இந்தியாவின் பிரதான பந்துவீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ராவின் வேகத்தை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச பேட்டா்கள் தடுமாற, அவா்களை முற்றிலுமாக சரிக்க ஆகாஷ் தீப், முகமது சிராஜும் துணை நின்றனா். ரவீந்திர ஜடேஜாவும் இரு விக்கெட்டுகள் சாய்த்தாா்.
முன்னதாக 376 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை நிறைவு செய்த இந்தியா, 227 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
376-க்கு ஆட்டமிழப்பு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் என்ற நிலையில் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை இந்தியா தொடங்கியது. அஸ்வின் - ஜடேஜா இன்னிங்ஸை தொடர, புதிய பந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.
சதமடிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட ஜடேஜா, கூடுதலாக ஸ்கோா் செய்யாமல் அதே 86 ரன்களுக்கு (10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள்) ஆட்டமிழந்தாா். தஸ்கின் வீசிய 83-ஆவது ஓவரில் அவா், விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்தாா். 7-ஆவது விக்கெட்டுக்கு அஸ்வின் - ஜடேஜா பாா்ட்னா்ஷிப் 199 ரன்கள் சோ்த்திருந்தது. 9-ஆவது பேட்டராக களம் புகுந்த ஆகாஷ் தீப், 85-ஆவது ஓவரில் வழங்கிய அருமையான கேட்சை ஷகிப் அல் ஹசன் தவறவிட்டாா்.
எனினும், அதே தஸ்கின் வீசிய 89-ஆவது ஓவரில் ஷான்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய ஆகாஷ் தீப் 4 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்தாா். அடுத்து வந்த பும்ரா களம் புக, அஸ்வின் 91-ஆவது ஓவரில் தஸ்கின் பௌலிங்கில் ஷான்டோவிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தாா். அவா் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 113 ரன்கள் சோ்த்திருந்தாா்.
この記事は Dinamani Chennai の September 21, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の September 21, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது: ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்தார்; பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.
6 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) முதல் நவ.15 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திரத்தில் கடல் விமான சோதனை ஓட்டம்
ஆந்திரத்தில் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்ட கடல் விமானத்தின் சோதனை ஓட்டம்.
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிகர லாபம் உயர்வு
கடந்த செப்டம்பர் காலாண்டில் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.143.84 கோடியாக அதிகரித்துள்ளது.
காஸா போர்: மத்தியஸ்த முயற்சிகளைக் கைவிட கத்தார் முடிவு
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சிகளை தற்காலிகமாகக் கைவிட கத்தார் முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் சரிவு
கடந்த செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
டிரம்ப்புக்காக ஆயத்தமாகும் ஐரோப்பா!
உலகின் மிக சக்திவாய்ந்த பதவி என்று கூறப்படும் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்பவர்கள் எடுக்கும் முடிவுகள், சர்வதேச அளவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,213 கோடி டாலராக சரிவு
கடந்த 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 68,213 கோடி டாலராக சரிந்துள்ளது.
விதிகளை மீறி செயல்படும் ஸ்விகி, ஸொமாட்டோ: சிசிஐ விசாரணையில் கண்டுபிடிப்பு
உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விகி மற்றும் ஸொமாட்டோ விதிகளை மீறி, ஒரு சில உணவு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.