ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் உறுதிமொழியை பாஜக நிறைவேற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேலும், மத்திய பாஜக ஆட்சியில் ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டு வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மூன்று கட்ட பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப். 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஸ்ரீநகரில் வியாழக்கிழமை நடந்த பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, காஷ்மீரி மொழியில் ‘எனது சகோதர-சகோதரிகளே’ என்று தனது உரையைத் தொடங்கினாா். அவா் பேசியதாவது:
காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய மூன்று ‘குடும்பங்களும்’ தங்களின் சுயநலனுக்காக ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்தன. ஜம்மு-காஷ்மீா் அரசியலை தங்களின் நிலபிரபுத்துவம்போல கருதினா். தங்களின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் முன்னேறினால் அவா்களுக்குப் பிடிக்காது.
குடும்ப ஆட்சிக்கு சவால் ஏற்படும் என்பதால் உள்ளாட்சித் தோ்தலை நடத்தவிடாமல் தடுத்தனா். அவா்களின் சுயநலத்தால், ஜனநாயகம் மீது இளைஞா்கள் நம்பிக்கையிழக்க நேரிட்டது. வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் இந்த மூன்றில் ஒரு குடும்பம்தான் ஆட்சிக்கு வரும் என இளைஞா்கள் விரக்தியடைந்தனா்.
நம்பிக்கை மீட்டெடுப்பு: கடந்த 5 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் நிலைமை பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது. ஜனநாயக நடைமுறை மீதான இளைஞா்களின் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிக்கப்பட்டுவிடும். வீடு வீடாக பிரசாரம் செய்வதெல்லாம் சாத்தியமே கிடையாது. இந்த நிலைதான், காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிக்கு விருப்பமாக இருந்தது.
この記事は Dinamani Chennai の September 20, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の September 20, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
விஜய் கூட்டிய மாநாடும் விரியும் சிந்தனைகளும்
நடிகர் விஜயின் மாநாட்டைப் பலர் பாராட்டலாம்; சிலர் பழித்துரைக்கலாம்; எதிர்க்கும் சக்திகள் எள்ளி நகையாடலாம்; போற்றும் சக்திகள் புகழ் பாடலாம்; எது எப்படி இருப்பினும் அந்த மாநாடு பேசுபொருளாகிவிட்டது என்பதில் மாற்றமில்லை. அவர் மீது உலகத்தின் கவனம் படியத் தொடங்கிவிட்டது என்பது நூறு விழுக்காடு உண்மை.
திருவண்ணாமலை தீபத் திருவிழா: 42 லட்சம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்
திருவண்ணாமலை, நவ. 12: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவையொட்டி, 42 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கு திமுக அளித்த நிறைவேற்றப்படவில்லை வாக்குறுதிகள்
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சூரியனார்கோவில் மடத்திலிருந்து ஆதீனம் வெளியேற்றம்
மடத்தை பூட்டிய மக்களால் பரபரப்பு
தமிழக மின் கட்டமைப்பு நவீனமயத்துக்கு ரூ.3,246 கோடி
தமிழ்நாட்டில் மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்காக அனுப்பப்பட்டுள்ள ரூ.3,246 கோடி திட்ட கருத்துருக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மாநில எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வலியுறுத்தினார்.
உடன்குடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி செயலர், முதல்வர் கைது
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள தனியார் பள்ளி மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரத்தில், அந்தப் பள்ளியின் செயலர், முதல்வர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
பாம்பன் பாலத்தில் மீனவர்கள் மறியல்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, அனைத்து விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கம் சார்பில், பாம்பன் சாலைப் பாலத்தில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாகை மீனவர்கள் 12 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவர்கள் 12 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
சர்க்கரை நோய்க்கு வீடு தேடி சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகம்
சர்க்கரை நோய்க்கு வீடு தேடி சிகிச்சைகளை அளிக்கவும், முதியோர்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கவும் இருவேறு திட்டங்களை டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் தொடங்கியுள்ளது.
அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்குகள்: வழக்குரைஞர்களுடன் அரசு ஆலோசனை
அர்ச்சகர் நியமனம் தொடர்பாக பலர் தொடுத்த வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அரசு மற்றும் துறை சார்பில் எடுத்து வைக்கப்படவுள்ள வாதங்கள் குறித்து மூத்த வழக்குரைஞர்களோடு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.