின் புகழாரம்
Dinamani Chennai

தீரம் மிக்கவர் டிரம்ப்: புதின் புகழாரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீரம் மிக்கவர் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.

time-read
1 min  |
November 09, 2024
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவுடன் நிறைவு
Dinamani Chennai

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

time-read
1 min  |
November 09, 2024
Dinamani Chennai

சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு

16 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

time-read
1 min  |
November 09, 2024
பைடனின் திட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
Dinamani Chennai

பைடனின் திட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்

வாஷிங்டன் நவ. 8: உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் அந்த நாட்டவர்களை மணந்திருந்தால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் அதிபர் ஜே பைடனின் திட்டத்தை டெக்ஸாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

time-read
1 min  |
November 09, 2024