உ.பி.யில் மதரஸாக்களை மூடுவதற்கான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
Dinamani Chennai|November 06, 2024
மதரஸாக்களை மூட மாநில அரசை அறிவுறுத்தி அலாகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக உத்தர பிரதேச அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு இயற்றிய மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் என்றும் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
உ.பி.யில் மதரஸாக்களை மூடுவதற்கான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து

இதன் மூலம், உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் செயல்படும் 16,000 மதரஸாக்களில் பயின்றுவரும் 17 லட்சம் முஸ்லிம் மாணவ, மாணவிகளின் நலன் காக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சியின்போது 'உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம் 2004' என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் கீழ், மாநிலத்தில் செயல்பட்டு வந்த 16,000 மதரஸாக்களில் வழங்கப்பட்ட படிப்புகள் அங்கீகரிக்கப்பட்டன. அதன் மூலம், பல லட்சம் இஸ்லாமிய மாணவர்கள் மதரஸாக்களில் படித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த சட்டத்தின் அரசமைப்புச் சட்ட அங்கீகாரத்துக்கு எதிராகவும், மதரஸாக்களை கல்வித்துறையின்றி, சிறுபான்மை நலத்துறை நிர்வகிப்பதற்கு எதிராகவும் வழக்குரைஞர் அன்ஷுமன் சிங் ரத்தோர் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், 'உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' என்று உத்தரவிட்டது.

மேலும், 'இச் சட்டம் மதச்சார்பின்மை கொள்கையை மீறும் வகையில் அமைந்துள்ளது' என்று குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், அவற்றில் பயின்றுவரும் மாணவர்களை முறையான பள்ளிக் கல்வி முறைக்கு மாற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

この記事は Dinamani Chennai の November 06, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の November 06, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
லக்னௌ கோப்பை வெல்ல 200 சதவீதம் உழைப்பேன்
Dinamani Chennai

லக்னௌ கோப்பை வெல்ல 200 சதவீதம் உழைப்பேன்

புதிய கேப்டன் ரிஷப் பந்த்

time-read
1 min  |
January 21, 2025
ஏகனாபுரம் கிராம மக்களுடன் விஜய் சந்திப்பு
Dinamani Chennai

ஏகனாபுரம் கிராம மக்களுடன் விஜய் சந்திப்பு

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு

time-read
1 min  |
January 21, 2025
Dinamani Chennai

நடிகர் சைஃப் அலிகானை தாக்கிய நபரைக் காட்டிக்கொடுத்த 'தோள்பை'

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை அவர் உடைய வீட்டுக்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை, மூன்று நாள் தீவிர தேடுதலுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த தோள் பை அடையாளம் மற்றும் எண்ம பணப் பரிவர்த்தனை மூலம் போலீஸார் கைது செய்திருப்பது தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
January 21, 2025
Dinamani Chennai

திருமயம் அருகே சமூக ஆர்வலர் கொலை: 4 பேர் கைது

திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்து திங்கள்கிழமை திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

time-read
1 min  |
January 21, 2025
யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும்
Dinamani Chennai

யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும்

மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் இண்டி கூட்டணி மாநில முதல்வர்களுக்கும் கடிதம்

time-read
1 min  |
January 21, 2025
Dinamani Chennai

தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் விரைவில் தொடக்கம்

'தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் (சிஎம்எம்) விரைவில் தொடங்கப்படும்' என மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி திங்கள்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
January 21, 2025
Dinamani Chennai

காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு விவகாரம்; கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு தொடர்பான தமிழக அரசின் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

time-read
1 min  |
January 21, 2025
Dinamani Chennai

அயல்நாடுகளில் தமிழ்க் கல்வி

புலம்பெயர்தல் மனித இயல்பு. வரலாற்றுக் காலத்தில் அல்லது சங்க காலத்தில் ரோம், கிரீஸ், எகிப்து, சீனா, தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுடனான வணிகத் தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்கள், அகழ்வு ஆராய்ச்சிகள் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன.

time-read
2 分  |
January 21, 2025
சின்னர், ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
Dinamani Chennai

சின்னர், ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், உலகின் நம்பர் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் யானிக் சின்னர், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனர்.

time-read
1 min  |
January 21, 2025
வடலூர் வள்ளலார் கோயில் பெருவெளியில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்காலத் தடை
Dinamani Chennai

வடலூர் வள்ளலார் கோயில் பெருவெளியில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்காலத் தடை

உச்சநீதிமன்றம் உத்தரவு

time-read
1 min  |
January 21, 2025