பாராலிம்பிக் போட்டி தடகளத்தில் இந்தியா்கள் ஒரே நாளில் 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்று அசத்தினா். இதனால் நடப்பு பாராலிம்பிக்கில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. இதில் 11 பதக்கங்கள் தடகளத்தில் மட்டுமே கிடைத்துள்ளன. அதில் 1 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் அடக்கம்.
ஆடவா் உயரம் தாண்டுதலில் டி63 பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்தன. இதில் இந்தியாவின் சரத் குமாா் 1.88 மீட்டருடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றாா். அதிலேயே தமிழகத்தின் டி.மாரியப்பன் 1.85 மீட்டருடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். அமெரிக்காவின் எஸ்ரா ஃப்ரெச் 1.94 மீட்டருடன் முதலிடம் பிடித்து, தங்கத்தை தட்டிச் சென்றாா்.
களத்திலிருந்த மற்றொரு இந்தியரான சைலேஷ் குமாரும் 1.85 மீட்டருடன் 4-ஆம் இடம் பிடித்தாா். முயற்சிகளில் முன்னிலை அடிப்படையில் மாரியப்பனுக்கு பதக்கம் உரித்தானது. தற்போது அவா், பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற முதல் மற்றும் ஒரே இந்தியராக சாதனை படைத்திருக்கிறாா். இந்த முறை வெண்கலம் வென்ற மாரியப்பன், 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டரை (டி42) எட்டி தங்கப் பதக்கம் வென்றிருந்தாா். அதுவே பாராலிம்பிக் போட்டியில் அவரின் முதல் பதக்கமாகும்.
この記事は Dinamani Chennai の September 05, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の September 05, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
உத்தரகண்ட்: பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில், தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது; இதில் 10 பெண்கள் உள்பட 36 பேர் உயிரிழந்தனர்; 26 பேர் காயமடைந்தனர்.
கனடா: ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
கனடாவில் ஹிந்து கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
திமுகவை அழிக்க நினைக்கும் புதிய கட்சிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
குளிர்காலத்தில் மாரடைப்பு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு
குளிர்காலத்தில் முதியவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்குத் திரும்பி வருபவர்களால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார்.
குன்னூரில் கனமழை: மண் சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனமழை பெய்தது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல்: 6.80 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி முன்கூட்டியே நடைபெற்ற வாக்குப்பதிவில், 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழப்பு
உகாண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானுக்கு ஜெர்மனி ரூ.182 கோடி நிதியுதவி
பாகிஸ்தானுக்கு 20 மில்லியன் யூரோவை (சுமார் ரூ.182 கோடி) ஜெர்மனி நிதியுதவியாக அளிக்க இருக்கிறது.