மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்குள்ளாக நிறைவு செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மேலும், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்வதில் கொல்கத்தா போலீஸார் செய்துள்ள தாமதம் மிகுந்த கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட உச்சநீதி மன்றம், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் பணிக்குத்திரும்ப அறிவுறுத்தியது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்துக்கு வழிவகுத்தது.
இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.
அப்போது, 'பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அமைப்பு ரீதியான பிரச்னையை எழுப்புகிறது' என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.
உடனடி நடவடிக்கை: இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பணிக்குழு, அனைத்துத் தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. நாடு முழுவதும் உறைவிட மருத்துவர்களுக்கு 36 முதல் 46 மணிநேரம் வரை தொடர் பணி வழங்குவது மனிதாபிமான மற்றது. இந்தப் பணி நேரத்தை முறைப்படுத்துவது தேசிய பணிக்குழு ஆராயும். அதன் அறிக்கையின் அடிப்படையில் தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
この記事は Dinamani Chennai の August 23, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の August 23, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
'கங்குவா' திரைப்படத்தை வெளியிடத் தடையில்லை
ரிலையன்ஸுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் முழுமையாக செலுத்திவிட்டதால், அந்நிறுவனத்தின் தயாரிப்பான 'கங்குவா' திரைப்படத்தை வெளியிட அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னையில் 46 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அளிப்பு
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை பேராசிரியர் மா.செல்வராசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிகர இழப்பு அதிகரிப்பு ஏன்?: இந்தியா சிமென்ட்ஸ்
சிமென்ட் விலை குறைந்ததன் காரணமாக நிகர இழப்பு அதிகரித்துள்ளது என்று இந்தியா சிமென்ட்ஸ் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்
ஆம்ஸ்டர்டாம்,நவ. 8: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இஸ்ரேல் அணி ரசிகர்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
தீரம் மிக்கவர் டிரம்ப்: புதின் புகழாரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீரம் மிக்கவர் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
16 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பைடனின் திட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
வாஷிங்டன் நவ. 8: உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் அந்த நாட்டவர்களை மணந்திருந்தால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் அதிபர் ஜே பைடனின் திட்டத்தை டெக்ஸாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.